அன்னை ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை குறிப்பிலிருந்து ஒரு சம்பவம்..
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், தனது மகளார் ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம், தமது பேரர்களான இமாம் ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு), இமாம் ஹுசைன் (ரலியல்லாஹு அன்ஹு) இருவரும் கொல்லப்படுவார்கள் என்று அறிவித்த போது, அன்னை ஃபாத்திமா நாயகி வீரிட்டு அழுது "எனதருமை தந்தையே! எல்லா நபிமார்களுக்கும், அல்லாஹ் ஒரு விஷேச துஆ கொடுத்துள்ளது போல தங்களுக்கும் கொடுத்திருப்பான் அல்லவா? அதை கொண்டு உங்களது பேரர்களை காப்பாற்றக்கூடாதா?" என்று கெஞ்சி கேட்டும், பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மறுத்து விட்டு கூறினார்கள்:
அதை என் உம்மத்துக்காக மறுமையில் கேட்க வைத்துள்ளேன். பேரப்பிள்ளைகளுக்காக கேட்க முடியாது என்று மறுத்து விடுகிறார்கள். தங்களின் குடும்பத்தில் நடக்கப்போகும், துயர சம்பவங்கள் தெரிந்திருந்தும் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கெஞ்சி கேட்டும், எல்லாவற்றையும் தியாகம் செய்தவர்களாக, அந்த "துஆ"வை நமக்காக பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
காருண்ய நபி, கருணையின் கடல் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நம் மீது எந்த அளவு, கருணையும், அன்பையும், வைத்திருக்கின்றார்கள்.
கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மீதும், அன்னவர்களின் குடும்பத்தினர் மீதும், ஸலவாத்துகளை அதிகம் அதிகமாக ஓதி வாருங்கள். இல்லாவிட்டால் நாம் நன்றி கெட்டவர்களாகி விடுவோம்.
“ ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்! ” யா அல்லாஹ்! எங்கள் எங்கள் அனைவரையும் ஹுப்பு ரஸுல் ஆகிய “ஆஷிக்கின்களின்” கூட்டத்தில் சேர்ப்பாயாக!
|