'சமநிலை சமுதாயம்' அக்டோபர் 2013 இதழில் வெளிவந்த கட்டுரை.
ஹஜ் என்றால் "நாடுதல்",உம்ரா என்றால் "தரிசித்தல்"என்று பொருள்.அதாவது இறைவனை நாடிச்சென்று,ஆரம்பமாக அவனது ஆலயத்தை தரிசிப்பது.முடிவில் அவனையே தரிசிப்பது என்பது அதன் உள்ளார்ந்த தத்துவம்.
நாநிலத்தின் நடுநாயகமாக அமைந்த புனித மக்காவின் ஆதி இறை இல்லம்,உலகின் முதல் இறையில்லம் கஅபாவை நாடி பயணப்படுவதற்குப் பெயர்தான் ஹஜ் யாத்திரை."மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட இல்லங்களில் முதன்மையானது,நிச்சயமாக பக்காவில் இருப்பதுதான்.அது மிகுந்த பாக்கியமுள்ளதாகவும்,உலக மக்களுக்கு நேரான வழி அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது"என்கிறது திருக்குர்ஆன்.1
மக்கா என்பது ஊர் பெயர். பக்கா என்பது மஸ்ஜிதுல் ஹராம் எனும் புனித கஅபா ஆலயம் அமைந்த இடம்.{தப்ஸீர் தப்ரீ}கண்ணியமிக்க கஅபா ஆலயம் இறைவன் கூறுவது போல் பரக்கத்தும்,அருள்வளமும் நிறைந்த புனித இடம்.பரக்கத்-அபிவிருத்தி என்றால்,பொருள் நிறைவாக இருப்பது மட்டுமன்று; குறைந்ததில் நிறைந்த பலன் இருப்பதுமாகும்.இவ்விதம் இறைவனால் பரக்கத் செய்யப்பட்ட மக்கா, ஒரு நீரற்ற பாலைவனப் பிரதேசமாகும்.அது விளைச்சல் பூமியோ,பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழில் நகரமோ அல்ல.
அங்கு புனித கஅபா ஆலயத்தை தரிசிப்பதற்காக உலகின் எல்லா திக்கு திசைகளிலிருந்தும் தினமும் இலட்சக்கணக்கில் மக்கள் வந்து கூடுவர்.ஹஜ் காலங்களில் 40 இலட்சம் வரை பக்தர்கள் கூடுகிறார்கள்.அவர்கள் அனைவருக்கும் போதுமான உணவுப் பொருட்களும் அத்தியாவசியப் பண்டங்களும் அங்கு தாராளமாக கிடைக்கின்றன.
அன்று முதல் இன்று வரை உள்ளூர்வாசிகளுக்கும்,வெளியூர்வாசிகளுக்கும் உணவுப் பற்றாகுறையோ,பஞ்சமோ ஏற்பட்டதே இல்லை.அத்தியாவசியப் பண்டங்கள் தீர்ந்து விட்டது என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை.அது வேளாண்மை நிலமன்று ;ஆனால்,உலகில் விளையும் அத்தனை காய்கனிகளும் அங்கு கிடைக்கும்.அது தொழிற்சாலைகள் நிறைந்த நகரமல்ல ; ஆனால்,புதிதாக கண்டு பிடிக்கப்படும் நவீன சாதனங்கள்,கருவிகள் அனைத்தும் அங்குள்ள சந்தையில் கிடைக்கும்.இதுதான் பரக்கத் எனும் அபிவிருத்தியின் வெளிப்பாடு.நம்மிடமிருந்து அவர்களுக்கு ஆகாரமாக ஒவ்வொரு வகையான கனி வர்க்கமும் {உற்பத்தி சாதனங்களும்} கொண்டு வந்து அங்கு குவிக்கப்படுகிறது என்கிறது குர்ஆன்.8
அங்கு வருவோர் ஒவ்வொருவரும் குறைந்தது ஓர் ஆடு,வசதி உள்ள ஒவ்வொருவரும் நூறு ஆடு வரை- இலட்சக்கணக்கானோர் குர்பானி கொடுக்கிறார்கள்.இதற்கு தேவையான இலட்சக்கணக்கான ஆடுகள் அங்கு கிடைக்கிறது.வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை.இந்த இரகசியம் பரக்கத்தின் அதிசயம். இதல்லாமல் ஆன்மீக அபிவிருத்தியை ஈட்டித்தரும் பரக்கத்திற்கு அங்கு பஞ்சமே இல்லை.பெரும் பாக்கியங்களும்,அபரிமிதமான நற்கூலியையும் பெற்றுத்தரும் ஹஜ்,உம்ரா அங்கு மட்டுமே செய்யப்படுகிற இறைவழிபாடாகும். உலகில் வேறு எங்கும் இதை நிறைவேற்ற இயலாது.
மற்ற இடங்களில் நிறைவேற்றப்படும் தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளை புனிதமிகு கஅபாவில் நிறைவேற்றும்போது அதற்குப்பகரமாக இலட்சக்கணக்கில் நன்மைகள் கிடைக்கிறது.ஒருவன் தனது வீட்டில் தொழுதால் ஒரு நன்மையும்,தனது மஹல்லா மஸ்ஜிதில் தொழுதால் 25 நன்மைகளும், ஜும்ஆ நடைபெறும் மஸ்ஜித் ஜாமியில் 500 நன்மைகளும்,பைத்துல் முகத்தஸில் 1000 நன்மைகளும்,என்னுடைய மதீனாப்பள்ளியில் {மஸ்ஜிதுன் நபவியில்}50,000 நன்மைகளும்,மஸ்ஜிதுல் ஹராம் –கஅபாவில் தொழுதால் ஒரு இலட்சம் நன்மைகளும் கிடைக்கும் என்ப
|