- (கீழை ஜஹாங்கீர் அரூஸி)
சுகாதார சீர்கேடு மிகைத்திருக்கும் இன்றைய காலத்தில் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் கடினமான ஒன்றாகிவிட்டது.
இயற்கையான வாழ்க்கை நடைமுறை மாற்றப்பட்டு காலையில் கண் விழிப்பதிலிருந்து இரவு கண் மூடும் வரை எல்லாமே ரசாயனம் கலந்த இயந்திர வாழ்க்கைதான்.
மாசுபட்டிருக்கும் சுற்றுபுற சூழல் ஒருபக்கம் நமது ஆரோக்கியத்தை சிதைத்துக் கொண்டிருக்கும் வேளையில்,நம்மை நாமாகவே அழித்துக் கொண்டிருப்பது மற்றொரு வகையாகிவிட்டது.
புகை பிடித்தல்,பான் குட்கா சாப்பிடுதல்,மது அருந்துதல்,போன்ற ஈனச்செயல்களால் நாளொருமேனி,பொழுதொரு வண்ணம் மனிதன் தம்முடைய ஆரோக்கியத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறான்.
இதனுடைய விளைவு,நுரையீரல் புற்று உருவாகி வாழும் வரை நிரந்தர நோயாளியாகி விடுகிறான்.
ஒவ்வொரு மனிதரும் பாதுகாக்க வேண்டிய முக்கியமான உடல் உறுப்புகளில் நுரையீரலும் ஒன்று.அதை கடைசிவரை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு நான் படித்த சில பயனுள்ள தகவல்களைதான் இங்கே பதிவு செய்துள்ளேன்.
நுரையீரலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!
புகைப்பிடித்தலை நிறுத்த வேண்டும்.
அடிப்படையில் புகைப்பிடித்தல் என்பது நமது நுரையீரலுக்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடிய விஷயமாகும்.
புகைப்பிடித்தலுக்கு உள்ளாக்கும் போது நமது நுரையீரலுக்கு எவ்வித பாதுகாப்பும் கிடைப்பதில்லை. எந்த அளவிற்கு அதிகம் புகைக்கிறோமோ, அதே அளவிற்கு கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் புற்றுநோய் மற்றும் CஓPD தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
நாம் இருக்கும் இடத்தில் எவரேனும் புகைப்பிடித்து இருந்தாலோ அல்லது நமது அருகிலிருக்கும் மூன்றாவது நபர் புகைப்பிடித்தாலோ நமக்கு தீங்கு விளையும் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
சிகரெட் புகைப்பதை மட்டும் நிறுத்தினால் போதாது. மாரிஜூனா, சுருட்டுகள், குழாய் மூலம் புகைப்பிடித்தல், நமது நுரையீரலுக்கு அதே வழியில் தீங்கு விளைவிக்கும்.
சுத்தமான காற்றுக்காக போராட வேண்டும்.
உலகில் 155 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில் வசிக்கின்றனர்.
காற்று மாசுபாடு ஆஸ்துமா, CஓPD போன்ற நோய்களை மட்டும் தருவதில்லை மேலும் மக்களையும் கொல்கிறது. ஒழுங்கு குறைபாடுகளை எதிர்ப்பதன் மூலமும் சுகாதாரமான காற்றுக்கான விதிகளை ஆதரிப்பதன் மூலமும் நாம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
தனி நபராக நாம் செய்ய வேண்டியது யாதெனில் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவது, குப்பைகள் மரக்கட்டைகள் எரிப்பதை தவிர்ப்பது, வாகனங்கள் பயன்படுத்தலை குறைப்பது ஆகியவை ஆகும்.
அதிக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி, நுரையீரலை மட்டும் வலிமைப்படுத்துவதில்லை. அதையும் தாண்டி நமக்கு பல நன்மைகள் செய்கின்றது.
நுரையீரல் இதயம் மற்றும் தசைகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்குவதன் மூலம் இதயத்திற்கான சுவாசத்தை சிறந்த முறையில் பெற முடியும்.
நாள்பட்ட நுரையீரல் நோயால் தாக்கப்பட்டவர்க்கு உடற்பயிற்சி பல நன்மைகளை செய்கிறது. நுரையீரல் சிறப்புடன் செயலாற்ற நம்மால் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வது அவசியமாகும்.
குளிர்காற்று, ஆஸ்துமாவிற்கான அறிகுறிகளை தூண்டினால், அதனை வெதுவெதுப்பாக்க கழுத்துகுட்டையை (கழுத்தையும் தோளினையும் மறைக்கும் துணி) பயன்படுத்துதல் அவசியம் அல்லது முகத்தை மறைக்க வேண்டும்.
வீட்டின் உள்ளும் காற்றை மேம்படுத்த வேண்டும்.
|