Tamil Islamic Media ::: PRINT
கற்பனைகளும் இஸ்லாமும்

 


சில தினங்களுக்கு முன் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தேன்.
 
அது அபூதாவுத் என்ற ஒரு ஹதீஸ் புத்தகம்.
 
அது உலக இஸ்லாமிய சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஆறு புத்தகங்களுள் ஒன்று.
 
அதில் ஒழுக்கம் என்ற தலைப்பின் கீழ் வருக்கின்ற பாடம் தான் அன்றைய கரு.
 
அது ஒரு அற்புதமான ஹதீஸ்.
 
என் மாணவர்களை விட ஒரு கணம் ஆடிப்போனவன் நான் தான்.
 
ஏனெனில் என் ஆசான் பெருமானார் ஆயிற்றே. “ நிச்சயமாக நான் ஒரு ஆசிரியனாக அனுபப்பட்டுள்ளேன். ( நபிமொழி)
 
எத்துணை விசாலமான பொருளில் 1400 ஆண்டுகளுக்கு முன் பெருமானார் அவர்கள் பேசியுள்ளார்கள்.
 
அந்த ஹதீஸின் பொருள் இதோ
 
“ நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் நான் பெருமானார் அவர்களோடு வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்தேன். திடீரென நாங்கள் இருந்த வாகனம் குதிக்க ஆரம்பித்தது.
 
அப்பொழுது அவர் கூறினார் : இதை கெடுக்கிற அந்த ஷைத்தான் அழிந்து போகட்டும் என்று . அதற்கு பெருமானார் அவர்கள் பதிலளித்தார்கள் “நீங்கள் அவ்வாறு கூற வேண்டாம்,ஏனெனில் நீங்கள் அவ்வாறு கூறினால் அவனுக்கு பெருமை வந்து ஒரு வீட்டை போன்று ஆகிவிடுகிறான் இன்னும் சொல்லுகிறான் என்னுடைய சக்தியால் தான் இது நடந்துள்ளது.
மாறாக நீங்கள் சொல்லுங்கள் “ பிஸ்மில்லாஹ்” வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று இவ்வாறு நீங்கள் கூறினால்
அவன் மிக அற்பமான ஒரு பொருளாக ஆகிவிடுகிறான். அதுவும் எந்த அளவிற்கென்றால் ஒரு ஈ யைப்போன்று ஆகிவிடுகிறான்.”
 
 
இது தான் அன்று நடந்த ஹதீஸ், பொதுவாக பார்த்தால் பெருமானாரின் வாழ்வில் நடந்த எத்தணையோ சம்பவங்களில் இதுவும் ஒன்று இன்னும் கொஞ்சம் நெருங்கிப்பார்த்தால் தன் தோழர்களை பெருமானார் பண்படுத்திய வாழ்வியல் வழிகாட்டும் நெறி முறை.
 
இன்னும் கொஞ்சம் அதிமாக உற்று நோக்கினால் பிஸ்மில்லாஹ் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏனெனில், பிஸ்மில்லாஹ் என்கிற இந்த வார்த்தை இஸ்லாமியர்களின் வாழ்வோடும், வாழ்வியல் ஆதாரங்களோடும், அவர்களின் இரத்தத்திலும், இரத்த நாளத்திலும் உறைந்து கிடக்கிற ஒரு சொல் அது, அல்ல அல்ல அது சொல் அல்ல அது தான் ஒரு முஃமினின் வாழ்வு.
 
ஏனெனில் இந்த சமூகத்திற்கு பெருமானர் கூறினார்கள் “ பிஸ்மில்லாஹ் கூறி ஆரம்பிக்கப்படாத எந்த காரியமானாலும் அது முழுமை பெறாதது”. ஆக இது பிஸ்மில்லாஹ் குறித்து நபியவகளின் வழிகாட்டுதல் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
 
ஆனால் இதுவெல்லாம் தாண்டி இன்னும் சில செய்திகள் இந்த ஹதீஸில் மறைந்து கிடக்கின்றன. அது தான் மற்ற ஹதீஸ்களில் இல்லாத “ வீடு” “ஈ” போன்ற வார்த்தைகள். இவை என்ன? இது தான் காட்சிப்படுத்துதல் ( கற்பனை) என்ற Visualization பற்றியது .
 
தற்காலத்தில் மனவளம், மற்றும் மனோதத்துவம் போன்ற துறைகள் விரிந்திருக்கிற இன்றைய காலத்தில், அவை பற்றிய குர் ஆன் ஹதீஸ் பார்வைகளும் விரிவடைந்துள்ளன. இந்த ஹதீஸில் நபியவர்கள் தன் தோழர்களுக்கு சொன்ன தகவல் ஷைத்தானை நீங்கள் திட்டினால் ஒரு வீடு போன்று ஆகிவிடுவான்.
 
இந்த அரபியப்பாலைவனத்தில் பொதுவாக அவர்களின் தங்குமிடம் மரத்தின் நிழலோ அல்லது ஒரு கூடாரமோ தான். வீடு என்பதெல்லாம் பெரிய விஷயம் தான்.
 
ஆகையால், அது பெரிய விஷயம் என்பதை குறிப்பற்கான ஒரு குறியீடாக வீட்டை சொன்னார்கள். அது போலவே ஒரு சிறிய பொருள் என்று குறிப்பதற்கு ஈ, கொசு போன்றவற்றை உதாரணம் செல்வதை பரவலாக நாம் பார்கிறோம். உண்மையில் ஷைத்தான் ஒரு வீட்டை போன்று அல்லது ஒரு ஈ யைப்போன்று ஆகிவிடுவானா? என்றால் இல்லை, ஷைத்தான் அப்படித்தான் இருப்பான் அதை தான் அடுத்த ஹதீஸ் வசனம் மிக தெள

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.