Tamil Islamic Media ::: PRINT
குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!


ஆசிரியர்: ஹாஃபிழ், எம்.என். முஹம்மது புகாரீ
சமூக ஆர்வலர்

 


ا ب ت ث ... அலிஃப், பே, தே, ஸே

இந்த எழுத்துகள் பள்ளிக்குப் போய் ஆலிம்சாவிடம் ஓதியதையும் காலை மாலை மக்தப் பள்ளியையும் ஞாபகமூட்டுகிறதா?

அட வாப்பா… எழும்பி சுபுவு தொழுவுமா… தொழுவீட்டு பள்ளிக்கிப் போமா என்ற உம்மாமார்களின் குரல் பிள்ளையை எழுப்பிவிடும். தேயிலை குடித்து, வாடா கடித்து பிள்ளைகளை பள்ளிவாசல்தோறும் இயங்கிய மக்தப் பள்ளிக்கு அனுப்பியதையும் குர்ஆன் கல்வியுடன் தொடங்கியதையும், மாலை நேரம் ஸ்கூல் விட்டு வந்தவுடன் மீண்டும் குர்ஆன் ஓதுவதற்காக பள்ளிக்கு விரைவது. பின்னர் விளையாட்டு என அந்தக் காலத்தை சற்று மனக்கண்முன் கொண்டுவருவோம்.

 

டேய் எழும்புடா… ஸ்கூலுக்கு டைமாகிவிட்டது… சீக்கிரம் கிளம்பு என்று ஏழு அல்லது எட்டு மணிக்கு பிள்ளைகள் எழுப்பப்பட்டு, அது சோம்பல் முறித்து அரைகுறையாக ஆயத்தமாகி சுப்ஹும், குர்ஆன் ஓதலும், காலை துஆ, திக்ருகள் இல்லாத நிலையில் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பும் சிறார்களின் இந்தக் காலத்தையும் எண்ணிப்பார்ப்போம்.

ஸ்கூல் விட்டு மாலை வீடு வந்தும் வராமல், சீக்கிரம் ரெடியாகு… ட்யூஷனுக்குக் கிளம்பு… என கொண்டுவந்த பொதிமூட்டையை மீண்டும் சுமந்துகொண்டு ட்யூஷனுக்கு செல்லும் பரிதாபமான சூழல். இத்தகைய சூழலில் உருவாகும் நம் பிள்ளைகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? இப்படித்தான் இன்றைய இளம் பிஞ்சுகளின் காலைப்பொழுது அமைந்துள்ளது. இப்படித் தொடங்கும் காலைப் பொழுதில் எவ்வாறு ‘பரக்கத்’ எனும் அருள்வளம் இறங்கும்? இத்தகைய கல்வி முறையால் எவ்வாறு வாழ்க்கையில் வெற்றிபெற இயலும்? இத்தகைய சூழலில் குடும்பங்களில் எவ்வாறு அமைதி தவழும்? நோய் நொடியற்ற ஆரோக்கியமான வாழ்வு எவ்வாறு கிடைக்கும்? இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அதுவல்ல இக்கட்டுரையின் நோக்கம்.

கோளாறு எங்கே? அதை சரி செய்வது எவ்வாறு? மாற்று வழி என்ன? என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். இதைவிட சிறந்த வழிமுறைகளை உங்கள் கருத்துகளின் வாயிலாக பதிவு செய்யுங்கள். சிறந்த ஒழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவதே இதன் தீர்வாக இருக்க வேண்டும்.

1980களில் எனது மக்தப் கல்வியை காட்டுத் தைக்கா தெரு அரூஸிய்யா பள்ளியில் தொடங்கினேன். அப்போது அரபி எழுத்துகளையும், குர்ஆன் ஓதுவதற்கான பயிற்சியையும் அளித்தவர் பேட்டை ஹஸ்ரத் என்ற பெரியவர். எளிய முறையில் அழகிய விதத்தில் எங்களைப் பயிற்றுவித்தார். குர்ஆன் ஓதித் தரும்போதே அதில் வரும் வினைச் சொற்களை ‘ஸர்ஃப்’ எனப்படும் ‘ஃபஅல’ ‘ஃபஅலா’ ‘ஃபஅலூ’ வாய்ப்பாட்டை போதித்தார். இப்படித்தான் அன்றைய பள்ளிவாசல்களில் குர்ஆன் மக்தப் மதரஸாக்கள் சிறப்பான முறையில் உயிரோட்டத்துடன் இயங்கிவந்தன.

விளைவு அதிகாலை (ஸுப்ஹ்) வேளையிலும் அந்தி சாயும் (மஃக்ரிப்) வேளையிலும் இல்லங்கள்தோறும் இறைமறையின் இனிய ஓசையை செவியுறலாம். வாழ்க்கை முறையில் ‘பரக்கத்’ எனும் வளமும் செழிப்பும் பொங்கிய பொற்காலமது. காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இந்நிலை மாறி தொலைக்காட்சி பெட்டிகள், இண்டர்நெட், மொபைல் போன் ஆதிக்கமும் உலகியல் கல்வியின் முன்னுரிமையும் அளவுக்கதிகமாக வழங்கப்பட்டு, பிள்ளைகளிடம் குர்ஆன் மக்தப் கல்வி இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளப்பட்ட பரிதாப நிலை. இதனால் குடும்பங்களில் ஒரு விதமான மனஇறுக்கமும் அழுத்தமும் அதிகமாகி நோய்கள் பெருகியுள்ள காலமிது. வாழ்வியலில் ஏகப்பட்ட குளறுபடிகள்.

தனிநபர், குடும்பம், சமூகம் சார்ந்த ஒழுக்க விழுமியங்களின் ம

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.