Tamil Islamic Media ::: PRINT
தமிழரும் இசுலாமியரும்

உலகம் முழுமைக்கும் இந்திய நாட்டிலிருந்து சூரிய குலச் சோழரால் உப்பு மிளகு சந்தனம் மணிக்கற்கள் ஆடை போன்றவை வணிகப் பெருவழி, கடல்வழிகளிலும்; கொண்டுசெல்லவும் ஏற்றுமதியும் செய்யப்பட்டன. இதனைப் பழந்தமிழ்ப் பாடல் புறநாநூறு-66:


''நளியிறு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உறவோன் மருக !
களி இயல் யனைக் கரிகால் வளவ ! ...''

என; காற்றை வசப்படுத்திச் செலுத்தப்படும் நாவாய் ஒட்டுவதில் வல்ல கரிகாலின் முன்னோரின் மகதமும் வங்கமும் இருந்தன.

அரபு வணிகர்கள் வணிக மையங்களைப் 'பந்தர்'- கடைவீதி என அழைத்ததை; பத்.ப 6/5, 7/7, 8/4ல் காணலாம். பிறநாட்டு வணிகமையமாக செங்கடல் வணிகம் திகழ்ந்தது; அங்கும் நமது வணிகமே மேலோங்கியிருந்தது. யவனரால் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட Periplus of the Erythraei- நூல் எழுதியவரின் பெயர் இல்லை; தமிழ்நாட்டுடனான வணிகம் குறித்தது. கிரேக்கரும் ரோமரும் யவனர் எனக் குறிக்கப்பட்டனர். கி மு 1ஆம் நூ ஆ- ல் ரோமர் எகிப்தைக் கைப்பற்றினர். எகிப்தின் அலெக்சாண்றியத் துறைமுகம் வணிக மையமானது. எரிதிரைக்கடல் என்பதை Maris Erythaei எனக் குறிப்பிட்டனர். அரேபியருடனும் கடல்வழி வணிகமையங்களாக மகதமும் வங்கமும் இருந்ததன. இதனை முல்லைப்பாட்டு:

''நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல
பாடுஇமில் பனிக்கடல் பருகி வலன்ஏர்பு
கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி.. .''

என உலகம் முழுதும் வணிகத்தால் வளைக்கப்பட்ட நிலையில் ஆரியர் மற்றும் அலெக்சாந்தர்களின் வரவால் நம்நாட்டின் வணிகம் சீர்குழைந்தது. அதனை நீக்க நீள மேகவண்ண நிறம்கொண்ட தமிழரின் சூரிகுலச்சோழரின் அயல்நாட்டுத் தூதுவன்- வருணன்; அரேபியரின் படைத்துணை பெற அங்குச்சென்றதைக் குறிப்பிடுகிறது. அத்துடன் அரேபியரின் உடல் வலிமை, உடை, வழிபாட்டு முறை குறித்தும் குறிப்பிடுகிறது. இதனால் இசுலாமிய சகோதரர்களின் வழிபாட்டுமுறை எத்துனை தொன்மையானது என்பதை அறிகிறோம். ஆனால் இன்றுவரை அவர்களது வழிபாடு மற்றும் தொழுகை முறைகளை இசுலாமிய சகோதரர்களே அறியாமல் இருந்துள்ளனர் என்பதோடு தமிழரின் தொடர்பும் நம்பிக்கைகளும் எத்தகையதாக இருந்தன என்பதையும் காண்கிறோம்.
முல்லைபாட்டு:


''வேறுபல் பெரும்படை நாப்பன்; வேறுஓர்
நெடுங்காழ்க் கண்டம் கோலி; அகம்நேர்பு
குறுந்தொடி முன்கை கூந்தலம் சிறுபுறத்து
இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்
விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர்;
நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ
கையமை விளக்கம் நந்துதொரும் மாட்ட;
நெடுநா ஒள்மணி நிழத்திய நடுநாள்;
அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்
சிதர்வரல் அசைவளிக் கசைவந் தாங்கு;
துகில்முடித்துப் போர்த்த தூங்கல்; ஓங்குநடைப்
பெருமூ தாளர் ஏமம் சூழ;
பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்;
தொழுதுகாண் கையர் தோன்ற; வாழ்த்தி
'எறிநீர் வையகம் வெல்இய செல்வோய்நின்
குறுநீர்க் கன்னல் இனைத்து' என்றிசைப்ப;
மத்திகை வளைஇய மறித்துவீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்;
புலித்தொடர் விட்ட புனைமாண் நல்இல்
திருமணி விளக்கம் காட்டி திண்ஞாண்
எழினி வாங்கிய ஈர்அறைப் பள்ளியுள்
உடம்பின் உரைக்கும் உரையா நாவின்
படம்புகு மிலேச்சர் உழையர் ஆக.. .''

என அரேபியரின் படையைப் பெற சூரியகுல வேந்தன் அரேபியா சென்றதையும்; [பிறதகவலுடனான  முழுப்பாடல் இல்லை] சோழனது மனைவி தனது இல்லத்தில் அவனை நினைந்து வாடுவதையும் மிக அழகாக எடுத்துரைப்பதே முல்லைப்பாட்டு. அரேபப

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.