Tamil Islamic Media ::: PRINT
சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)

பெற்றோரிடம் பேசும் முறை குறித்து குர் ஆன்

( ஏன் பெற்றோர் குறித்தே தொடராக இங்கு எழுதப்படுகிறதே என்ற எண்ணம் உங்களிடம் ஏற்பட்டிருக்கலாம். சமீபகாலமாக தமிழ் முஸ்லிம்களிடன் பெற்றோர் குறித்த கவனக்குறைவு அதிகமாக உள்ளது. இன்னும் திருச்சி போன்ற பகுதிகளில் முஸ்லிம் முதியோர் இல்லங்கள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் இந்த சமூகம் செல்லுகிறதா? என்று தனி நபர்கள் தங்களை சுய பரிசோதனை செய்யத்தான் இந்த இறைமறைக்கண்ணாடி இனி அவர் தங்களை கண்ணாடியில் பார்த்தால் போதும். வல்ல இறைவன் சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதன் அடிப்படையில் நடைபோட உதவிசெய்வானாக, அது அல்லாததை விட்டும் பாதுகாப்பானாக. ஆமீன்)


வல்ல இறைவன் தன் திருமறையில் பெற்றோரிடம் பேசுகிற போது கவனிக்கப்பட வேண்டிய பண்பு குறித்து இப்படி எடுத்துரைக்கிறான்.


“ அவர்களிடம் கண்ணியமான முறையில் பேசுங்கள்” “ மேலும் பணிவுடனும், கருணையுடனும் அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்” ( குர் ஆன்: 17:23)


பெற்றோருடன் மரியாதையுடனும், அடக்கத்துடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களின் கண்ணியத்தில் குறைவு ஏற்படும் வகையில் சொல்லாலோ செயலாலோ நடந்துகொள்ள வேண்டும். ’ கெளலன் கரீமா” என்ற வார்த்தையை இறைவன் பயன்படுத்துகினறான். கரீமா என்பதற்கு சங்கையான, கண்ணியம் நிறைந்த வார்த்தையாகவும், மிக அடக்கத்தோடும் கூறுவது என்ற கருத்து உண்டு.


ஒரு முறை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். “ நரகத்துக்குச் செல்லாமல் சுவனத்துக்குள் நுழைய விரும்புகிறீரா?

அதற்கு இப்னு அப்பாஸ் அவர்கள்: ஆம் இறைவன் மீது ஆணையாக அந்நிலையை அடைய விரும்புகிறேன்.

இப்னு உமர் அவர்கள் கேட்டார்கள் :” உங்கள் பெற்றோர் உயிருடன் இருக்கின்றனரா? என்று

அதற்க்கு இப்னு அப்பாஸ் (ரலி) யின் பதில் : ஆம் என் தாய் உயிரோடு இருக்கிறார்.

இதை செவிமடுத்த இப்னு உமர் அவர்கள் கூறினார்கள் :

“ நீர் அவர்களுடன் மென்மையான முறையில் பேசுவீராக! அவருடைய அடிப்படை தேவைகளை கவனித்து முறையாக பூர்த்தி செய்வீராக. அவ்வாறு செய்தால் அவசியம் நீர் சுவனம் செல்லலாம்.ஆனால் ஒரு நிபந்தனை “ நீர் பெரும் பாவம் புரிந்திருக்கக்கூடாது”.

பணிவுடனும், கருணையுடனும் நடந்துகொள்ளுங்கள் என்பதன் பொருள் அவர்களின் உயர்ந்த அந்தஸ்து நம் மனதில் நிரம்பி வழியவேண்டும். நாம் என்னதான் பெரும் அதிகாரத்திலோ அல்லது செல்வசெழிப்பிலோ இருந்தாலும் அதை அவர்களிடம் வெளிப்படுத்தக்கூடாது.


நாம் அவர்கள் மூலமாக இந்த உலகிற்க்கு வந்தோம், அவர்கள் மூலமாகத்தான் நாம் பெற்றிருக்கும் அதிகாரம், செல்வம் நமக்கு கிடைத்தது.


( இந்த இடத்தில் ஒரு கருத்தை பதிவது மிகச்சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். இஸ்லாத்தை ஆழமாக கற்றறிந்த மேதைகள் கூறுவார்கள். உங்கள் பெற்றோர் உங்களிடம் ஒரு வேலையை கூறினால் (உ.தா) தாகத்திற்கு தண்ணீர் கேட்டர்கள் என்றால்.  நீங்கள் தான் தண்ணீர் எடுத்துவந்து தர வேண்டும், மாறாக, அதற்க்கு உங்கள் வேலையாட்களை ஏவுவதோ அல்லது உங்கள் குழந்தைகளை ஏவுவதோ கூடாது. அது உங்கள் மீது உள்ள கடமை, அதற்க்கு மாற்றமாக உங்கள் வேலையாட்களை ஏவி எடுத்து வந்தால் கடமை முடியும் ஆனால் முழுமைபெறாது இறைவன் அந்த முழுமையைத்தான் உங்கள் பெற்றோரின் விஷயத்தில் எதிர்பார்கிறான்).


 அவர்களிடன் அன்பு செலுத்துவதும் அவர்களை கருணையாக பார்ப்பதும் ஒரு மனிதனுக்கு ஈருலகிலும் நன்மையைக் கொண்டு வரக்கூடியது.


இது ஹ

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.