Tamil Islamic Media ::: PRINT
உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்

உடல் உறுப்புகளின் தானம் என்பது  உயிருடன் இருக்கும்போது செய்தல் மற்றும் இறந்தபின்  செய்தல் என்று இரு வகைப்படும்.

உயிருடன் இருக்கும் போது தானம் செய்தல்

உயிருடன் இருக்கும்போது சில உடல் உறுப்புகளை தானம் செய்ய நிபந்தனைகளுடன் இஸ்லாம் அனுமதியளிக்கிறது. இஸ்லாமிய கண்ணோட்டத்தில் உயிருடன் இருக்கும்போது தானம் செய்பவர்  தன்னுடைய உடலுக்கு முழு உரிமையாளர் ஆவார். ஒருவருடைய கண், காது, கை போன்ற உடல் உறுப்புகள் இன்னொருவரால் சிதைக்கப்படவோ அல்லது அகற்றப்படவோ செய்தால் அதற்கான ஷரியத் சட்டத்தை நாம் அறிந்தே வைத்துள்ளோம். கண்ணுக்கு கண் — பல்லுக்கு பல் அல்லது இழப்பீட்டுத் தொகை பெற்றுக்கொள்ளுதல் அல்லது அந்த நபரை முழுமையாக மன்னித்து விடுதல் போன்ற விருப்பத் தேர்வை எடுத்துக்கொள்ள பாதிக்கப்பட்டவருக்கு இஸ்லாம் முழு அனுமதி வழங்கியுள்ளது. இதிலிருந்து உயிருடன் இருக்கும்போது  முழு உடலுக்கும் அவரே உரிமையாளர் என்பதை இஸ்லாம் சுட்டிக்காட்டுகிறது. எனவே ஒருவர் உயிருடன் இருக்கும்போது தன்னுடைய சில உடல் உறுப்புகளை தானம் செய்வதில்  தடை இல்லை என்றாலும் சில உறுப்புகளை தானம் செய்ய ஷரியத் அனுமதிக்கவில்லை என்பதையும்  விளங்கிக்கொள்ள வேண்டும்.

உயிருடன் இருக்கும்போது உறுப்புகளை தானம் செய்பவர் பேண வேண்டிய விதிமுறைகள்

உறுப்புகளை தானம் செய்பவரின் உறுப்புகள் அகற்றப்படும்போது அவருடைய  உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய  எந்த செயலையும் அனுமதிக்கமுடியாது. எனவே இருதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற உறுப்புகளை தானம் செய்ய இயலாது. இதுபோன்ற மரணம் ஏற்படுதல் தொடர்பான எந்த உறுப்புகளையும் தானம் செய்ய அனுமதியில்லை. அதைப்போன்று ஒருவர் இரத்ததானம் செய்யும்போது குறிப்பிட்ட அளவைவிட அதிகப்படியான இரத்தத்தை தானம் செய்வது கூடாது. பலகீனமான நிலையில் உள்ள ஒருவர் இரத்ததானம் செய்வதின் மூலமோ, உறுப்புகளை தானமாக கொடுப்பதன்மூலமோ அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனில் அவர் தானம் கொடுப்பது தடை செய்யப்பட்டதாகும்.

وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ
நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள்.      (அந்நிஸா : 29)


நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-
وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ، عَذَّبَهُ اللهُ بِهِ فِي نَارِ جَهَنَّمَ……
…எவர் தன்னை எந்த பொருளைக்கொண்டு கொலை செய்துகொள்கிறாரோ அந்த பொருளைக்கொண்டே நரக நெருப்பில் அல்லாஹ்  அவரை  வேதனை செய்வான்.                                                       (முஸ்லிம்)


நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-
مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ، فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ، فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ، فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا

மலையின் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பா

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.