(கீழை நிஷா புதல்வன்)
முதலில் நாகரீகம் பழகிக்கொள்!
ஆம்,இதுதான் தற்போது மனிதர்களுக்கு மத்தியில் தாரக மந்திரமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.நாகரீகம் என்ற வார்த்தை ஏதோ 10அல்லது20 ஆண்டுகளுக்கிடையில் தான் மனிதர்களின் வாழ்வியல் புழக்கத்தில் வந்திருக்குமோ?என்ற எண்ணம் நிச்சயமாக இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏற்பட்டிருக்கும்.
காரணம் அந்த அளவுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் இன்றைய இளைஞர்,இளஞிகள் நாகரீகம் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர்.
இங்கே ஒரு விஷயத்தை ஆழமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.நாகரீகம் என்ற வார்த்தை 1434 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ்வின் இறைத்தூதரான அண்ணல் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் மக்கமா நகரத்தில் சொல்லாலும் செயலாலும் அறிமுகப் படுத்தப்பட்ட ஒரு விஷயமாகும்.
அப்படியானால்,நாகரீகம் என்ற வார்த்தையை மனிதகுல விரோதி என்று தலைப்பிட்டது ஏன்?என்ற கேள்வி எல்லோருக்கும் எழும்?
முஹம்மது நபி(ஸல்)அவர்கள் காண்பித்து தந்த நாகரீகம் மனிதனுக்கு அழகையும்,ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியது.தற்போது இன்றைய காலத்து இளைஞர்கள் பின்பற்றும் நாகரீகமென்பது அசிங்கத்தையும்,அழிவையும் கொடுக்கக் கூடியதாகும்.இதனால் தான் இன்றைய இளைஞர்கள் விரும்பும் நாகரீகத்தை மனிதகுல விரோதி என்று தலைப்பிட்டுள்ளேன்.
உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் ஆடை வரைக்கும் நபிகள்(ஸல்)அவர்கள் காட்டித்தந்த நாகரீகம் இப்போது நம்மிடையே இருக்கிறதா?
நபிகள்(ஸல்)அவர்கள் சொன்னார்கள் ஆண்கள் அவர்களுக்குரிய ஆடைகளையும்,பெண்கள் அவர்களுக்குரிய ஆடைகளையும் அணியுங்கள்.ஒரு ஆண் பெண்ணைப்போன்றோ,அல்லது ஒரு பெண் ஆணைப்போன்றோ உடை அணிவதை வெறுக்கிறேன் என்றார்கள்.
ஹஜ்ரத் அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்; பெண்களின் ஆடைகளை அணிந்து கொள்ளும் ஆண்களையும்,ஆண்களின் ஆடைகளை அணிந்து கொள்ளும் பெண்களையும் நபி(ஸல்)அவர்கள் சபித்துள்ளார்கள்.(நூல்:அபூ தாவூது)
இன்றைய மக்களின் எண்ணவோட்டம் எப்படி இருக்கிறது?ஆண்கள் பெண்களைப் போன்று இறுக்கமாக உடை அணிந்து கொள்வதும்,காதில் கடுக்காய் போட்டுக்கொள்வதும்,கழுத்தில் செயின்,விரல்களில் தங்கமோதிரம்,கையில் பிரேஸ்லெட்,முகத்தில் மேக்கப் என்று பார்ப்பதற்கு பெண்ணைப்போலவே காட்சித்தரும் ஆண்கள் ஒரு பக்கமென்றால்,
பெண்கள் ஆண்களைப்போல இறுக்கமான ஜீன்ஸ்பேண்ட்,டீசர்ட் அணிந்து கொண்டு,ஆண்கள் அணியும் வாட்சை கையில் கட்டிக்கொள்வதும் தான் நாகரீகம் எனக்கருதுவது சரியா?
இன்றைய இளம்பெண்களின் ஆடை விஷயம் மிகவும் மோசமானதாகவே இருக்கிறது.
நபிகள்(ஸல்)அவர்கள் கற்றுத்தந்த 'பர்தா' என்னும் ஒழுக்கமுள்ள ஆடைகள் அணிந்து வந்த காலத்தில் பாலியல் பலாத்காரம் என்ற வார்த்தைக்கு உயிரோட்டம் கிடையாது!
ஆனால் நாகரீகம் என்ற பெயரால் அரைகுறை ஆடை அணிய ஆரம்பித்த பிறகு தான் ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு பொழுதும் ஏதாவதொரு இடத்தில் யாராவதொரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு சில நேரத்தில் காமுகர்களால் கொலையும் செய்யப்பட்டு விடுகிறாள்.
அரைகுறை ஆடை என்ற நாகரீகம் மனிதகுல விரோதியாகி விட்டதே!
நபிகள்(ஸல்)அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்;
இரு கூட்டத்தினர் நரகவாசிகளாக ஆவர்.அவர்களை நான் பார்த்ததில்லை.(பிற்காலத்தில் வருவர்)அதில் ஒரு கூட்டம்,ஆடைகள் திறந்து (அரைகுறை)நிர்வா |