|
|
இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக்கூடிய(அற்ப)இன்பத்தை தவிர வேறில்லை.(அல்குர்ஆன் 3:185)
ஒருவனது நாக்கு சீர் பெறாதவரை உள்ளம் சீர் பெறாது;உள்ளம் சீர் பெறாதவரை அவனது ஈமான் சீர் பெறாது!(நபிமொழி)
நன்மைக்காக வழி வகுப்பவர் அதைச்செய்தவருக்கு கிடைக்கும் வெகுமதியை பெறுவார்!(நபிமொழி)
அமைதி இல்லாத சமாதான காலத்தைவிட போர்க்காலமே மேலானது.(பழமொழி)
மூளையில் அறிவை சேர்ப்பதைவிட இதயத்தை பண்படுத்தி வளர்ப்பது சிறந்தது.(பழமொழி)
ஆசை இருப்பவனிடம் ஆனந்தமும் அன்பும் தங்குவதில்லை.(பழமொழி)
கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும்,தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்.(பழமொழி)
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாத மனிதன் தன் திறமைகளை வெற்றியாக மாற்ற முடியாது.(பழமொழி)
வதந்தீ என்பது ஆயிரம் நாக்கு ஆயிரம் வாயுடன் கூடிய இரும்பின் குரல்.(பழமொழி)
ஆணவமும்,அகம்பாவமும் என்றாவது ஒரு நாள் நமக்கே எதிரியாக நிற்கும்.(பழமொழி)
உன்னுடைய மிக மோசமான எதிரியையோ,மிகச்சிறந்த நண்பனையோ உன்னிடத்திலேயே நீ காணலாம்.(பழமொழி)
உங்கள் (செயல்களுக்குரிய)நற்கூலிகளை நீங்கள் பூரணமாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான்.(அல்குர்ஆன் - 3:185) |
|