வரலாற்றுச்சிறப்பு மிக்க மஸ்ஜிதுல்குபாவையும்,அதை எம்பெருமானார்(ஸல்)அவர்கள் உருவாக்கிய விதத்தையும் தற்போதைய அதன் செழிப்பையும் ஆச்சரியக்குறியோடு யோசித்தவனாகவே மஸ்ஜிதுல்குபாவை விட்டு தெற்குப்பகுதி வழியாக வெளியேறினேன். வெளியேறியதும் நான் கண்ட காட்சியும் தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிவாசல்களில் கண்ட காட்சியின் அமைப்பும் ஒரேமாதிரியாக இருந்ததை நினைத்து ஆச்சரியப்பட்டேன்!!!!சுப்ஹானல்லாஹ்..........
பள்ளியின் தெற்குப்பகுதி வாசலிலிருந்த இரண்டு பக்கமும் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்யப்படும் மையவாடி அமைந்திருந்ததை கண்டதும் ஆச்சரியப்பட்டேன். காரணம் இதேபோன்ற அமைப்பில்தான் நமது தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிவாசல்களின் அமைப்பும் இருக்கிறது.மாஷா அல்லாஹ்.. எனதருமை சொந்தங்களே!இன்ஷா அல்லாஹ்...இனியொருமுறை நீங்கள் மதீனாசென்றால் கண்டிப்பாக மஸ்ஜிதுல்குபாவிற்கு போய் பள்ளியின் அமைப்பை நிதானமாக கவனியுங்கள். மஸ்ஜிதுல்குபாவின் தெற்குப்பகுதியில் இருந்து வெளிபுறத்தை பார்த்தால் நமது ஊரில் இருப்பதை போன்ற பிரம்மை ஏற்படும். தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் பழமைவாய்ந்த தொழுகைப்பள்ளிகளின் தோற்றங்கள் நபிகளாரின் காலத்து வாழ்க்கைச்சூழலை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.
நான் மஸ்ஜிதுல்குபா பள்ளியின் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்தவர்களின் ஜியாரத்தை முடித்துவிட்டு, பள்ளியின் வராண்டாவில் மதீனத்து மக்கள் தங்களது வீட்டிலேயே தயார் செய்யும் பிடிமாவு டப்பா ஒன்று வாங்கினேன்.அதன்சுவை மிகவும் அற்புதம். நமது ஊரில் தாய்மார்கள் அரிசிமாவு,முட்டை,நெய்,கருப்பட்டி இவற்றை கொண்டு பிடிமாவு செய்து தருவார்கள்.இவை உடலுக்கு வலிமையை கொடுக்கும் சிறந்த உணவாகும். இன்றைய காலத்தில் நமது பெண்கள் அதையெல்லாம் மறந்துவிட்டாலும்,மதீனத்து மக்கள் மறக்கவில்லை. அரிசிமாவு,பேரீத்தம்பழம்,சர்க்கரை,இவற்றால் பிடிமாவு செய்து அவர்களும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் அந்த சத்தான உணவை பறிமாறும் உணர்வுகளுக்கு கண்ணியம் செய்யும் வகையில்தான் நானும் வாங்கினேன். இந்த உணவை ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும்,மீண்டும் சாப்பிடத்தூண்டும் மாஷா அல்லாஹ்..
இப்போது மஸ்ஜிதுல்குபாவிலிருந்து மீண்டும் எம்பெருமானாரை நோக்கிய எனது பயணம் தொடர்கிறது... திங்கட்கிழமை மஸ்ஜிதுல்குபா வந்துசேர்ந்த (ஸல்)அவர்கள் ஐந்தாவது நாளான வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மதீனாவை நோக்கிய தமது பயணத்தை தொடர்ந்த நிகழ்வுகள் என் உள்ளத்தில் இன்ப ஊற்றாய் பெருக்கெடுக்கிறது. நபி(ஸல்)அவர்கள் மஸ்ஜிதுல்குபாவிலிருந்து மதீனாவை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும்போதுஸாலிம் இப்னு அவ்ஃப் கிளையினர் வசிக்கும் இடம் வந்தபோது ஜுமுஆ” தொழுகைக்கான நேரமும் ஆகிவிட்டதால் ‘பத்னுல் வாதி’ என்ற இடத்தில் அனைவரையும் ஒன்று சேர்த்து நபி (ஸல்) ஜுமுஆ தொழுகை நடத்தினார்கள். (அந்த இடத்தில் இன்று பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது) மொத்தம் நூறு நபர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது) ஜுமுஆ தொழுகைக்குப் பின்பு நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு, மதீனாவிற்குள் நுழைந்தார்கள்.
இதற்கு முன் ‘யத்(ஸ்)ரிப்’ என்று பெயர் கூறப்பட்டு வந்த அந்த நகரம் அன்றிலிருந்து ‘மதீனத்துர் ரஸுல்’ - இறைத்தூதரின் பட்டணம்- என்று அழைக்கப்பட்டது. இதையே சுருக்கமாக இன்று ‘அல்-மதீனா’ என்று கூறப்படுகிறது. நபி (ஸல்) மதீனாவிற்குள் நுழைந்த அந்நாள் அம்மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிறைந்த நாளாக இருந |