உயிருக்குயிரான உயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறித்து நபித்தோழர் சஹல் இப்னு அம்ரு அவர்கள் அறிவிக்கிறார்கள் “ நபியவர்கள் ஒரு ஒட்டகத்தை கடந்து சென்றார்கள் அந்த ஒட்டகத்தின் வயிறு முதுகுடன் ஒட்டியிருந்தது அதை பார்த்தவுடன் கூறினார்கள் ” இந்த வாயில்லா பிராணிகளின் விஷயத்தில் அல்லாஹுவை பயந்து கொள்ளுங்கள் அதில் பிரயாணம் செய்தால நல்ல முறையில் பயணம் செய்யுங்கள் அதை (சாப்பிடுவதற்கு ) விட்டால் நல்ல முறையில் விட்டுவிடுங்கள்.
நபியவர்களின் வாழ்வியல் நடைமுறையை இந்த ஹதீஸ் படம்பிடித்துகாட்டுகிறது. தம் தோழர்களோடு நபியவர்கள் வாழுங்கால் தன் தோழர்களிடன் எதை எல்லாம் கண்டார்களோ அவற்றை உடனே சீர்திருத்தினார்கள். இது போன்ற எண்ணிலடங்கா வரலாற்றுக்குறிப்புகளை நம்மால் ஹதீஸுகளில் காணமுடிகிறது. அந்த குறிப்புகள் வெறும் தோழர்களுக்கு சொல்லப்பட்ட உபதேசங்கள் மட்டுமல்ல மாறாக உலக நாள் முடியும் வரை ஏற்பட இருக்கும் அனைத்து மனித குலத்திற்கும் வழிகாட்டியாக ஆகும்.
தான் வாழ்ந்த சமூகத்தின் எல்லா சிறிய பெரிய விஷயஙகளிலும் நபியவர்கள் கவனம் செலுத்தினார்கள் என்பதை இந்த ஹதீஸ் மூலம் அறியமுடிகிறது. இன்னும் இதை ஒவ்வொரு இஸ்லாமியரின் பொறுப்பாக நபியவர்கள் ஆக்கிச்சென்றார்கள்.
ஏதோ நானும் உலகில் வாழ்கிறேன், எங்கு என்ன நடந்தால் எனக்கு என்ன? என்று சும்மா இருந்து விட்டு நம்கென்று வரும் போது மட்டும் ஆக ஓகோ என்று அலறுவது முட்டாள் தனமன்றோ.
ஒரு மெலிந்த ஒட்டகத்தை பார்த்துவிட்டு, மறுமை நாள் வரும் வரை வாழவிருக்கும் இஸ்லாமிய சமூகத்திற்கு நபியவர்கள் பாடம் நடத்தினார்கள். வாயில்லா ஜீவன்களான விலங்கினத்தின் விஷத்தில் எச்சரித்தார்கள். அவைகளுக்கு ஸ்டேஷன்களுக்கோ அல்லது கோர்டிற்க்கோ போகத்தெரியது, ஆனால் அவை இறைசந்திதானத்தில் முறையிடும். ஆகையால், இறைவனை பயந்து கொள்ளுங்கள் என கூறினார்கள்.
இது போன்று எல்லா பொருட்களையும் அதன் முறைப்படி பயன்படுத்த மார்க்கம் ஏவியுள்ளது. ஒரு பொருளை அதற்க்கு தகுதியில்லாத இடத்தில் கொண்டுபோய் வைப்பது அநீதம் ஆகும் என்று மார்க்கம் கூறுகிறது. இக்கூற்று அறிவுக்கும் பொருந்தும்.
இந்த ஹதீஸுக்கு விளக்கம் கொடுக்கும் அல்லாமா தீபி அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“ இந்த ஹதீஸ் எச்சரிக்கை செய்கிறது, நாம் பயன்படுத்து கால்நடைகளுக்கு நாம் உணவு கொடுக்கவேண்டும். நாம் அதை எந்த நோக்கத்திற்கு பயன்படுத்துவதாக இருந்தாலும் சரியே.
நாம் அதை பிரயாணத்திற்கு பயன்படுத்த நாடினால் அது நன்றாக நடக்க சக்தி பெறும் அளவிற்கு அவைகளுக்கு உணவளிக்கவேண்டும். நாம் அந்த விலங்குகளை சாப்பிடுவதற்கு பயன்படுத்த நாடினால், அவை நன்றாக சாப்பிட்டு கொழுக்கிற அளவிற்கு நாம் விட்டுவிட வேண்டும்.
தப்ரானி இன்னும் ஹாக்கிம் உடைய அறிவிப்பில் மஆத் பின் அனஸ் அவர்களின் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. அந்த ஹதீஸிலும் இதே கருத்தை பிரதிபலிக்கிறது.
” நீங்கள் கால் நடைகள் மீது பிரயாணம் செய்தால் மிக அழகிய முறையில் செய்யுங்கள். பிரயாணம் முடிந்துவிட்டால் அதில் இருந்து இறங்கிவிடுங்கள். கடைவீதிகளிலும், சாலைகளிலும் நீஙக்ள் பேச்சுவதற்க்காக அமரும் நாற்கலிகளாக அவற்றை ஆக்கிவிடவேண்டாம்”. இது நாம் இன்று பயன்படுத்தும் வாகனங்களுக்கும் பொருந்தும்.
எச்செயல் செய்தாலும் ஒரு முஸ்லிம் அதை முறையாக பயன்படுத்துவான் என்பதை. சுமார் 1400 ஆண்டுகளுக்க
|