Tamil Islamic Media ::: PRINT
உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

இந்த சந்தேகம் நம்மில் யாருக்காவது வந்ததுண்டா?அவ்வாறு வருமாயின் அதற்கு பதில்,நிச்சயமாக இல்லை என்பதுதான்.  உபதேசம் என்பது  இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் பொது உடைமையே அன்றி உலமாக்களின் தனி உடைமை அல்ல.  உபதேசம் செய்வது  மார்க்க அறிஞர்கள் மீது மட்டும்தான் கடமை மற்ற முஸ்லிம்கள் மீது அதைக்கேட்பது மட்டும் தான் கடமை என நினைப்பது பெரும் தவறு.மார்க்க அறிஞர்களின் உபதேசத்தை எப்போது நாம் செவிமடுத்துவிட்டோமோ அதை பிற முஸ்லிம்களுக்கு  எத்திவைப்பது நம் அனைவரின் மீதும் கடமையாகிவிடுகிறது.குறிப்பாக நம் மனைவி நம் பிள்ளைகள் நம் உறவினர் அனைவருக்கும் எத்திவைக்க வேண்டும்.இப்படி தான் மார்க்கம் வளர்ந்தது.

மார்க்கமே உபதேசம்தான்.என நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள்  அருளினார்கள்.அல்லாஹ்வின் தூதரே யாருக்காக(உபதேசம்  செய்யவேண்டும்?)என நாங்கள் வினவினோம்.அல்லாஹ்விற்காக மேலும்அவனின் வேதத்திற்காக மேலும் அவனின் தூதருக்காக மேலும் முஸ்லிம் சமுதாயத்திற்காக மேலும்  அனைவருக்காகவும்.என நபி(ஸல்)அவர்கள் பதிலளித்தார்கள்.(அறிவிப்பாளர்அபூருகைய்யா,நூல்முஸ்லிம்)

என்னைப் பற்றி ஒரு வசனமாக இருந்தாலும்(பிறருக்கு)எத்திவைத்து விடுங்கள்.என கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.(புகாரி)   குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் அடிப்படைக் கடமைகளைக் கூட கல்லாமலிருப்பது இம்மார்க்கத்தையே தகர்ப்பதற்குச் சமம். எனவே அல்லாஹ்வின் வேதத்தையும் அவனின் தூதரின் பொன்மொழியையும் அனைத்து முஸ்லிம்களும் கற்றுப் பிற முஸ்லிம்களுக்கும்  கற்பிக்க வேண்டியது கட்டாயக் கடமை.   கற்றதையும் செவியுற்றதையும் பிறருக்குக் கூறும்முன்:

படித்தவை மற்றும்  செவிமடுத்தவை இவற்றின்  நம்பகத் தன்மையை முதலில் நன்கு தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.ஏனெனில் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் மாற்றப்பட்ட  சட்டங்கள்  சில உண்டு. அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப முதலில்  ஒன்றையும் பிறகு ஒன்றையும் நபி(ஸல்)சொல்லியுள்ளார்கள். மேலும் செய்து காண்பித்துள்ளார்கள்.ஆதலால்(மாறியவை,மாற்றியவை)இரண்டையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.மேலும் தம்மை அதற்குத் தகுதியுடையவராக முதலில் தயாராக்கிக்கொள்ள  வேண்டும். தன்குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும்  உபதேசம் செய்யும்முன் தம் வாழ்வில் முதலில் அதை அமல் செய்ய உறுதி ஏற்க வேண்டும்.தான் செய்யாததை பிறருக்கு உபதேசிப்பது நம்மை நரகில் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை.இவ்வாறு செய்வது  பனூ இஸ்ராயீல்களின் தன்மையாகும். நீங்களோ வேதத்தைப் படிப்பவர்களாக இருக்கும் நிலையில் உங்களை மறந்துவிட்டு மக்களுக்கு மட்டும் நல்லவற்றைக் கொண்டு ஏவுகின்றீர்களா?நீங்கள் விளங்கமாட்டீர்களா?(அல்பகரா-44) என பனூ இஸ்ராயீல்களை அல்லாஹ் எச்சரிக்கை செய்தான்.அவர்கள் அதை  பொற்படுத்தவில்லை.     எனவே பேரழிவிற்கு ஆளானார்கள்.

இன்று நம் சமுதாயத்திலும் பலர் தாங்கள் செய்யாமல் பிறருக்கு மட்டும் ஏவுகின்ற  நிலையைக்  காண்கின்றோம்.அல்லாஹ் ஏவியவற்றையும் தடுத்தவற்றையும் புட்டு புட்டு வைப்பார்கள்.பல  மேடைகளில் சாதனை உரை நிகழ்த்துவார்கள்.ஆனால் பெண்வீட்டாரிடம் கைக்கூலியைக் கமுக்கமாக வாங்கியிருப்பார்கள்.ஊருக்கே உபதேசம் செய்வார்கள்.ஆனால் சுப்ஹு நேரத்தில் பள்ளிவாசல் பக்கம்கூட தலை  காட்டமாட்டார்கள். ஐவேளை தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் தொழாமல் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானவர்கள்,அடுத்தவருக்கு உபதேசம் செய்த

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.