Tamil Islamic Media ::: PRINT
360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )

 தர்மத்தின் முக்கியத்துவம் பற்றியும், இறைவனை தியானிப்பது பற்றியும் இறைத்தூதர் சொல்லும் பல்வேறு அறிவிப்புகளில் இரண்டை மட்டும் தலைப்பு தொடர்பாக நாம் பார்ப்போம்!


முதல் ஹதீஸ்


"மனிதனுடைய உடலில் 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) உள்ளன.(அவை சரியாக இயங்குவதால், அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு...) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூட்டுக்காகவும் தர்மம் செய்ய வேண்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  உடனே நபித்தோழர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! இது யாருக்குச் சாத்தியமாகும்?' என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "பள்ளிவாசலில் எச்சிலைக் கண்டால் அதை மூடி விடுவதும், பாதையில் கிடக்கும் (கல், முள் போன்ற) பொருளை அகற்றுவதும் (தர்மம்) ஆகும். இது உனக்கு முடியவில்லை என்றால், லுஹா தொழுகையின் இரண்டு ரக்அத்துக்கள் உனக்குப் போதுமானது" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: அஹ்மத், ஹதீஸ் எண் - 21959


இரண்டாம் ஹதீஸ்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

"ஒரு விஷயம் (சொல்கிறேன் கேள்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப் பட்டுள்ளனர். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவுக்கு அல்லாஹ்வை (தக்பீர் கூறி)பெருமைபடுத்தி, அல்லாஹ்வை (தஹ்மீத் கூறி) புகழ்ந்து, 'அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை' என்று (தவ்ஹீத்) கூறி, அல்லாஹ்வை (தஸ்பீஹ் கூறி) துதித்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு (இஸ்திக்ஃபார்) கோரி, மக்களின் நடைபாதையில் கிடந்த ஒரு கல்லையோ, முள்ளையோ, எலும்பையோ அகற்றி, (மக்களிடம்) நல்லதை ஏவி-தீயதை தடுத்தாரோ... அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திய நிலையிலேயே நடமாடுகிறார்".

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல் - முஸ்லிம், ஹதீஸ் எண் - 1833


இந்த இரு அறிவிப்பிலும்... சொல்லப்பட்டு இருக்கும்... தர்மம், இறைசிந்தனை, தியானம், தொழுகை பற்றிய கருத்து, தமது உடலை சீரும் சிறப்புமாக இயங்க வைக்கும் இறைவனுக்கு நன்றிக்கடன் பட்டுள்ள முஸ்லிம்கள் தம் வாழ்வில் பின்பற்றுவதற்கு மிகவும் முக்கியமானது.


அதேநேரம்... இது ஒரு புறமிருக்க, இதே அறிவிப்புகளில், இன்னொரு மிக முக்கிய அம்சம் குறித்து மட்டும் இப்பதிவில் கவனிப்போம்..! அது....


//மனிதனுடைய உடலில் 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) உள்ளன.//

//ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளனர்.//


இதெப்படி சாத்தியம்..?
ஏழாம் நூற்றாண்டின் ஓர் எழுதப்படிக்கத் தெரியாத மனிதர், அதுவும், அக்காலத்தில் மருத்துவ - அறிவியல் வளர்ச்சி அடைந்திராத ஒரு சூழலில் வாழ்ந்த ஒரு மனிதர், போகிற போக்கில் இப்படி ஒரு மருத்துவ அறிவியல் உண்மையை, இக்காலத்திய மருத்துவ பட்டப்படிப்புபடித்தவர் கூறுவது போல எப்படி இவ்வளவு துல்லியமாக கூற முடிகிறது..?


நான் இப்பதிவில் படிப்போரை சிந்திக்க வேண்டக்கூடிய விஷயம் இதுதான்.  நிச்சயமாக, இது அந்த அத்தனை எலும்புகளையும் எண்ணி தேவைக்கேற்ப படைத்த அந்த ஏக இறைவனின்... இறைச்செய்தியின் வெளிப்பாடாக மட்டுமே இருக்க முடியும்..! வேறு சாத்தியக்கூறு இல்லை..!


குர்ஆன் மட்டுமே வேத வெளிப்பாடு அல்ல என்றும், முஹம்மத் நபி ஸல்... அவர்கள் இஸ்லாமிய மார்க்கமாக என்னவெல்லாம் சொன்னார்களோ-செய்தார்களோ-அங்கீகரித்தார்களோ அவையனைத்துமே இறைவாக்காக இறைவனிடம் இருந்து நபிக்கு வந்த இறைச்செய்தி(வஹீ)தான்... என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது..!


எனவே, அப்படியான ஒரு துல்லி

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.