ஒரு முறை நாயகம் (ஸல்) அவர்கள் இப்லீஸிடம் "என் உம்மத்தில் உனக்கு விரோதியாக இருப்பவர்கள் எத்தனைபேர்கள் என்று கேட்டார்கள். அதற்கு இப்லீஸ் உமது உம்மத்தில் 15 பேர் என் விரோதிகள் என்று கூறினான்"... அவைகள்;
1, ஒ...முஹம்மதே நீர் ஒருவர்,
2, நீதியான அரசன்,
3, பணிவு, தாழ்மையுள்ள சீமான்,
4, உண்மையுரைக்கும் வியாபாரி,
5, உள்ளச்சமுள்ள ஆலிம்,
6, பிறருக்கு நல்லுபதேசம் செய்யும் இறைபக்தர்,
7, தவ்பா செய்து அதிலேயே நிலையாக இருப்பவர்,
8, ஹாராமான காரியங்களை செய்யாமல் பேணி நடக்கும் நற்குண சீலர்,
9, எந்த நேரமும் ஒலுவுடன் சுத்தமாக இருப்பவர்,
10, ஜனங்களுடைய நற்றன்மையுடன் பழகுபவர்,
11, ஜனங்களுக்குப் பிரயோஜனம் செய்பவர்,
12, திருக்குர் ஆனை மனனம் செய்து, அதனை எப்பொழுதும் ஒதிக் கொண்டிருப்பவர்,
13, அதிகமாக (ஸதக்கா) தர்மம் கொடுக்கும் படியான முஃமின்,
14, நடுநிசியில் மனிதர்களெல்லாம் தூங்கும்சமயம், நித்திரை செய்யாதிருந்து இறைவனை வணங்குபவர்,
15, இரக்கச் சித்தமுள்ள முஃமின்,
அடுத்து நாயகம் (ஸல்) அவர்கள் என் உம்மத்தில் உனக்கு நேசர்களாக இருப்பவர்கள் யார்? என்று கேட்டார்கள். அதற்கு இப்லீஸ்,
1, அநியாயம் செய்கின்ற அரசன்,
2, தற்பெருமைக்கார சீமான்,
3, மோசடி செய்யும் வியாபாரி,
4, விலை ஏறுவதை எதிபார்த்து உணவு தானியத்தை சேர்த்து வைத்திருப்பவன்,
5, கள் குடிகாரனும், கஞ்சத்தனக்காரனும்,
6, கொலைகாரன்,
7, வட்டி வாங்குபவன், வட்டியையுண்பவன், 8, அனாதைகளது பொருளைச் சாப்பிடுபவன்,
9, விபச்சாரம் செய்யும் ஆண்கள், பெண்கள்,
10, அநீதத்திற்கு அடிபணியும் அறிஞன்,
11, ஜகாத்தைக் கொடுக்காதிருப்பவர்,
12, அதிக பேராசையுடையவர், ஆகிய இவர்கள் என் சகோதரர்ளும், தோழர்களுமாக இருக்கிறார்கள் என்று கூறினான்..
"நிச்சயமாக என்னுடைய அடியார்கள் மீது உனக்கு(ஷைத்தான்) எவ்வித அதிகாரமுமில்லை; (ஆனால்)வழி கேடர்களான உன்னைப் பின்பற்றியவர்களைத் தவிர்த்து."
--அல்குர்ஆன்.
தங்களது ஈமான் என்னும் மார்க்க விசுவாசத்தில் அந்தரங்க சுத்தியாகவும், அல்லாஹுதஆலாவைத் தவிர்த்து மற்றெதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருப்பவர்களான நல்லடியார்களின் இருதயத்தில் வழிகெடுக்கும் விஷயத்தில் இப்லீக்கு எவ்வித அதிகாரமுமில்லை. ஆனால் இப்லீஸைப் பின்பற்றுபவர்களான வழிகேடர்களது இருதயங்களில் தான் அவன் அதிகாரம் செலுத்த முடியும்... |