பிறை பார்த்தால் என்ன செய்ய வேண்டும்?
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறை பார்த்தவுடன் என்ன செய்யவேண்டும் என்று அழகிய வழிமுறையை கண்பித்துள்ளார்கள், முதல் பிறையை பார்த்தவுடன் கீழ்கண்ட து ஆவை ஓதக்கற்றுக்கொடுத்தார்கள்
பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை முடித்துக்கொள்ளுங்கள் (ஹதீஸ்)
பிறையைக் கண்டதும் ஓதும் துஆ
اللهم أهله علينا بالأمن و الإيمان و السلامة و الإسلام ربي و ربك الله هلال رشد و خير
அல்லாஹும்ம அஹில்லஹூ அலைனா பில் அம்னி வல் ஈமான் வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம் ரப்பி வ ரப்புக்கல்லாஹ் ஹிலாலு ருஸ்தின் வ ஹைர்.
அல்லாஹ்! இந்த பிறையை அபிவிருத்து உள்ளதாகவும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் கொண்டு தரக் கூடியதாகவும் வெளியாக்கி வை! (பிறையே!) எனது ரப்பும், உனது ரப்பும்அல்லாஹ் தான்! நேர்வழிக்கும் நல்லதற்க்கும் வழிவகுக்கும் பிறையாக ஆக்கிவைப்பாயாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
- ஹஸனீ
|