எச்சரிக்கை: இந்தக் கட்டுரை படிப்பதற்கு, பகிர்ந்துகொள்வதற்கு மட்டுமல்ல. அமல் படுத்துடுவதற்கு. இன்றே... இப்போதே...
ஆரம்ப காலங்களின் இஸ்லாத்தை வேறோடு அழிக்க அதன் எதிரிகள் முனைன்த போதெல்லாம் ஸஹாபாக்கள் தங்களது வேர்வையினாலும் இரத்தத்தினாலும் அதனை காத்து இன்று நம் வரை அதைக் கொண்டு வன்திருக்கிறார்கள்.
எதிரிகளை அவர்களைப் போன்றே ஆயுதங்களை ஏந்தி எதிர்த்தனர். இறையுதவி, பெருமானார் (ஸல்) அவர்களின் தலைமை, மற்றும் ஈமானின் உறுதியின் உதவியால் மனதில் எந்த வித அச்சமுமின்றி போர்க்களத்தில் குதித்தனர். உலக வரலாற்றில் ஈடியிணையற்ற வெற்றிகளை குவித்தனர். இஸ்லாத்தின் நெறிகளை எந்த நேரத்திலும், கழுத்திற்கு கத்தி வந்த நேரத்திலும் அவர்கள் மீறியதில்லை.
இன்றைய நிலை:
இன்றும் இஸ்லாத்தை இந்த மண்ணை விட்டு அகற்ற, முஸ்லீம்களை அழிக்க நினைக்கும் எதிரிகள். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் போர்க்களமும் ஆயுதமும். இன்றை போர்க்களம் மீடியா. ஆயுதங்கள்: டி.வி., இன்டெர்நெட், இத்யாதிகள்...
ஆனால் நமது ஆயுதங்களின் இலக்கு எதிரிகளை நோக்கியல்ல... நம்மைநோக்கியே இருக்கின்றது.. நாம் நம்மிடையே சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றோம்.
இன்று மீடியாக்கள் போட்டிபொட்டுக் கொண்டு முஸ்லீம்களை மோசமானவர்களாக சித்திரித்துக் கொண்டிருக்கின்றன. நாம் நமது நிலைமையை இஸ்லாத்தின் கண்ணியத்தை எடுத்துச் சொல்ல இப்போதும் தவறினால் ...... நாளை அல்லாஹ்வின் முன்னால் என்ன பதில் சொல்லப் போகிறோம்.
சகோதரர்களே காலம் வேகமாம கரைந்துக் கொண்டிருக்கின்றது. எழுதும் திறமையுடனும், சிந்தனைத்திறமையுடனும் நமது சகோதரர்கள் அநேகம் பேர்களை இன்டெர்நெட்டில் காண்கின்றேன். ஆனால் வருத்தத்திற்குறிய விசயம் அவர்களின் இலக்கு நமது மற்ற முஸ்லீம் சகோதர்களே... கொள்கையின் பெயரால்... இயக்கத்தின் பெயரால்.. இன்னும் பிற பெயர்களால்..
ஒரு தாழ்மையான வேண்டுகோள்... பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்காக வடித்த கண்ணீரின் பெயரால், தாயிஃப் மற்றும் உஹதில் சிந்திய இரத்தத்தின் பெயரால்; ஸஹாபாக்கள் செய்த தியாகங்களின் பெயரால்; இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலாவில் சிந்திய இரத்ததின் பெயரால்.....
ஒரு 3 மாதத்திற்காகவது நமது இலக்கை சரியான பாதையில் செலுத்த உறுதிமொழி எடுப்போம்.
1. இந்த காலத்தில் எந்த ஒரு முஸ்லீமைப் பற்றியும் தவறாக எந்த பதிவும் எந்த மீடியாவிலும் செய்ய மாட்டேன். 2. இஸ்லாத்திற்கு எதிராக எந்த ஒரு மீடியாவிலும் ஒரு கருத்து பதிவு செய்யப்பட்டிருந்தால் அதனை மறுத்து எனது கருத்தை இஸ்லத்தின் கண்ணியத்தோடு, அழகிய முறையில் பதிவு செய்வேன். 3. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் இந்த துஆவைச் செய்வேன்.
'யா அல்லாஹ் சத்தியத்தை சத்தியமாக அறிந்து அதன் அமல் செய்ய தவ்ஃபீக் அளிப்பாயாக! அசத்தியத்தை அசத்தியமாக அறிந்து அதனை விட்டும் வேகுதூரம் விலகியிருக்கச் செய்வாயாக.!'
முழூ மூச்சோடு ஈடுபடுவோம். இன்ஷா அல்லாஹ் நம்மால் நிச்சயம் முடியும். வரக்கூடிய 3 மாதங்களில் இதனைச் செய்து காட்டுவோம்.
அல்லாஹ் நாடினால் உடம்பில் உயிர் இருக்கும் வரை இதனை செய்வோம்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
|