நபியின் மீது பிரியம்
உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களில் ஒருவரிடம் அவர் தம் பெற்றோர் இன்னும் குழந்தைகள் இன்னும் மக்கள் அனைவரையும் விட நான் ( நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிரியத்திற்குரியவராக ஆகாதவரை உங்களில் ஒருவர் உண்மையான முஃமினாக முடியாது
இந்த ஹதீஸில் நபியின் மீது ஒரு முஃமினுடைய பிரியம் எப்படி இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு முஃமினுடைய ஈமான் முழுமையானது என்பதற்கு அடையாளமே அல்லாஹ் இன்னும் அவன் தூதர் மீது அவர் கொள்ளும் பிரியம் வைத்தே நிர்ணயம் ஆகும், சிலர் குறிப்பிடும் போது அல்லாஹ்வின் தூதர் மீது பிரியம் என்பது அவர்களின் வழிப்படி நடப்பது தான் அவர்கள் மேல் வைக்கிற தனிப்பட்ட பிரியம் என்பதெல்லாம் இல்லை என்ற ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர்.
இந்த ஹதீஸின் அடிப்படையில் நேரடியாக நபி மீது கொள்ளும் பிரியம் என்பதாகவே அர்த்தம் கொள்ளப்படும். இதற்கு சிறந்த உதாரணம் நபித்தோழர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்வில் நடைப்பெற்ற ஒரு சம்பவம் ஒரு முறை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து இந்த உலகத்தில் என் நப்ஸை தவிர உள்ள எல்லா பொருட்களையும் விட நீங்கள் எனக்கு உவப்பானவர்கள் என்று கூறினார்கள் அதற்கு நபியின் பதில் இவ்வாறு இருந்தது உமரே உங்களில் ஒருவருடைய ஈமான் பரிபூரணமாக ஆகாது அவர் தன் நப்ஸைவிட என் மீது பிரியம் கொள்ளாத வரை என்று கூறினார்கள்
ஆகையால் தான் நபி அவர்கள் இந்த ஹதீஸில் உதாரணம் காட்டும் போது, இந்த உலகில் ஒரு மனிதன் இயற்கையாக பிரியப்படும் நபர்களை சுட்டிக்காட்டினார்கள் மகன் பெற்றோர் என்று இதை விளக்க இன்னொரு வசனம் மிகப்பொறுத்தமானதாக இருக்கும்
நபியே நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை
ஆகையால் உண்மையாக நபியின் மீது பிரியம் வைக்ககூடியவர்களாக நம்மையும் நம் சந்ததிகளையும் உலக முஸ்லிம்களையும் உண்மை முஃமின்களாக ஆக்குவானாக ஆமீன்
No articles in this category... |