மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
அல்லாஹ்வின் திருப்பெயரால்
மனம் திறந்த மடல்
காரியங்களில் சிறந்தது நடுத்தரமாக செயல்படுவது என்ற ஹதீஸுக் கேற்ப ஆத்திரத்தோடும் அனுதாபத்தோடும் பார்க்காமல் நடுநிலையோடு பல முறை படித்து பாருங்கள்
எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய ஹஸ்ரத் உலக மக்கள் அனைவாpன் அறிமுகத்தையும் தேடும் மீடியா வேல்டு புகழ் பி,ஜே, அவா;களுக்கு தங்களின் பிரியத்திற்குரிய தொண்;டன் S.. ரபீவுத்தீன் மதுக்கூர் உடைய அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் தங்களின் நீண்ட நாளைய மாணவன் என்பது தாங்கள் அறிந்ததே. தங்களின் பேச்சுத்திறமை எழுத்துத்திறமை ஆகியவற்றின் வசீகர தன்மையால் கவரப்பட்டேன். ஆணித்தரமாக (பித்அத்) எனும் அனாச்சாரங்களையும் மூடப்பழக்கங்களையும் எதிர்த்த போது உங்கள் மீது நான் கொண்ட அன்பு பன்மடங்காக பெருகியது.
தாங்கள் சொல்வது தான் உண்மை மற்ற ஹஜரத் மார்கள் எல்லாம் பொய்யர்கள் என்று எண்ணி உங்களின் பேச்சையும் எழுத்தையும் யாதொரு யோசனையும் இன்றி அப்படியே பின்பற்றி நடந்தேன். தாங்கள் பித்அத் களை சரமாரியாக எதிர்த்து முஸ்லிம்களை விழிப்படையச் செய்த அதை வேளை இஸ்லாமியர்கள் மனநிறைவோடும் ஒற்றுமை உணர்வோடும் ஏற்று வழி நடந்து கொண்டிருக்கும் மத்ஹபுகளையும் அதன் இமாம்களின் வழி காட்டுதலையும் குறை கண்டீர்கள். கடுமையாக விமர்சனம் செய்தீர்கள்.
தக்லீது செய்வது (மத்ஹபுகளுடைய இமாம்களை பின்பற்றுவது) கூடாது என்றும் தனி மனிதர்களை பின்பற்றுவது கூடாது என்றும் குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று கர்ஜித்து கர்ஜனை செய்து வந்த உங்களை பின்பற்றினேன். தங்களின் பழைய மற்றும் புதிய பிரச்சார சட்ட விளக்க வெளியீடுகளான அந்நாஜத், புரட்சி மின்னல், அல்ஜன்னத், அல்முபீன் முஸ்லிம் பெண்மனி போன்ற பத்திரிக்கைகளின் வழிகாட்டுதலை வேதவாக்காக கருதி ஏற்றுக்கொண்டு வழி நடந்தேன்.
உங்கள் மீது எனக்கு இருந்து வந்த அபார நம்பிக்கையினால் தாங்கள் அவ்வப்போது வெளியிட்டு வந்த நடை முறைக்கு மாற்றமான புதிய புரட்சிகரமான கருத்துக்களை குர்ஆன் ஹதீஸோடு ஒப்பிட்டு பார்க்கவில்லை.
அத்தஹிய்யாத்து இருப்பில் விரலை ஆட்டிக்கொண்டே இருக்கச் சொன்னீர்கள் நானும் தௌஹீத் சகோதரர்களும் வழிப்பட்டோம். சில காலத்திற்குப் பின் அந்த ஹதீஸ் ளயீஃப் (பலகீனமானது) எனவே ஆட்டிக்கொண்டே இருக்காதீர்களள் என்று வாபஸ் வாங்னீர்கள் அப்பொழுதும் வழிப்பட்டோம்.
(i) பேண்டை கரண்டைக்காலுக்கு கீழே அணியலாம்
(ii) குh;ஆனை தொழுகையில் பார்த்து ஓதலாம்
(iii) ஜகாத்தை வருடா வருடம் கொடுக்க ஆதாரம் இல்லை
(எ) களா தொழுகை என்ற ஒன்றே கிடையாது
(எi) மையத்தின் கண்ணை நோண்டலாம் (கண் தானம்)
(எii) கிட்னியை தானம் செய்யலாம்
அவசியப்பட்டால் பன்றியின் ஈரலை பயன்படுத்தலாம்.
பிறந்த குழந்தையின் காதில் பாங்கு சொல்லக்கூடாது என்பன போன்ற பற்பல நபி வழி நல்ல கருத்துக்களை தாங்கள் எங்களுக்கு சொன்ன போது ஆதாரத்தை அலட்சியப்படுத்தி விட்டு உங்களை தக்லீது செய்தோம்.
ஹஜ்ரத் என்றால் கல், ஹஸ்ரத் என்றால் கைசேதம் என்று பொருள் எனவே நபித் தோழர்களை (உயர்திரு) என்று சொன்னால் புரியக்கூடியதாக இருக்கிறது என்றீர்கள் இதையும் உயர்வாக தான் கருதினோம்.
ரமழான் நோன்பு மற்றும்; பொருநாளையும் முஸ்லிம் களின் வழக்கப்படி அந்தந்த பகுதியில் பிறை பார்த்து அமல் செய்து வந்தேன். இதையெல்லாம் பிறை ஆய்வுக்குழு என்ற பெயரில் உலக மகா உண்மையாளர்களான PJ யும் காமலுத்தீன் மதனி அப்துல் காதிர்மதனி யும் ஹாமித் பக்ரீ யும் ஒன்று கூடி உலக முழுவதும் ஒறே பிறை தான் என்று (அல்ஜன்னத் -நவம்பா; 99) ல் பத்வா கொடுத்தீர்கள் தக்லீது செய்தோம்.
ஆனால் திடிரென அந்தர்பல்டியாக உலகமெல்லாம் ஒரே பிறை என்பது கூடாது (அல்முபீன் -ஜனவாரி 2000) நம் ஊரில் பார்க்கும் பிறை கொண்டு தான் அமல் செய்ய வேண்டும் காரணம் பிறை பார்த்து நோன்பு வையுங்கள் பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்று திர்மிதியில் நாம் சொன்ன ஹதிஸுக்கு அடுத்தே வருகிறது அதை நாம் கவனிக்காமல் பத்வா கொடுத்து விட்டோம் என்றும் தவறு நடந்து விட்டது என்று வாபஸ் வாங்கினீர்கள்.
ஏனோ எப்பொழுதும் போல் தவறு செய்து விட்டதாக பிறை விஷயத்தில் தாங்கள் மழுப்புவதை என்னால் நம்ப முடியவில்லை. தாங்கள்; அடிக்கடி கூறுவீர்களே...
என் தௌஹீது சகோதரர்கள் கண் மூடித்தனமாக எங்களை பின்பற்ற மாட்டார்கள் என்று அதை செயல்படுத்த முடிவு செய்து உண்மையிலேயே குர்ஆன் ஹதீஸை ஆய்வு செய்யத் துவங்கினேன் விளைவுPJ- யின் பேச்சிலும் எழுத்திலும் பாக்டீரியாக்கள் எனும் விஷக் கிருமிகள் ஒழிந்திருப்பதை புரிந்து கொண்டேன்.
ஆய்வு செய்ததில் எனக்கு கிடைத்த சில தெளிவுகள்!
பேண்டை கரண்டை காலுக்கு கீழே அணியலாம் என்று (அல்ஜன்னத்- ஜூன் 95, பக்கம் -8)பத்வா கொடுத்து விட்டு (அல்ஜன்னத் ஜூன் 99)ல் கரண்டை காலுக்கு கீழே ஆடை அணிந்தவர்கள் நரகம் புகுவார்கள் (புகாரி) என்று புரட்டுகின்றீர்கள். 95-ல் கிடைக்காத ஹதீஸ் 99-ல் கிடைத்து விட்டதோ??
களா தொழுகை கிடையாது (அல்ஜன்னத் ஆகஸ்ட் -95 பக்கம்-43) என்று நபி வழியில் நடக்கும் தாங்கள் ஃபத்வா கொடுத்தீர்கள். ஆனால் ஒரு பிரயாணத்தில் சூரியன் உதயம் வரை உரங்கி விட்ட நாயகமும் (ஸல்) தோழர்களும் ஃபஜ்ரை பாங்குடன் சேர்த்து களா செய்தார்கள் என்று அபூதாவூது ஹதீஸ் எண் 436- லும் புகாரீபாகம் 1 பாடம் -38 பக்கம் 471 ஹதீஸ் எண் 598-ல் நபி (ஸல்) அவர்கள் களா தொழுதார்கள் என்றும் வருகிறதே இதில் PJ - யின் வழி நபி வழியா? அல்லது புகாரீ, அபூதாவூது ன் வழி நபி வழியா? தௌஹீது சகோதரர்களின் சிந்தனைக்கு?
பிறந்த குழந்தையின் காதில் பாங்கு சொல்ல ஸஹீஹான ஹதீஸ் இல்லை என (அல்ஜன்னத் ஜூன் 95, பக்கம் -8) குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.
ஆனால் சுனனுத் திர்மிதி அடிக்கடி நீங்கள் ஆதாரம் காட்டும் ஹதீஸ் கிரந்தம் பாகம் -1 பக்கம் -278 குழந்தையின் காதில் பாங்கு சொல்லும் பாடம் என்றே தலைப்பிட்டு பாத்திமா (ரலி) ஹசன்(ரலி) யை பெற்று எடுத்த போது நபி (ஸல்) அவர்கள் குழந்தை ஹஸன் காதில் தொழுகைக்கு பாங்கு சொல்லுவதை போன்று சொன்னார்கள் என்ற ஹதீஸை குறிப்பிட்டு திர்மதி இமாம் அவர்களே அதை ஸஹீஹான ஹதீஸ் என்றும் குறிப்பிடுகின்றார்கள்.
காலமெல்லாம் நடை முறையில் இருந்து வந்த ஒரு ஸஹீஹான ஹதீஸை முழு பூசணியை சோற்றில் அமுக்குவதைப் போல அமுக்கி விட்டு முஸ்லிம் களை சேற்றில் தள்ளப்பார்க்கிறீர்களே ஹல்ரத்!
!குர்ஆனை தொழுகையில் பார்த்து ஓதலாம் என்று (அல்ஜன்னத்-ஆகஸ்ட் 95) பத்வா கொடுத்தீர்கள் அதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் கேட்டு (தௌஹீத் சகோதரர்கள் ஆ.N. ஈஸா (அல்;ஜன்னத்-அக்டோபர் 95- பக்கம் 15) P.S. அப்துல் காதர் (அல்ஜன்னத்; அக்டோபர் 95- பக்கம் 16) மஹ்மூது பின் இம்ரான் (பிப்ரவரி p -96)எழுதிய போது நீங்கள் கடைசி வரை குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தை காட்டாமல் வாதத்திறமையால் வாயடைக்கச் செய்தீர்கள்.
ஹஜ்ரத் என்று நபித்தோழர்களுக்கு சொல்வதை தடுத்து உயர்திரு.. என்று சொல்லச் சொல்ல நீங்கள் (அல்ஜன்னத் மே 91 பக்கம் 22) நானும் தௌஹீது சகோதர்களும் உங்களை ஹஜ்ரத் என்று அழைத்த போது தடுக்க வில்லையே ஏன்?
ஹஜ்ரத் என்றால் கல் எனவே ஹல்ரத் என்ற அசல் வார்த்தையைச் சொல்லி என்னை மற்றும் நபித்தோழர்களை அழைக்கலாம் என்றாவது சொல்லி இருக்கலாமே அப்படியும் இன்றி உயர்திரு என்று திரும்பியதிலிருந்து நபித்தோழர்களை தங்களை போல் வேறு யாராலும் இழிவு படுத்த முடியாது என்பதை உணர்ந்தேன்.
பிறை விஷயம் பற்றி காயல்பட்டிணத்தில் தாங்கள் பேசும் போதும் திர்மிதியில் வருவதாக நாம் முன்பு கூறிய ஹதீஸுக்கு ( உலகமெல்லாம் ஒரே பிறை) அடுத்தே (ஊருக்கு ஒரு பிறை ) என்ற வருகிறது நாம் கவனிக்கவில்லை என்று உளருகிறீர்கள்....
வெட்கமில்லை உங்களுக்கு? நபிவழி என்ற பெயரில் பொய்யாகவே மொழிந்து தள்ளுகிறீர்களே.... பிறை விஷயமாகத்தான் ஹிஜ்ரீ 200-ல் வாழ்ந்த இமாம் புகாரீ (ரஹ்) தனது ஸஹீஹுல் புகாரீ பாகம் 2 பக்கம் 583 ஹதீஸ் எண் 1906-1907-1909 புட்டு புட்டு வைக்கிறாரே அடடே பார்க்கவில்லையா?
ஆமாம் அது என்ன எதற்கெடுத்தாலும் ஹதீஸுக்கே ஓடுகிறீர்கள் உங்கள் கொள்கைப்படி புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, இப்னு மாஜா, நஸாயி, திர்மதி எல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உள்ளவை அல்லவே.
நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடை முறையில் இருந்தால் தானே பின்பற்றுவீர்கள் அப்படியானால் நீங்கள் குர்ஆனில் இருந்து தானே ஆதாரம் காட்ட வேண்டும். ஏன் குர்ஆனில் எதுவும் தில்லு முல்லு செய்ய முடியாது என்பதாலா?
உங்கள் கொள்கைக்கு ஓத்து வந்தால் ளயீபான ஹதீஸை ஸஹீஹ் என்பது உங்கள் கொள்கைக்கு முறன்பட்டால் ஸஹீஹான ஹதீஸை ளயீப் என்பது உங்கள் அசுத்தமான கொள்கைக்கு ஆதாரமாக இருக்ககூடிய ஹதீஸ்களை காட்டி இளைஞர்களை மூலைச் சலவை செய்வது ஆஹா பலே தலைவா.
இது என்ன ஹதீஸ் கிடைக்காத காலமா? யாரேனும் சகோதரர்கள் உங்கள் கருத்துக்கு ஆட்சேபித்து ஹதீஸ் ஆதாரம் காட்டினால் இமாம்களுடைய (இஜ்திஹாது) ஆய்வில் தவறு ஏற்படுவதில்லையா?அது போல் தான் எனக்கும் என்று சம்மந்தமில்லாமல் இருமாப்போடு கூறுகிறீர்கள். இப்பொழுது விளக்கமாக நூல் வடிவில் இருக்கும் ஹதீஸ் கிரந்தங்கனள படித்து விளங்கி கூறுவதிலேயே தாங்களுக்கு தவறு வருவதை நினைத்து வியப்படைகிறேன். உங்களை இமாம் என்றும் தௌஹீது சகோதரர்களை முகல்லிதுகள் என்றும், அந்நஜாத், புரட்சி மின்னல், அல்ஜன்னத், அல்முபீன், முஸ்லிம் பெண்மணி போன்ற பத்திரிக்கைகளை இஸ்லாமிய ஷரீஅத் சட்ட கிரந்தங்கள் என்றும் சொல்வதின் மூலம் உங்களுக்கு பெருமையா?
குர்ஆன் ஹதீஸ் வழியில் நடக்கக்கூடியவர்களை முஸ்லிம்கள் என்று தான் குர்ஆனும் ஹதீஸும் அடையாளம் காட்டுகிறது. ஆனால் தாங்களோ குர்ஆன் ஹதீஸை காட்டி எங்களை தௌஹீதுவாதிகள், நஜாத் காரர்கள், ஆட்டிகள், குழப்பவாதிகள், என்றும் மக்கள் மத்தியில் பேச வைத்து விட்டீர்கள் உங்களுக்கு ஒரு முகமூடி உண்டு அது என்னவென்று நான் புரிந்து கொண்டேன்.
எனவே அறிவிழந்து உங்களை தக்லீது செய்வதை விட வார்த்தையில் சுத்தமான தக்வாவிலும் அந்தஸ்திலும் உயர்வான, குர்ஆன் ஹதீஸ் கலையின் ஆய்வில் நன்கு தேர்ச்சியான ஹிஜ்ரீ முதல் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த, ஸஹாபாக்கள் பலரை நேரில் கண்ட நான்கு இமாம்களில் ஒருவரை பின்பற்றுவது ஏற்றம் என குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நான் கருதுகிறேன். திருகுர்ஆனும் ஹதீஸும் இமாம்களை தக்லீது செய்ய வலியுருத்தும் ஆதாரங்களை பார்க்க.
(i) யாஅல்லாஹ் எங்களுக்கு நேரிய ஹிதாயத் உடைய பாதையை காட்டுவாயாக நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அந்த நல் அடியார்களின் பாதையை காட்டுவாயாக சூரத்துல் பாத்திஹா வசனம் 5-6
(ii) மேலும் பார்க்க சூரத்துல் முல்க் வசனம் 10
(iii) மேலும் பார்க்க சூரத்து அண்ணிஸா வசனம் 59
(iஎ) மேலும் பார்க்க ஸஹீஹுல் புகாரீ பாகம் 2 பக்கம் 146 ஹதீஸ் எண் ----4
PJ.யின் வழி என்ற இருட்டிலிருந்து 4 இமாம்களின் ஒரு வரை தக்லீது செய்வதே உண்மையான நபி வழி என்ற வெளிச்சத்தை அல்லாஹ் எனக்கு காட்டி விட்டான். யாஅல்லாஹ் என்னை போன்றே தௌஹீது சகோதரர்களுக்கும் ஹிதாயத்தை காட்டுவாயாக எங்களை முஸ்லிம் களாக வாழ வைத்து முஸ்லிம்களாக மரணிக்கச் செய்து முஸ்லிம்களாகவே எழுப்புவாயாக ஆமீன் வஸ்ஸலாம்.
தங்கள் உண்மையுள்ள
மனம் திருந்திய தொண்டன்
S..ரபீவுத்தீன் மதுக்கூர்.
No articles in this category... |