விற்கப்படும் மார்க்கம்
மார்க்கட்டில் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு பணம் செலுத்துவதற்காக வரிசையில் நின்றாள். சில நிமிடங்களின் பின் அவளது முறை வரவே, 'கவுண்டருக்கு' அருகே வந்தாள்.
கவுண்டரில் இருந்த ஹிஜாப் அணியாத அரபிய நாட்டு முஸ்லிம் பெண், ஒவ்வொரு பொருட்களாக எடுத்து ஸ்கேன் பண்ணிக்கொண்டே கடுப்புடன் இவளைப் பார்த்துக் கூறினாள்,
"ஃப்ரான்சில் நமக்கு பல பிரச்சினைகள் உள்ளன... உன்னுடைய ஹிஜாபும் அதில் ஒன்று.... இங்கு குடியேறிய நாம் தொழிலுக்காகத்தான் இருக்கின்றோம்.... மார்க்கத்துக்காகவோ வரலாற்றுக்காகவோ இல்லை....
உனக்கு மார்க்கத்தை பின்பற்ற வேண்டுமானால் அல்லது ஹிஜாப் அணிய
வேண்டுமானால் உன்னுடைய அரபு நாட்டுக்கு திரும்பிப்போய் விடு... அங்கு
நீ நினைத்தது போல எப்படி வேண்டுமானாலும் இரு..."
பொருட்களை பையில் போட்டுக்கொண்டிருந்த ஹிஜாபி பெண் அதனை நிறுத்திவிட்டு தனது முகத்திரையை விலக்கினாள்... அவளைப் பார்த்த கவுண்டரில் இருந்த பெண் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள்....
நீல நிற கண்களையுடைய, ஹிஜாப் அணிந்த, அழகான அந்த பெண்
கூறினாள், "நான் ஒரு ஃப்ரெஞ்சுப் பெண்... குடியேறிய அரபுப் பெண்ணல்ல.... இது என்னுடைய நாடு... அதே போல இது என்னுடைய இஸ்லாம்.......
பிறப்பால் முஸ்லிம்களாகிய நீங்கள் மார்க்கத்தை விற்றுவிட்டீர்கள், உங்களிடமிருந்து நாம் அதனை வாங்கிக் கொண்டோம்...!"
சுப்ஹானல்லாஹ்!
No articles in this category... |