என் ஹிஜாப் என் உரிமை!!!
ஆடைக்குறைப்பே உங்கள் நாகரிகமென்றால்...!
காட்டு விலங்குகள் தொன்று தொட்டு நாகரிகத்தின் உச்சியில்...!
போலியாக ஆர்ப்பரிக்கும் உங்கள் நாகரிகத்திலிருந்து விலகி...
பழம்பெரும்வாதியாக வாழ்வதே எங்கள் திருப்தி...!
என் ஹிஜாபை பற்றி உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை ...?
அந்தோ... ஆடு நனைகிறதென ஓநாய் அழுவது போல...!
பெண் விடுதலை என்ற பெயரில் பிதற்றிக்கொண்டு...
அரைகுறை ஆடை அணிவதல்ல உண்மை பெண்ணியம்...!
போகப்பொருளாக்கி பார்ப்பதே நீ திணிக்கும் பெண்ணியமா...?
ஹிஜாபை அணிய வேண்டாமென சொல்ல உனக்கென்ன உரிமை...?
இச்சைப் பார்வைகள் உண்டு போட்டதன் மிச்சமாக இருக்க,
என் மனம் இசையாது போனதன் கோபமோ...?
வெளி அழகை பார்த்து நீ தூக்கித்தரும் அங்கீகாரத்தினை...
என் அறிவுக்கான வெற்றியென ஏமாற்றிக்கொள்ள மாட்டேன்...!
நீ விரும்புவதை நான் அணிந்து வலம் வருவதல்ல என் சுதந்திரம்...!
நான் விரும்பும் ஆடையே எனக்கான பாதுகாப்பு அரண்...!
நீ கூக்குரலிடுவது போல் என் ஆடை சிறுமைப்படுத்தவில்லை,
மாறாக என்னை பூரணமாக முழுமையாக்கியது...!
என்னை யார் பார்க்க வேண்டுமென்று தீர்மானிக்கும் உரிமை, என்னை தவிர யார் கையிலுமில்லை...!
என் ஹிஜாப் என் உரிமை...!!!
அரைகுறை ஆடையல்ல என் அடையாளம்...!!!
ஆம்... அரைகுறை ஆடையல்ல என் அடையாளம்...!!!
உங்கள் சகோதரி
தாஹிரா பானு
Source: http://www.islamiyapenmani.com/2015/02/blog-post.html
No articles in this category... |