Tamil Islamic Media

அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.


நாயகம் (ஸல்) கூறுகிறார்கள்;

நாவின் பத்தினித்தனம் வாய்முடி மெளனமாய் இருப்பதாகும்.

வாய்முடி இருப்பது இஸ்லாத்தின் தலை போன்றதாகும்.

ஈமானின் பக்தர்களுக்கு இறைநேசமும் கிரீடமும் வாய்முடி மெளனமாய் இருப்பதாகும்.

ஒரு ஆலிம் மார்க்க விஷயத்தில் மெளனமாய் இருப்பது குற்றமாகும். அவர் பேசுவது சிறப்பாகும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் தங்கள் நாவைப் பிடித்து கொண்டு இதை (தீயவழியில்) உபயோகிக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். -அல் ஹதீஸ்

உங்களில் அளவுக்கு அதிகமாக பேசுவோனும், வீண்பேச்சுப் பேசுவேனும், தற்பெருமையாகப் பேசுவேனும், வளவளப்பாகப் பேசுவேனும் என்னால் வெறுக்கப்பட்டவன், கியாமத்து நாளையில் அவன் என்னிடமிருந்து வெகு தூரத்தில் இருப்பான். -அல் ஹதீஸ்


வளவளப்பாக பேசுவோனையும், பசுவைப் போன்று தனது நாவை இயக்குவோனையும் ஆண்டவன் வெறுகிறான். -அல் ஹதீஸ்

மக்களுடைய மனதை கவரச் செய்யும் நோக்கத்துடன் தன் வார்த்தைகளை அடுக்கி மாற்றி (உண்மைக்குப் புறம்பாக) பேசுவோனுடைய தவ்பாவை -பச்சாத்தாப்பத்தை கியாமத் நாளில் இறைவன் ஏற்று கொள்ளமாட்டான். -அல் ஹதீஸ்

மெளனமாயிருப்பதால் ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் கண்ணியமானது. அறுபது ஆண்டு வணக்கத்தை விட மேலானது. -அல் ஹதீஸ்

இறைவன் மீதும் கியாமத் (மறுமை நாள்) மீதும் நம்பிக்கை தரக்கூடிய நல்லதையே மனிதன் பேசுவானாக அல்லது மெளனமாக இருப்பானாக. -அல் ஹதீஸ்

அதிகமாக பேசாதீர், மெய்யாகவே, இறைவனை நினையாமல் அளவுமீறிப் பேசுவது (உங்களை) கல்நெஞ்சராக்கி விடும். மெய்யாகவே, இறைவனிடத்திலிருந்து வெகுத்தூரம் விலக்கப்பட்டவன் கல்நெஞ்சுள்ள மனிதனேயாகும். -அல் ஹதீஸ்








No articles in this category...