Tamil Islamic Media

முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?


அவர்களது பிழையான நம்பிக்கை மற்றும் வாழ்கை முறைக்கு தலைசாய்க்க
 மறுக்கும் முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிரிகள், பயங்கரவாதிகள்!
இன்று உலகினது வளங்களின் பெரும் பகுதியை கொண்ட நாடுகள் முஸ்லிம் நாடுகள்.


இஸ்லாம் எழுச்சிபெற்று அது ஒரு தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுமானால் அவர்கள் அஞ்சும் விடயங்கள்:

  1. முஸ்லிம் நாடுகளது வளங்களை சூரையாட முடியாது.
  2. முஸ்லிம் நாடுகளது நுகர்வுச் சந்தைகளை கட்டுப்படுத்த முடியாது.
  3. அவர்களது வட்டிப் பொருளாதார ஒழுங்கை முஸ்லிம் நாடுகளில் அமுல்படுத் முடியாது.
  4. அவர்களது பொருளியல் ஒழுங்கிற்கும் அவர்களது வாழ்க்கை முறைக்கும் அச்சுறுத்தலாக இஸ்லாம் மாறிவிடும்.


இந்த அச்சம் அவர்களை நிம்மதியிழக்கச் செய்கிறது. அதனால் அந்த பயங்கரத்தை  எண்ணி “பயங்கரவாதிகள்” என முஸ்லிம்களுக்கு பெயர்சூட்டுகிறார்கள்.


பெண்களை போகப்பொருளாக காட்சிப்படுத்தி அவர்களை உசுப்பேற்றி சுரண்டிவாழும்  மேற்கத்தேய வாழ்க்கை முறைக்கு அச்சுறுத்தலாக முஸ்லிம்களது  ஆடைக்கலாச்சாரத்தை பார்கிறார்கள்.

தனிமனித சுதந்திரம் எனும் பெயரில் சீரழித்துள்ள மேற்கினது சமூகவாழ்வினது
 அச்சுறுத்தலாக முஸ்லிம்களது வாழ்க்கைமுறையையும் அவர்களது பண்பாட்டு  விழுமியங்களையும் கண்டு அதனை ஒரு அச்சுறுத்தலான மாற்றீட்டு வாழ்க்கை  முறையாக உணர்கிறார்கள்.

இதனல் "அபாயாவிற்கு எதிரான" மற்றும் "சரீஆ வாழ்வுக்கு எதிரான"
கருத்துக்களையும் பிரச்சாரங்களையும் முடுக்கிவிட்டு முஸ்லிம்களது வாழ்வை
 கொச்சைப்படுத்த முற்படுகிறார்கள்.

இத்தகைய குற்றச்சாட்டுக்களைக் கொண்டு அனைத்து குப்ர் தேசங்களையும் ஒன்று  திரட்டி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கருவறுக்க துடிக்கிறது
 ஏகாதிபத்திய அமெரிக்கா.

ஆனால் இவர்கள் எவ்வளவுதான் வெறுத்த போதிலும் அல்லாஹ் தனது ஒளியை  பூரணப்படுத்தியே தீ ருவான்.

“அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட  நாடுகின்றனர், ஆனால் காபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப்  பூரணமாக்கியே வைப்பான்.” (அல்குர்ஆன்- 61:8)

இவ்வாறான விஷமிகளைக் குறித்து அல்லாஹ் இவ்வாறு எச்சரிக்கிறான்

“நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால்,
 (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது பின்னர்
(அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக
 இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்” (அல்குர்ஆன்-21:18)






No articles in this category...