தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
' யாதும் ' இயக்குனர் அன்வரின் உழைப்பில் வெளிவந்திருக்கும் தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். அதை ஒரு ஆவணக் குறும்படமாக தமிழ் முஸ்லிம்களுக்கு தந்திருக்கும் அன்வரின் பணியை பாராட்ட வார்த்தைகள் போதாது.
அன்வரின் சொந்த ஊர் தேனீ மாவட்டத்திலுள்ள கோம்பை. அங்கிருந்தே தனது ' வேர்களை'த்தேடி பயணிக்கிறார் அன்வர். கோம்பை பள்ளிவாசலில் ஒலிக்கும் பாங்கொலியோடு அவரது பயணம் தொடர்கிறது.
' நாங்கள் நாயிடு வகுப்பைச் சேர்ந்தவர்கள். எங்கள் ஊருக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த முகமது மைதீன் வாத்தியார் வருவார். முகமது மைதீன் வாத்தியாரை எங்கள் ஊரில் தெரியாதவர்கள் யாரும் கிடையாது. நாங்களெல்லாம் அவரை மாமா என்றுதான் அழைப்போம். அவரும் தன்னைவிட வயதில் மூத்தவர்களை மாமா என்றுதான் அழைப்பார். நான் ' வருஷ நாட்டு ஜமீன் ' என்ற எனது நாவலை எழுத எனது சொந்த மாவட்டமான தேனீ மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். அங்கெல்லாம் முஸ்லிம்களும் நாயுடுகளும் மாமன் மச்சான் உறவு முறையோடுதான் பாசத்தோடு பழகி வருகிறார்கள். எங்கள் குடும்பத்தில் பெண்பிள்ளைகளின் பூப்புனித நீராட்டுக்கு தாய்மாமன் கொடுக்கும் சீர்வரிசை முக்கியமானது. என் சகோதரியின் பூப்புனித நீராட்டுக்கு முகமது மைதீன் வாத்தியார் பூ, பழம்,தேங்காய்,துணிமணியோடு கருகமணி மாலையும் ஒரு தட்டில் வைத்துத் தந்து தன் தாய்மாமா உறவை உரிமையோடு நிலை நாட்டிக் கொண்டார். இந்த பாசத்தையும் உறவையும் யாராலும் பிரிக்க முடியாது ' என்று சொல்கிறார் பிரபல எழுத்தாளர் பொன்சீ.
 
அன்வரின் பயணம் கேரளாவின் கொடுங்கல்லூரிலுள்ள பழமை வாய்ந்த பள்ளிவாசலின் அழகை நமக்குப் பருகத்தந்து கேரளாவின் மலபார், கோழிக்கோடு கொச்சி போன்ற பகுதிகளுக்கும் நம்மை அழைத்துச் சென்று கலைநயமிக்க பள்ளிவாசல்களைக் காட்டி நம்மை கண்குளிர வைக்கிறது. கோழிக்கோட்டில் ஒரு நாலு அடுக்கு பிரம்மாண்ட பள்ளிவாசல் முழுக்க முழுக்க கேரளத்து மரங்களாலேயே கட்டப்பட்ட அதிசயம்... கோழிக்கோடு சாமிரி மன்னர்களின் கடல் தளபதிகளாக இருந்த குஞ்சாலி மரைக்காயர்கள் என்ற மாப்பிள்ளைமார்களின் வீரம் செறிந்த வராலாறுகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. கி.பி. 10 நூற்றாண்டு கல்வெட்டுக்களிலேயே ' அஞ்சுவன்னம்' என்ற சொல் குறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1000 வருசத்திற்கு முந்திய தஞ்சை பெரிய கோயில் சுவர்களில் ராஜராஜ சோழன் செதுக்கி வைத்த கல்வெட்டில் ' சோனகர் ' என்றும் ' துலுக்கர் அகமது ' என்றும் பொறிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. திருச்சியில் 1000 வருடங்களுக்கு முன்னாலேயே வந்து இஸ்லாத்தைப் பரப்பிய ' நத்தர்ஷா வலியுல்லாஹ் ' வின் அடக்கவிடத்திற்கு இன்றும் ஜாதிமத பேதமின்றி மக்கள் ஏராளமாக வந்து செல்கின்ற காட்சியையும் அவர்கள் அன்பால் மக்களைக் கவர்ந்த வரலாறுகளையும் உணர முடிகிறது. அதுபோல் 16 ம் நூற்றாண்டில் நாகூரில் சாகுல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களால் தஞ்சை மன்னன் நோய் நீங்கப்பெற்றதும் மன்னர் மட்டுமன்றி செட்டியார்களும் அங்கேயுள்ள மக்களும் மகான் அவர்களின் இறைப்பணிக்காக வாரி வழங்கிய சொத்துக்களும் இன்றும் இஸ்லாமியப் பெரியார்களின் மாண்புகளை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. மதுரையில் ' புட்டுக்கு மண்சுமந்த சிவபெருமானின் ' திருவிழாவுக்கு மைதீன் என்பவர் பரம்பரை பரம்பரையாக வேள்வி வேலி அமைப்பதும் அவருக்கு கோயில் நிர்வாகமும் மக்களும் மரியாதை செய்வதும் மதநல்லிணக்கத்தின் வெளிப்பாடாக
No articles in this category... |