Tamil Islamic Media

வதைக்கும் விவாகரத்து வழக்குகள்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நான்கு குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 2013 ஆகஸ்டுவரை 15,324 குடும்ப வழக்குகள் நிலுவையில் உள்ளன. விவாகரத்து, ஜீவனாம்சம், குழந்தைகள்மீதான உரிமை, மீண்டும் சேர்ந்துவாழ விருப்பம் ஆகிய வழக்குகள் ஆயிரக்கணக்கில் தேங்கிக்கிடக்கின்றன.

இதில் நம்மை வதைக்கின்ற வேதனை என்னவென்றால், 2003ஆம் ஆண்டு விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை 2,570ஆக இருந்தது. இது 2012ஆம் ஆண்டு 4,770ஆக உயர்ந்தது. 2013 செப்டம்பர்வரை மட்டுமே 3,500ஆக இவ்வழக்குகள் உள்ளன.

இவ்வாறு இரு மடங்காக, மும்மடங்காக விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறது. இந்த எண்ணிக்கை நீதிமன்றத்திற்கு வந்த வழக்குகள் மட்டுமே! நீதிமன்றம்வரை வராமல் சுமுகமாக முடிக்கப்படும் விவாகரத்துகள், பஞ்சாயத்துகளில், அல்லது ஜமாஅத்துகளில் நடக்கும் விவாகரத்துகள் முதலானவற்றைக் கணக்கிட்டால், பல்லாயிரக்கணக்கில் இருக்கக்கூடும்; லட்சத்தை எட்டினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

முந்தைய தலைமுறையில் காணப்படாத இந்த அலங்கோலம், இன்றைய இளைய தம்பதியரிடையே பரவக் காரணமென்ன? இத்தனைக்கும் இந்த இளம் தம்பதியர் படித்தவர்கள்; பட்டம் பெற்றவர்கள்; பெரிய பணிகளில் கைநிறைய சம்பாதிப்பவர்கள்; வாழ்க்கை வசதிகளைக் குறைவின்றி அனுபவிப்பவர்கள்; திட்டம்போட்டு இரு குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்பவர்கள்.

சுருங்கக்கூறின், எல்லாம் இருந்தும் வாழ்க்கையில் இருக்க வேண்டிய நிம்மதி, அமைதி, மகிழ்ச்சி, முறுவல்… என எதுவும் இல்லை. ஆனால், பற்றாக்குறையே வாழ்க்கையாக மாறிவிட்டிருந்த முந்தைய தலைமுறையினரிடம் இந்த நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் குறை இருந்ததில்லை. காரணம் என்ன?

வாழ்க்கைப் பாடம்

படிப்பறிவு இல்லாத, அல்லது குறைவான படிப்பே இருந்த அம்மக்களிடம் பண்பாடு இருந்தது; நிதானம் இருந்தது. எதார்த்த வாழ்க்கை என்ன? குடும்பக் கௌரவம் என்ன என்பதையெல்லாம் அவர்கள் அறிந்திருந்தார்கள். குடும்பம் சிதறிவிடக் கூடாது; கட்டுக்கோப்பு குலைந்துவிடக் கூடாது என்பதற்காக உரிமைகளை விட்டுக்கொடுத்தார்கள்; கடமையில்லாத தைக்கூட இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டார்கள் பள்ளிப் பாடம் இல்லையே தவிர, வாழ்க்கைப் பாடம் அவர்களின் விரல் நுனியில் இருந்தது.

இன்றைய இளைய தம்பதியரிடையே மருந்துக்குக்கூட சகிப்புத் தன்மையைப் பார்க்க முடியவில்லை. சுயநலம் ஒன்றைத் தவிர, குடும்பத்தின் வேறு எந்த அடிப்படையும் அவர்களுக்கு முக்கியமாகத் தோன்றுவதில்லை. எதிலும் அவசரம்! எதையும் உடைத்துவிடும் வறட்டுத் துணிச்சல்! தன் சுகத்தைத் தவிர, எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் சிந்திக்காத ஏகாந்த நிலை! அவர்களின் ஏட்டுப் படிப்பு, பணம் சம்பாதிக்க உதவுவதைப் போன்று, சம்பாதித்த பணத்தில் நிம்மதியாக வாழ கற்றுக்கொடுக்கவில்லை.

திருமணம்

முதலில் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்பது, ஒரு வலுவான ஒப்பந்தம்; அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற்ற, நீடித்திருக்க வேண்டிய புனித இணைப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கை ஆகும். அதை எளிதில் அறுத்தெறியக் கூடாது.

“அவர்கள் உங்களிடமிருந்து வலுவானதோர் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளனர்” (4:21) எனத் திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அதாவது கணவனை மனைவியுடன் பிணைக்கும் உறுதியான, மிக வலுவான ஒப்பந்தத்தைப் பெண்கள் தம் கணவன்களிடமிருந்து திருமணத்தின் மூலம் பெற்றுள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் ‘விடைபெறும் ஹஜ்’ஜின்போது ஆற்றிய பேருரையில், “பெண்கள் விஷய






No articles in this category...