மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
தாஜ்
பெரியார் தனது சமூகப்பணியில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தக் காலத்தில் தலைவர்கள் பலரை சமூகப்பணி நிமிர்த்தமாகவும், அரசியல் நிமிர்த்தமாகவும் சந்தித்திருக்கிறார். இந்திய தலைவர்கள் மட்டுமல்லாது உலகத் தலைவர்களும் அதில் அடக்கம். அந்த சந்திப்புகள் குறித்த தகவல்களும், செய்திகளும் நமக்கு பதிவுகளாக கிடைக்கவும் கிடைக்கிறது. ஆனால், அந்த சந்திப்பின் உரையாடல்கள், உரையாடல்கள் வடிவத்திலேயே நமக்கு கிடைக்கவில்லை. சில குறிப்பிடத் தகுந்த தலைவர்களுடான சந்திப்பாவது அப்படி கிடைத்திருக்கும் பட்சம் அது வழுவான ஆவனமாகியிருக்கும். செய்தியும், தகவலும் தருகிற நிறைவை விட இப்படியானப் பதிவுகள் தருகிற நிறைவு முழுமையை கொண்டதாக விளங்கும்.
பெரியாரும் பாபாசாகேப் அம்பேத்காரும் பலதரம் சந்தித்து உரையாடி இருக்கிறார்கள். பல நேரம் ஒத்தகருத்துகளோடும், சில நேரம் மாறுபட்ட கருத்துகளோடும் நட்பு நிலையிலேயே உரையாடியிருக்கிறார்கள். குறைந்த பட்சம், இந்த சந்திப்புகளையாவது அப்படி பதிவு செய்திருக்கலாம். ரவிகுமார் போன்ற நவீன அரசியல்வாதிகள் பெரியாரின் கட்டுரைகளை கவிதைகளாக நினைத்து, கணித்துச் சொல்லும் புது புது அர்த்த வியாக்கியானங்கள் பாதிக்குப்பாதியாவது குறைய வாய்ப்பாகியிருக்கும்! அரசியல் வாதிகளை அரசியல்வாதிகளாகவும், பெரியாரை பெரியாரகவும்தான் நாம் பார்க்கிறோம் என்பது வேறுசெய்தி.
பெரியார் பதிவுகளில் உரையாடல் வடிவம் இல்லாமைப்பற்றி பெரியாரிஸ சகா ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கிற போது, அப் படியொருப் பதிவு இருக்கிறது, அதுவும் முக்கியமான ஒன்றென்றார். யாருடனான சந்திப்பின் பதிவு? யென வினவியபோது, மகாத்மா காந்தியும் பெரியாரும் ஆயிரத்தி தொழாயிரத்தி இருபத்திஏழாம் ஆண்டு பெங்களூரில் சந்தித்த சந்திப்பென்றார். ஆர்வம் தொற்றிக்கொண்ட நிலையில் மேலும் சில தகவல்களையும் அவர் மூலம் அறிந்தேன்.
மகாத்மா காந்தியும் பெரியாரும் சந்தித்த சந்திப்பில் அதிகம் பேசப்பட்டப் பொருள் இந்துமதம் என்றும், அந்தப் பேச்சினூடே பிராமணர்களின் நம்பகத் தன்மைக் குறித்து பெரியார் விரிவாகப்பேசியதாகவும், இதுவரை ஒரு பெரியாராலும் ( இந்து மத சீர்திருத்த முனைப்பில் பாடுபட்ட பெரியார்கள்) மதம் சம்பந்தமானத் துறையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்பட்டதில்லை என்றும், அப்படி முயல்பவர்கள் பிராமணர்கள் விட்டு வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் பெரியார் குறிப்பிட, மகாத்மா காந்தி அதை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டதாகவுமே அந்த சந்திப்பு முடிந்து போனது என்று கூறியவர் மேலும் ஒரு தகவலையும் அழுந்தக் குறிப்பிட்டார்.
1948 - ஜனவரி 30 - வெள்ளி கிழமை - மாலை ஐந்து மணிக்கு, நாதுராம் விநாயகக் கோட்சே என்கிற ஒரு மராட்டிய பிராமணன், மகாத்மா காந்தி அவர்கள் பிராத்தனை செய்துக் கொண்டிருந்த நிலையில் அவரை சுட்டுக் கொன்றான். அதையொட்டி நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா என்று மேலும் சில மராட்டிய பிராமணர்கள் கைது செய்யப்பட்டு தண்டனையும் அடைந்தார்கள். ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கர்,இன்னும் சில பிராமணர்கள் போதிய சாட்சிகள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்கள் என்பதை நாம் அறிய வருகிறபோது, அன்றைய பிராமணர்களை பற்றி மாகாத்மாவிடம் பெரியார் பேசிக்கொண்டிருந்த பேச்சு எத்தனை உண்மையாகிவிட்டது என்பதைதான் அழுத்தக் குறிப்பாக நண்பர் சொன்னார்.
நான் அந்த சந்திப்பின் பதிவுகொண்ட புத்தகத்தை வாசிக்க விரும்பினேன். வள்ளுவர் பதிப்பகத்தார், 1948ல் பிரசுரித்திருந்த '
No articles in this category... |