Tamil Islamic Media

சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)

வல்ல நாயனின் திருப்பபெயர் போற்றீ

 
இறைவனின் அருளால் நேற்று “ சுவனம் பூமியில் விற்க்கப்படும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டோம். அதில் நிறைவாக பூமியில் சுவனத்தின் விலையாக  எத்தனையோ செயல் இருந்தும் பெற்றோரிடம் கவனமாகவும் கண்ணியமாகவும்  நடந்து கொள்வதே சுவனம் பெற மிகப்பெரும் விலை என்ற அர்த்தத்தில் அக்கட்டுரை நிறைவுற்றிருந்தது. அதன் தொடராக.....


பெற்றோரிடம் கண்ணியமாகவும், கவனமாகவும் மட்டும் இருந்தால் போதாது நீங்கள் நன்றியோடும் நடக்க வேண்டும் என்றும் இறைவசனம் கோடிட்டு காட்டுகிறது.


“ எனக்கு நன்றி செலுத்துங்குகள், மேலும், உம் பெறோர்களுக்கும் நன்றி உரியவராக நடந்துகொள்ளுங்கள்” ( 31:14)


பெற்றோருடன் நன்றியுடையவராக இருங்கள்.


தம் மீது நன்மை செய்தவர்களுக்கு நன்றி செலுத்துவது கண்ணியமான மனிதர்களின் அடிப்படை குணமாகும். நன்மை செய்தவர்களுள் நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடியவர்கள் நம் பெற்றோரே. அவர்கள் தான் நம்மை வளர்க்கிறார்கள். அவர்களின் அரவணைப்பில் தான் நாம் கல்வியையும், நல்லொழுக்க உணர்வுகளையும் பெறுகிறோம்.


நாம் வாழ்வின் உச்சத்தில் ஏறுவதற்கு படியாக இருந்தவர்களை திரும்பிப்பார்போம். இதை செய்யாவிட்டால் நன்றி கெட்டவர்களின் வரலாற்றில் நடுப்பக்கம் நமக்கு ஒதுக்கப்படும். (இறைவன் பாதுகாப்பானாக ஆமீன்)
அவர்கள் நமக்காக செய்யும் அர்ப்பணிப்பு ஈடு இணையற்றது. அவர்கள் நமக்காக மேற்கொண்ட உழைப்பு  ஈடு செய்ய முடியாதது.

அவர்களின் இந்த செயல்களுக்கு நாம் என்ன செய்யவேண்டும், இல்லை நான் என்னதான் செய்ய முடியும்.

அவர்கள் நம் மீது செய்த உபகாரத்திற்க்கு பதிலாக அவர்களின் கண்ணியம் நாம் உள்ளத்தில் ஆட்சிசெய்ய வேண்டும், அவர்களுக்கு எக்காலமும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்ற உன்னத உணர்வை நாம் மனதார ஒப்புக்கொள்ளவேண்டும்.


அவர்களின் அன்பை ஒவ்வொரு கணமும் எண்ணிப்பார்க்கவேண்டும். நமது ஒவ்வொரு ரோமக்கால்களும் அவர்களுக்கு நன்றி செலுத்துவதாக இருக்கவேண்டும். இவற்றை எல்லாம் உடபடுத்தியே இறைவன் தனக்கு நன்றி செலுத்த கட்டளை இடும்போது அதனுடன் பெற்றோர்களை சேர்க்கிறான்.

 
பெற்றோர்களில் ஒருவரோ இருவரோ முதுமை அடைந்து விட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை சீ என்று கூடக்கூறாதீர்கள். அவர்களை மனம்நோகும் படி கடிந்து பேசாதீர்கள் ( குர் ஆன் 17:23)

 பொற்றோரை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைக்க முயற்சி செய்ய வேண்டும். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களுக்கு அருவருப்பு மற்றும் எரிச்சல் ஊட்டும் எந்த பேச்சையும் பேசாதீர். குறிப்பாக, வயது முதிர்ந்த நிலையில் அவர்களுக்கு சிறு சிறு விஷயங்களுக்கும் கோபிக்கும் சுபாவம் ஏற்படும்.


நீங்கள் எதிர்பார்க்காத விஷயங்களை கேட்க முற்படுவார்கள். அப்பொழுது முழு மகிழ்ச்சியுடன் அவர்களின் பேச்சை கேட்க முற்படுங்கள். நீங்கள் அவர்களுக்கு செய்யும் உபகாரங்களில் எல்லாம் மேலானது அவர்கள் பேசும் போது காது கொடுத்து கேட்பது. நீங்கள் அவர்களின் பேச்சை கேட்டாலே அவர்கள் அடையும் மகிழ்ச்சி எல்லை இல்லாதது.


அவர்களின் பேச்சு வெறுப்படைய வைக்கிறது என்று அவர்களின் உணர்வு புண்படக்கூடிய அளவில் பதிலை கூறாதீர்கள்.


உண்மை நிலை என்ன வெனில் , தன் முதுமைப்பருவத்தில் எதையும் சகித்துக்கொள்ளும் உணர்வு குறைந்து விடுகிறது. பலகீனத்தின் காரணமாக தான் முக்கியமானவர் என்ற உணர்வு மேலோங்குகிறது. இதனடிப்படையிலேயே வயதானவர்கள் சிறு சிறு விஷயங்களை கடி






No articles in this category...