Tamil Islamic Media

கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)

- எம்.ஆர்.ராஜகோபாலன்

இந்த இரண்டு நபர்களுமே இந்திய சரித்திரத் தின் மத்திய அல்லது இடைக்காலத்தை (மெடீவல் பீரிய்ட்) சார்ந்தவர்கள் (கி.பி.712 முதல் 1764 வரை யிலான காலம்). பேரரசு என்கிற நிலையில் இந்தியாவைக் கடைசியாக ஆண்ட இந்திய மன்னர் ஹர்ஷவர்த்தனன் ஆவார். கன்னோ ஜியைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த இவரது ஆட்சி கி.பி.700க்குச் சற்று முன்னதாகவே முடிவுக்கு வந்துவிட்டது. அதற்குப் பின்பு ஹிந்துஸ்தானம் அல்லது ஆர்யாவர்த்தம் என்று குறிப்பிடப்படும் விந்திய மலைக்கு வடக்கே உள்ள பகுதியில் எந்தப் பேரரசும் ஆட்சி செலுத்த வில்லை. பல மன்னர்கள் பல பகுதிகளை ஆண்டு வந்தனர். அவர்களுக்கிடையே பகைமை நிலவிய தால் ஓயாத போர்கள் தொடர்ந்தன. கைபர் கண வாய்க்கு அப்பால் நிலைபெற்றிருந்த இஸ்லாமிய மன்னர்களுக்கும் போர்த் தளபதிகளுக்கும் இந்தியாவின் வடபகுதியைப் படை எடுப்பதும் கைப்பற்றுவதும் எளிதாகிவிட்டது.

எட்டாவது நூற்றாண்டில் சிந்து மாகாணப் பகுதியை முஸ்லிம்கள் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். இருப்பினும் கி.பி.1205 வரை டில்லியைத் தலைநகராகக் கொண்டு வட இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி ஏற்படவில்லை. கி.பி.1206-இல் கோரிமுகம்மதுவின் பிரதிநிதியான குத்புதீன் டில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினார். அவர் துருக்கி நாட்டைச் சார்ந்தவர். இந்தியாவில் முகலாயர் களின் ஆட்சியை 1526-இல் பாபர் நிலைநிறுத் தினார். அவரது சந்ததிகள் 1764 வரை இந்தியாவை ஆண்டனர். பெயரளவிற்கு டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள சிறிய பகுதியில் 1857 வரை முகலா யர்கள் ஆண்டனர். பஹாதூர் ஷா கடைசி மன் னர் ஆவார். சிப்பாய்க்கலகம் என்று வெள்ளையர் களால் குறிப்பிடப்பட்ட முதல் சுதந்திரப்போர் 1858-இல் முடிவுக்கு வந்தபோது பஹாதூர் ஷா கைது செய்யப்பட்டு பர்மா நாட்டில் சிறை வைக்கப்பட்டார்.

மத்திய காலத்தில் அக்பர், ஷாஜஹான் அவுரங்கசீப் போன்ற பிரசித்தி பெற்ற மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். இருப்பினும் நாம் கஜினி முகம்மதுவையும் முகம்மது துக்ளக்கையும் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் - இவர்களைப் பற்றி மக்களிடையே முற்றிலும் தவறான எண்ணங்கள் நிலவுகின்றன. கஜினி முகம்மது தோல்விக்கு ஒப்பற்ற உதாரணமாகக் காட்டப்படுகிறார். “அவர் இந்தியாவின் மீது பதினேழு தடவை படையெடுத்தார் என்று கூறப்படுகிறது. அதன் உட்பொருள் அவர் முதல் பதினாறு முயற்சிகளில் தோல்வியைத் தழுவினார், பதினேழாவது முயற் சியில் சோம்நாத் நகரைக் கைப்பற்றினார் என்ப தாகும். ஒரு திருத்தம் என்னவெனில் அவர் பதினா றாவது படையெடுப்பில் சோம்நாத் நகரைக் கைப் பற்றினார். பதினேழாவது படையெடுப்பில் ஜாட் மன்னர்களைத் தோற்கடித்தார்.

உண்மை நிலை என்னவெனில் உலக சரித்திரத்தில் தலைசிறந்த மாவீரர்களில் ஒருவராக கஜினி முகம்மது குறிப் பிடப்படுகிறார். அலெக்சாண்டர் சிந்து நதிக்கரை வரை வந்துவிட்டு கிரேக்க நாட்டிற்குத் திரும்பி விட்டார். நெப்போலியன் ரஷ்யர்களாலும் ஆங் கிலேயர்களாலும் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் கஜினி முகம்மது ஒருவர்தான் எல்லாப் போர்களிலும் வாகை சூடித் தோல்வியை ஒரு போதும் காணாத மாவீரர்!

அப்படி என்றால் இந்தப் பதினேழு படை யெடுப்புகள் ஏன்? ஆம். அவர் இந்தியாவின் மீது பதினேழு தடவைகள் போர் தொடுத்தார் என்பது சரித்திர அடிப்படையிலான உண்மைதான். அவ ரது ஒவ்வொரு படையெடுப்பின் போதும் ஒரு நகர் அல்லது ஒரு பகுதியைக் குறிவைத்தார். அந்த மன்னரை வெற்றிகண்டு நகரைக் கைப்பற்றி, கோவில்களில் வைக்கப்பட்டிருந்த தங்கம் - வைர நகைகளைக் கொள்ளையடித்துத் தம் நாட்டிற்குத் திரும்பிவிட்டார். அவரது நோக்கம் க






No articles in this category...