தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
இஸ்லாமிய வழிகாட்டல்களின் கீழ் அமைந்த பூரணமான ஊடக ஒழுக்கவியல் கோவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் அதன் நெறியாள்கையில் எமது ஊடகத்துறை விழுமியங்கள் மிக்கதாக மிளிர வேண்டும். இஸ்லாம் முழு மனித சமுதாயத்துக்கும் வழிகாட்டல்களைக் கொண்டுள்ள மார்க்கம். அது ஊடகவியல் துறைசார்ந்தோருக்கு மிகச் சரியான வழிகாட்டல்களை சொல்லித் தருகின்றது. அந்த வகையில் இஸ்லாம் சொல்லுகின்ற தொடர்பூடக ஒழுக்கவியல் கோட்பாடுகள் பற்றிய அடிப்படையான சில குறிப்புகளை இங்கே தருகிறNhம். இவை இன்னும் ஆழமாக ஆராயப்பட்டு, மெருகூட்டப்பட்டு ஊடகவியலாளர்களை நெறிப்படுத்தும் ஷஇஸ்லாமிய ஊடக ஒழுக்கக் கோவை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். •உலகில் ஊடகத்துறை எப்போது துவங்கப்பட்டதோ அன்று முதல் ஊடவியலுக்கான ஒழுக்கங்கள் (Ethics) பற்றியும் பேசப்பட்டே வந்துள்ளது. 15ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பத்திரிகைத்துறை ஆரம்பமானது முதல் அத்துறைக்கான உரிமைகள், கடமைகள், ஒழுக்கங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. 1920ஆம் ஆண்டிலேயே இத்துறைக்கான பொதுவான ஒழுக்கவியல் கோவை வகுக்கப்பட்டது. 1926 இல் Plan American Press எனும் அமைப்பு ஒழுக்கவியல் கோவை ஒன்றை உருவாக்கியது. 1950 இல் Inter American Press எனும் அமைப்பு இது தொடர்பான மற்றுமொரு முன்மொழிவை முன்வைத்தது. 1952 இல் ஐ.நா.சபை இதழியல்துறை தொடர்பான ஓர் ஒழுக்கவியல் சட்டக்கோவை குறித்து ஓர் ஆய்வை நடத்தியது. 1954 இல் ஐ.நா.சபை இது தொடர்பில் சர்வதேச கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது சிக்கலானது எனக் கூறியது. 1974 ஷஇல் ஐரோப்பிய சமூகப் பத்திரிகைகள் வர்த்தக சங்கம்| எனும் அமைப்பு ஓர் ஒழுக்கக் கோவையை அறிமுகம் செய்தது. இதே காலப்பிரிவில் சர்வதேசப் பத்திரிகை அமைப்பு இது தொடர்பில் கூடிய கரிசனை செலுத்தியது. 1977 இல் அரபுப் பத்திரிகைகளுக்கான ஒழுக்கவியல் பிரமாணங்கள் தயாரிக்கப்பட்டன. அவ் ஒழுக்கவியல் கோவை இஸ்லாமிய அடிப்படைகளுக்கு அமைவாக இல்லாவிட்டாலும், மனித விழுமியங்கள் மற்றும் பொதுவான ஆன்மிக, தார்மிக ஒழுக்கப் பண்பாடுகளை கவனத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. •இப்படி காலத்துக்கு காலம் இதழியல் துறைக்கான ஒழுக்கக் கோவைகள் வகுக்கப்பட்டபோதும் அவை வெறும் கோட்பாட்டளவில் மாத்திரமே இருக்கின்றன. இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டுகின்ற மார்க்கம் என்ற வகையில் மீடியா துறைக்கும் மிகச் சிறப்பு வாய்ந்த ஒழுக்கங்களை வகுத்துக் தந்திருக்கிறது. அவையாவன: •01. உண்மையும் நம்பகத்தன்மையும் (Reality and Reliability) வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் சந்தர்ப்பங்களிலும் உண்மை உரைப்பது, வாய்மையாக நடப்பது இஸ்லாத்தின் அடிப்படையான போதனை. "ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் உண்மையாளர்களுடன் இருந்து கொள்ளுங்கள்". (ஸூரா அத்தவ்பா: 119) உண்மை (அஸ்ஸித்க்), வாய்மை (அல்அமானத்) அகிய இரண்டும் இஸ்லாத்தில் மிக முக்கியமான இடத்தை வகிப்பவை. இஸ்லாம் உண்மையை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட ஒரு கொள்கை என்பது தெளிவானது. •ஊடகவியலாளர்கள் பொய் சொல்வதை, உண்மைக்குப் புறம்பான செய்திகளை, தகவல்களை அறிக்கையிடுவதனை பாரதூரமான ஒரு குற்றமாக நோக்க வேண்டும். இதுபற்றி அல்குர்ஆன் கடுமையான எச்சரிக்கையை விடுகின்றது. "விசுவாசிகளே! தீயவன் உங்களிடம் ஏதேனும் செய்தியைக் கொண்டு வந்தால் (அதனை உடனே அங்கீகரித்து) அறியாமையால் குற்றமற்ற ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாமலிருப்பதற்காக (தீர்க்கமாக விசாரித்து) தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் (அவ்வாறு நீங்கள் செய்யவில்லையாயின்) பின்னர் நீங்கள் செய்யாதவ
No articles in this category... |