Tamil Islamic Media

மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்

மொவ்தீன் (மோதினார் அப்பா) என்றல்லாம் நாம் அழைப்போமே அந்த அப்பா நம்மோடு சிறிது மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்.  

அஸ்ஸாலாமு அலைக்கும்.

என்ன தம்பி எப்படி  இருக்கீங்க என்னை பற்றி உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன இருக்கு எதோ நீங்க கேட்கிறீங்க அதனால் சொல்றேன்.   தம்பி இந்த பள்ளியில நான் கடந்த 7 வருசமா இருக்கிறேன்.நான் இந்த ஊருக்கு புதுசா தான் வந்தேன் எனக்கு வட மாவட்டத்தை சேர்ந்த தஞ்சாவூரை சேர்ந்தவன்.நான் செய்யற வேலை எனக்கு   கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு ஆன வேற வழியில்லை. செய்து தான் ஆகணும்.என்ன தம்பி அப்படி பாக்குறீங்க இறை இல்லத்தின் வேலையை கஷ்டம் நு சொல்றாரேன்னு பாகுரீங்கள ?  

பின்ன என்ன தம்பி காலைல 4 மணிக்கெல்லாம் எழுந்து எனது அடிப்படை கடமைகளை முடிச்சிட்டு பள்ளியை திறந்து லைட் எல்லாம் போட்டு விட்டு பாங்கு சொல்லணும்.அதற்க்கு முன் ஒழு செய்ய தண்ணீர் போதுமானதா கழிப்பறைக்கு தண்ணீர் போதுமானதா என்று பார்க்கணும் சில நேரங்களில் இமாம் இல்லையன்றால் நானே தொழவைக்கவேண்டும். அதெல்லாம் முடிந்த பின்னர் லைட் அணைத்துவிட்டு பள்ளியை பூட்டிவிட்டு கரி கடைக்கு ஆடு அறுப்பதற்காக போக வேண்டும் அங்கு போனால் எதோ 10 முதல் 50 வரை கிடைக்கும்.அப்பறமா வந்து பள்ளியை சுத்தம் பண்ணனும் கழிப்பறை வரை சுத்தம் செய்த போதே லுஹ்ர் தொழுகைக்கான வேளை வந்து விடும்.

பாங்கு சொல்லிட்டு அந்த தொழுகை முடிந்தவுடன் சாப்பாடு  பின்னர் சிறிது நேரம் தூங்க முயற்சி செய்வேன் அதில் பல நேரங்களில்  நாய்கள் கபுரில் வந்து தோண்டும்  அதை விரட்டி விடனும் சில நேரம் நல்ல தூங்கிடுவேன் அப்பறமா அஷர் ஜமாத்துக்கான வேளை நெருங்கி விடும் உடனே எழுந்து பாங்கு சொல்லி விட்டு தொழுகை கடமைகளை முடித்து விடுவேன் பின்னர் மீண்டும் ஒருமுறை தண்ணீர் எல்லா   இடங்களிலும் போதுமானதாக உள்ளதா என்று பார்த்து மோட்டரை போடுவேன்.தண்ணீர் நிறைந்த வுடன் அணைத்து விட்டு சிறிது நேரம் ரோட்டில் வந்து நிற்ப்பேன்.

பின்னர்  மக்ரிப் நேரம் வந்து விடும் பாங்கு சொல்லி தொழுகையை நிறைவேற்றிவிட்டு வெளியே சில வீடுகளில் என்னை அழைப்பார்கள் குரான் ஓதுவதற்கு (பாத்திஹா ஓதுவது இப்போது குறைந்து விட்டது) அதில் 20 முதல் 30 ருபாய் வரை கிடைக்கும் எல்லா  நேரமும் கிடைப்பது இல்லை  பின்னர் இஷா தொழுகைக்கான வேளை வந்து விடும் பாங்கு சொல்லி விட்டு ஜமாத் முடிந்த வுடன் பள்ளியில் சிறிது நேரம் இருந்து பள்ளியில்  ஏதும் பிரச்சினைகள் இருந்தால் முத்தவல்லியுடன் சொல்லிவிட்டு குரான் ஓதிவிட்டு சாப்பிட போய்விடுவேன்.சிறிது நேரம் மனைவியுடன் பேசிவிட்டு தூங்க போனால் மறுபடியும் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு கபுரை ஒருமுறை பார்த்துவிட்டு நாய்களை விரட்டி விட்டு வந்து படுப்பேன். மறுபடியும் நேற்று நடந்தது போல எல்லா நிகவுகளும் தொடரும்.

இதுல எனக்கு இன்னும் சில முக்கிய வேலைகள் உண்டு அது தினமும் வருவது இல்லை ஆனால் சில குளிர் காலங்களில் ஏற்படும் மவுத்(இறப்பு)ஒரே நாளில் 3 ஜனாசாகளும் வருவதுண்டு.சில வீடுகளுக்கு நாம் சென்று தான் கஃபன் மாற்றுவதில்  இருந்து ஜனாஸாவை குளுப்பாட்டி கபன் துணி இட்டு அடக்கம் செய்து பின்னர் பாங்கு சொல்லி துவா செய்து அன்று முதல் 40 நாட்களுக்கு (வருட)பாதிஹா ஓதுவது குரான் ஓதுவது போன்ற பணிகளும் இருக்கும் இதில் கொஞ்சம் பைசா கிடைக்கும் அதுவும் இயக்கங்களின் வருகையினால் குறைந்து விட்டது. இது போக யாரவது எனக்கு பெருநாள் நேரங்களில் துணி எடுத்து தருவார்கள்.கை செலவிற்கு காசு தருவார்கள






No articles in this category...