Tamil Islamic Media

விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.

இந்தியர்களே ஒரு கணம் நில்லுங்கள் உங்கள
இதயத்தைச் தொட்டுச் சொல்லுங்கள்

நல்லவர்களே ஒரு கணம் நில்லுங்கள் – உங்கள்
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்

- தென்றல் கமால் –


--------------------------



மலையாள சேனல் ஒன்றில் விஸ்வரூபத்தை பற்றிய விவாதம் பார்த்துக் கொண்டிருந்தேன்

கருத்துச் சுதந்திரம் வேண்டும் அல்லவா என்று செய்தி வாசிப்பவர் கேட்கிறார்

பதிலளித்தவர் அப்துல்லாஹ் ( என்று நினைக்கிறேன்) என்ற இஸ்லாமியர் நல்ல கருத்தை முன் வைத்தவர்

கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்கிறீர்கள்

உலகறிந்த ஓவியர் இந்தியர் எம் எஃப் உசேன் அவர்கள் இந்துக் கடவுள்களை நிர்வாணமாக வரைந்தார் என்பதற்காக நம் நாட்டில் அவர் வாழ முடியா நிலை ஏற்பட்டு கடைசியில் கத்தாரில் தஞ்சம் புகுந்து அங்கே இறந்தார் புதைக்கப்பட்டார் இது ஏன்?

(இஸ்லாம் மனித உருவங்களை ஓவியங்களாக வரைவதை அனுமதிப்பதில்லை அதிலும் மாற்று மதக் கடவுள்களை இழிவுபடுத்த அனுமதியேயில்லை என்பது வேறு விசயம்... அல்லாஹ்வே குர் ஆனில் மற்ற மதக்கடவுளரை இழிவுபடுத்துவதை தடை செய்கிறான் ஆகவே இந்து கடவுள்களை ஆடையில்லாமல் நிர்வாணமாக அதுவும் ஓர் இஸ்லாமியர் வரைந்ததை நானும் எந்த இஸ்லாமியனும் ஏற்க மாட்டோம். கண்டிக்கிறோம்)

தீபா மேத்தா எடுத்த ஃபயர் போன்ற பெண்களின் ஒழுக்ககேட்டை ஆதரிக்கும் படங்களை சிவசேனா போன்ற ஹிந்துக் கட்சிகள் எதிர்த்ததேன் ?

பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்ட முல்லைப் பெரியாறு அணையை மைய்யமாக கொண்டு எடுக்கப்பட்ட டேம் 999 என்ற படம் தடைசெய்யப்பட்டது ஏன் ?

அரசியல் வேறு விளையாட்டு வேறு...... ஆனால் பாகிஸ்தானிய கிரிக்கெட் ஹாக்கி வீரர்கள் நம் நாட்டிற்குள் வரக்கூடாது என்று போராடுவது ஏன்?

அடுக்கடுக்காய் கேட்டார் ஆணித்தரமாய்க் கேட்டார்

திக்குமுக்காடிப் போனார் செய்தியாளர்

உண்மை என்றும் ஒரு படி மேலே தானே இருக்கும்

ஒரு வழியாக சமாளித்து செய்தியாளர்

படத்தை பார்ப்பதற்கு முன்னரே தடை செய்யச் சொல்வது என்ன நியாயம் என்று கேட்டு விவாதத்தை முடித்தார்

கமல் 100 கோடி செலவில் படம் எடுத்து விட்டார் அவருக்கு பெருத்த நட்டம் ஏற்படும் என்று அறைகூவல் விடுகிறார்கள்

ஆனால் ஒரு மதத்திற்கு ஒர் இனத்திற்கு ஏற்படும் அவப் பெயர் என்ற பெருத்த நட்டம் மட்டும் ஏன் யாருக்கும் புரிய மாட்டேன்கிறது.

மக்களுக்கு இடையே ஏற்படும் கசப்பு ஒரு சாராரைப பற்றிய அவதூறு மக்கள் இடையே ஏற்படும் பிளவு ஏன் பெருத்த நட்டமாக மனிதர்களுக்கு தெரிய மாட்டேன்கிறது.

இதைத் தான் நடுநிலை தவறுதல் என்பது

( என் மகள் ஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்ற சொன்னவர் எம பெருமானார் .......... )

மூஸா அலை அவர்கள் யூதர்கள் காளைக் கன்றை வணங்குவதைக் கண்டு தன் சகோதரன் ஹாருன் அலை அவர்களைப் பிடித்து நீ என்ன செய்து கொண்டிருந்தாய் இந்த மக்களைத் தடுக்காமல் என்ற போது “ நீங்கள் சொன்னால் மக்கள் ஒன்றுபடுவார்கள் நான் சொன்னால் பிளவுபடுவார்கள்.....மக்கள் பிளவுபடுவது .........மக்களைப் பிளப்பது ........ இணைவைத்தலை விட (இறைவனுக்கு இணையாக காளைக் கன்றை வணங்குவதை) விடக் கொடியது என்றார்களாம்.........

சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் ஒரு பால் கோடாமை
சான்றோர்க்கணி என்றான் வள்ளுவன்

கம்யுனிஸ்டுகள் கமலுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்

கருத்துச் சுதந்திரம் ஓகே ........ ஆனால் இதே கம்யுனிஸ்டுகள் இந்திய வணிகத்தில் அன்னிய முதலீடு என்று முதலீட்டு சுதந்திரத்திற்கு தடை கேட்பது ஏன்

உங்கள் கொள்கைக்கு எ






No articles in this category...