வாழ்க்கைக்காக ஒரு மரணம்
உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹாபி பெண்மணி சபீஆ பின்த் ஹாரிஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள் “ உங்களிலே யார் மதீனாவிலே வந்து மரணமடைய சக்திபெற்றிருக்கிறாரோ அவர் மதீனாவில் வந்து மரணம் அடையட்டும். ஏனெனில் அங்கு மரணிப்பவர்களுக்கு கியாமத் நாளில் நான் பரிந்துரைப்பவராகவும், சாட்சி சொல்பவராகவும் இருப்பேன்.”
நபிகளாரின் வாழ்வியல் குறித்து விரிவாக விழாக்கள் நடைபெறும் இன்றைய காலையில், இஸ்லாமியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.
இந்த ஹதீஸை பத்திற்க்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் அறிவிக்கிறார்கள், இன்னும் பல்வேறு ஹதீஸ் கிரந்தங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. எத்தணையோ ஹதீஸ்கலை வல்லூநர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற இந்த நபிமொழி, அவர்களை மதீனாவிற்கு இழுத்துசென்று மரணம் வரை அங்கே இருக்கவைத்தது.
உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் மதீனத்து மண் மீது ஒரு காதல், ஏனெனில் நம் உயிரினும் மேலான நபி அங்கு உறங்குகிறார்கள் என்ற ஒரேகாரணத்தினால். இந்த ஹதீஸ் அடிப்படையில் தான் ஒவ்வொரு இஸ்லாமியனும் மதீனாவில் சென்று மரணமடைய ஆசைப்படுகிறான்.
நல்வாழ்க்கை வேண்டும் அதற்க்கு கை நிரம்ப சம்பாத்தியம் வேண்டும் இந்த ஊருக்கு / நாட்டிற்க்கு சென்றால் நிரம்ப சம்பாதிக்கலாம் நன்றாக வாழலாம் என்ற நிலையில் பயணங்கள் நிகழ்கிறது. இவ்வுலக வாழ்வு சிறக்க தினம் தினம் பயணங்கள் தொடர்ந்து உலகில் நிகழ்கின்றன. ஆனால், இங்கே நல்முறை முறையில் மரணமடைய ஒரு உவப்பான பயணம் இது. நிலையில்லா உலகில் வாழ எவ்வளவோ சிரமம் மேற்கொள்கிறோம். ஆனால் அனைத்து சிரமத்திற்கு பின் அடைந்ததை நாம் தான் அனுபவிப்போமா அல்லது வேறு யாருமா? என்று நமக்கு தெரியாது.
அப்படித்தான் ஒவ்வொரு இஸ்லாமியனும் வாழ்நாளில் நபியோடு ஒன்றாக இருக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை இறந்த பின்னாவது இந்த மதீனத்து மண்ணில் ஒன்றாகிபோவோம் என்று தான் ஆசைப்படுவான், அல்ல அல்ல ஆசைப்படவேண்டும்.
இந்த ஹதீஸைக்குறித்து காழி இயாள் அவர்கள் விளக்க அளிக்கும் போது கூறினார்கள் “ நபியவர்கள் காலத்தில் வாழ்ந்த ஸஹாபாக்களுக்கு அவர்கள் சாட்சியாளராகவும், அவர்களின் காலத்திற்கு பின் உள்ளவர்களுக்கு பரிந்துரைப்பவரகவும் இருப்பார்கள்”.
சில கால வாழ்க்கைகே பல சிரமங்களை ஏற்றுக்கொள்ளும் மனிதன், அவனின் உண்மையான வெற்றியாகிய மறுமையின் வெற்றியைக்குறித்து சிந்திக்காமல் இருந்தால் உண்மையில் நஷ்டவாளியாகிவிடுவான். மறுமையில் மாநபியின் ஷபாஅத் (பரிந்துரை) மட்டுமே ஒவ்வொரு இஸ்லாமியனாலும் எதிர்பார்க்கப்படுகிற ஒன்று. அந்த ஷபாஅத் கொண்டுதான் முஸ்லிம்களின் வெற்றி இன்னும் ஈடேற்றம் நிச்சயிக்கப்படும் என்பது திண்ணம்.
இது பற்றி நாம் காதுகளை பல முறை தொட்டுச்சொல்லும் ஹதீஸின் கருத்து
இறுதித் தீர்ப்பு நாளில், இறை நம்பிக்கையாளர்கள் ஒன்று திரண்டு, நமக்காக நமது ரப்பிடம் பரிந்துரைக்க (யாரிடமாவது) நாம் கேட்க வேண்டாமா? என்று கூறுவார்கள். எனவே ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, நீங்கள் மனித இனத்தின் தந்தையாக உள்ளீர்கள். அல்லாஹ், உங்களை அவனது கரத்தினாலேயே படைத்து, உங்களில் ஆன்மா ஊதி, அவனது வானவர்களை உங்களுக்கு தலைசாய்க்க வைத்தான் எனவே, நாங்கள் இருக்கும் இந்த இடத்தில் இருந்து எங்களை விடுவிப்பதற்காக, நீங்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேசுங்கள் என சொல்வார்கள்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள்
No articles in this category... |