அந் நூர் விளக்கவுரை: ஆயா: 38 (15-Mar-2020)
24:38 அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.
குறிப்பு:
ஈமான் வலிமை அடைய தேவையான குணங்கள்!
ஆண் குழந்தையின் மீதான மனிதனின் விருப்பம்!
நபி மூஸா (அலை) அவர்களின் அழகான வரலாறு
அல்லாஹ்விடத்தில் மட்டும் நற்கூலியை எதிர்ப்பார்த்தே ஒரு முஃமீனின் ஒவ்வொரு செயலும் அசைவும் இருக்க வேண்டும்!
சில நல்அமல்களை செய்யும் போது, சில சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்!
இவ்வுலகிலேயே சிறந்த நல்அமல், ஒருவர் தன் பெற்றோருக்கு செய்யும் பணிவிடையை தவிர வேறில்லை!
நபி இத்ரீஸ் (அலை) அவர்களின் அந்தஸ்த்து!
அல்லாஹ் தான் விரும்பியவருக்கு மறுமையில் கொடுக்கபோகும் மிகப்பெரிய கூலி எது?
ஒரு நல்அமலை செய்ய வேண்டும் என்று நினைத்தாலே போதும் அதற்க்கு நன்மை எழுதப்படும்!
ஷைத்தான் மனிதனுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய குழப்பமே, எதிர்க்காலத்தை குறித்த தேவையற்ற பயத்தை ஏற்படுத்துவதே!
அல்லாஹ்வின் தண்டனை இறங்கினால் அதை யாராலும் தாங்க முடியாது!
அனைத்து நபிமார்களின் பணியானது, மனிதர்களை அல்லாஹ்வின் பக்கம் திருப்புவதும், அதனால் வரும் சோதனைகளை பொறுத்துக்கொள்வதுமே ஆகும்! |