• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 37-38/1 (8-Mar-2020)
    24:37. (அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
    24:38 அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.

    குறிப்பு:


    ஒரு முஃமீன் உடைய உயர்வான தன்மை எது?
    கேள்விக்கணக்கின்றி சொர்க்கத்தில் முதலில் நுழையும் முக்கியஸ்தர்கள்(V.I.P) யார்?
    ஒரு முஸ்லீம் தன் குழந்தைகளுக்கு சிந்திப்பது எப்படி என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்
    ஒவ்வொரு நற்செயலுக்கும் அல்லாஹ்விடத்தில் கூலி உண்டு என்ற நம்பிக்கையோடு மட்டும் தான் அதை செய்ய வேண்டும்!
    நாம் மரணித்த பிறகும் நமக்கு நன்மையை கொண்டு வந்து சேர்க்கும் 3 அமல்கள்
    நபித்தோழர் முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் செய்த அற்புதமான துஆ
    நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொல்லிக்கொடுத்த மிக சிறந்த நற்செயல்!
    பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்த்துக்கள் சொன்ன அந்த குரபாக்கள் யார்?
    வெறுப்பிற்கு பகரமாக ஒரு முஸ்லீம் எப்பொழுதும் அன்பையே பதிலாக கொடுப்பார்!