Update Required
To play the media you will need to either update your browser to a recent version or update your Flash plugin.
அந் நூர் விளக்கவுரை: ஆயா: 35/4 (8-Dec-2019)
24:35. அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.
குறிப்பு: -> முஃமீனின் உள்ளத்தின் ஒளி ஷைத்தானை தடுக்கும்!
-> மனிதனை ஆட்டுவிக்கும் கவலை
-> கவலையை கையாள பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வித்தை!
-> எதிர்மறையான எண்ணங்களை மாற்றவல்லது அல்லாஹ்வின் திருநாமம்!
-> குழந்தையின் உணர்வு தன்மை!
-> மனித உள்ளத்தின் பல்வேறு படிநிலைகள்!
-> அல்லாஹ்வின் சட்டத்தை மிகத்துல்லியமாக நிலைநிறுத்திய கலீபா ஹழ்ரத் உமர் (ரழி)