அந் நூர் விளக்கவுரை: ஆயா: 35/3 (1-Dec-2019) 24:35. அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.
குறிப்பு:
-> அல்லாஹ்வை தெரிந்த மனதிற்கும், தெரியாத மனதிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
-> நபிதோழர் சல்மான் அல் பாரிஸி (ரழி) அவர்களின் தேடல்!
-> 'லாஇலாஹ இல்லல்லாஹு' என்ற கலிமாவின் மகத்துவம்!
-> இறையச்சம் (தக்வா) என்பது முஃமீனின் ரத்தத்தில் கலந்தது!
-> இன்ஷாஅல்லாஹ், கற்றுத்தரும் ஈமானிய பாடம்!
-> ஆழமான கடலில் உள்ள இருளுக்கு உதாரணமான உள்ளம் எது?
-> மனித உள்ளத்தின் வகைகள் யாவை?
-> நயவஞ்சகத்தனத்தின் அடையாளங்கள் யாவை?
-> நேர்வழி பெறுதல் (ஹிதாயத்) என்பதின் பாதை என்ன? |