• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 35 (17-Nov-2019)
    24:35. அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.

    குறிப்பு:
    -> ஸூரா அந்-நூர் அதற்கான பெயர் விளக்கம் என்ன?
    -> பெருமானார் (ஸல்) அவர்களின் உயர்வு!
    -> அல்லாஹ்வை நெருங்குவதற்கான வழிமுறைகள்!
    -> குழந்தைகளோடு விளையாடுவது ஒரு முக்கியமான சுன்னத்(நபி வழி), மேலும் அது அதிகமான நன்மைகளை பெற்றுத்தரும் பொழுதுபோக்கும் கூட!
    -> பெற்றோர்களே! குழந்தைகளை மதியுங்கள்!!
    -> இஸ்லாம் கூறும் மனித சிந்தனையின் எல்லை என்ன?
    -> பள்ளிவாசலில் நுழையும் போது ஓத வேண்டிய முக்கியமான ஒரு துஆ!
    -> ஒரு முஸ்லீமுக்கு வழிகாட்டியாக இருக்கும் இரண்டு பேரொளிகள்!
    -> குழந்தைகளுக்கு இஸ்லாமை பழக்கப்படுத்தும் முறை!