அந் நூர் விளக்கவுரை: ஆயா: 34-35 (3-Nov-2019) 24:34. இன்னும் நிச்சயமாக உங்களுக்குத் தெளிவாக்கும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று போனவர்களின் உதாரணத்தையும், பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசத்தையும் நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்.
24:35. அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.
குறிப்பு:
-> தனிமனித ஒழுக்கமும் ஆன்மீக முன்னேற்றமும்
-> அஹ்லே பைத் எனும் பெருமானாரின் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) குடும்பமும்
-> அறுவாத கயிறான திருக்குர்ஆனை பற்றிப்பிடிப்போம்!
-> என்னை நானே திருக்குர்ஆனை கொண்டு, அல்லாஹ்வுக்கு பிடித்தமாதிரி வடிவமைக்க வேண்டும்!
-> ஒரு முஃமீனின் ஒவ்வொரு செயலுமே தாஃவா எனும் அழைப்புப்பணியே!
-> பெருமானார் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) எனும் பேரொளி! |