அந் நூர் விளக்கவுரை: ஆயா: 30/4 (14-Jul-2019) 24:30. (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
குறிப்பு:
- கொலையைவிட மிகக்கொடிய பாவமான விபச்சாரத்தை தூண்டும் காரணிகளும் அதிலிருந்து பாதுகாப்பு பெரும் வழிமுறைகளும்
- இவ்வுலகில் நமக்கு கிடைத்த அனைத்து பாக்கியமும் நமது சொந்த பொருள் அல்ல, அது அல்லாஹ் நமக்கு கொடுத்த அமானிதம், அதனை எப்படி பயன்படுத்தினோம் என்பற்கான அறிக்கையை மறுமையில் இறைவனிடம் சமர்ப்பிக்க வேண்டும்!
- வேறு எந்த அமல் செய்தாலும் அதற்கான பலனை நாம் உலகிலேயே அனுபவிக்க முடியுமா என்றால் அது உறுதியாக இல்லை, ஆனால் பார்வையை பேணி தாழ்த்திக் கொள்வதினால், அதனின் பலனை இவ்வுலகிலேயே அல்லாஹ் அனுபவிக்க செய்வான்!
- குர்ஆன் பேசும் காரண காரியம்!
- ஒரு வீட்டிற்குள் போகும் முன்னர் கேட்கப்படும் அனுமதியே நம் பார்வைக்குத்தான்!
- மனித மூளையில் உள்ள உணர்வும் அறிவும், அது வெளியில் இருந்து செய்திகளை சேகரிக்கும் விதமும்!
-> அசிங்கமான சிந்தனைகளை விட்டு பாதுகாப்பு கேட்கும் துஆ
-> இச்சையை தூண்டும் அனைத்து பார்வைகளும் பாவம்!
- பார்வையை பேணுவதின் மூலம் தான் உள்ளப்பரிசுத்தம் கிடைக்கும்
|