• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 17-19 (13-Jan-2019)
    24:17. நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்.
    24:18. இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன்.
    24:19. எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.

    குறிப்பு:
    ஒருவரை குறித்த தவறான செய்தி ஒன்று பரவும் போது, முதலில் மனதால் அதை மறுத்து, பிறகு அதையே வாயாலும் கூறவேண்டும்!
    நபிமார்களின் அழைப்புப்பணியும், அவர்களின் குடும்பமும்!
    யார் மார்க்கத்தை விளங்க வேண்டும் என ஆசைப்பட்டு, அதற்காக முழூமுயற்சி செய்வாரோ, அவர் யாராக இருந்தாலும், அவருக்கு அதனை விளங்கும் பாக்கியம் கிடைக்கும்!
    ஈமானை புதுப்பிக்கும் வழிமுறை அதற்கான அடிப்படை கல்வியும்!
    எண்ணம்-பேச்சு-செயல் மூன்றுக்கும் உள்ள சுழற்சி தொடர்பு