யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 69-70 (03-Sep-2017) 36:69. (நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.
36:70. (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.
குறிப்பு:
நிச்சயமாக இந்த குர்ஆன் ஒரு நினைவூட்டும் தெளிவான வேதமாகும்
. மறுமை வாழ்க்கையை நோக்கியே நமது ஒவ்வொரு கனமும் நகர வேண்டும்
. கல்வியும் சுயமதிப்பும் தான் வாழ்க்கையை நடத்தி செல்வதற்கு மிகவும் அவசியம்
. ஒரு முஸ்லீம் எப்போதும் தன்னம்பிக்கையிலும் சுயமதிப்பிலும் மேலோங்கி இருக்க வேண்டும்
. தெளிவான வேதமாகிய குர்ஆன் நிச்சயமாக கவிதை இல்லை
. செய்த பாவத்திற்கு தவ்பா செய்யும் வரை அதை மறக்க வேண்டாம், நிச்சயமாக அதற்காக பிடிக்க படுவோம்
. கவிதை குறித்த இஸ்லாமிய பார்வை
. குர்ஆனோடு நமது தொடர்பு
. |