யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 66-68 (30-Jul-2017) 36:66. நாம் நாடியிருந்தால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்; அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்?
36:67. அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.
36:68. மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?
குறிப்பு:
அல்லாஹ்வின் வல்லமையை விளங்குவோம்
கையும் களவுமாக மாட்டிக்கொண்டால்?
அல்லாஹ்வின் தீர்ப்பு நம்மின் உள்ரங்க சிந்தனைகளை கொண்டே
பனீ-இஸ்ராயீல் சமூகத்திடம் இருந்து நாம் பெற வேண்டிய பாடம்
நமது பாவத்தின் விளைவாக ஆண்டுதோறும் வரும் 2 சோதனைகள்
வயோதிகம் மனிதனின் வாழ்க்கை ஓட்டத்தில் ஏற்படும் தளர்வு
அல்லாஹ் கொடுத்த மிக பெரிய செல்வம் – உடல்-மனம்-புத்தி’யின் ஆரோக்கியம்
சிந்திக்க வேண்டிய தருணம் இன்னும் வரவில்லையா?
மறுமையை நோக்கி அழைக்கும் வயோதிகம்
ஒரு மனிதனின் 40 வயதில் குர்ஆன் வலியுறுத்தும் அமல்
வயோதிகத்தில் ஏற்படும் புத்தி தடுமாற்றத்தில் இருந்து பாதுகாப்பு பெற வாலிபத்தில் கேட்க வேண்டிய துஆ
இறைவனின் அருட்கொடை அனைத்து மனிதர்களுக்கும் தான் |