• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 66-68 (16-Jul-2017)
    36:66. நாம் நாடியிருந்தால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்; அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்?
    36:67. அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.
    36:68. மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?

    குறிப்பு:
    - மறுமை நாளின் நிகழ்வுகளும் உரையாடல்களும்
    - கட்டாயமாக கற்க வேண்டிய சூரா பெண்களுக்கு சூரா: அந்நூர் ஆண்களுக்கு சூரா: மாயிதா
    - உணவுதான் நம் அமல்களை தீர்மானிக்கும், ஈமானையே ஆட்டம் காண வைக்கும்
    - அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புவதற்கான அடையாளம் விருந்தினர்களை உபசரிப்பது
    - நாவைப்போல் உறுப்புகள் பேசும் நாள்
    - எண்ணமே வாழ்வின் அடிப்படை
    - பார்வையிலே ஆரம்பம் முதல் அனுபவிப்பு
    - நேர்வழிக்கு காரணம் - பார்வையும் கேள்வியும் சிந்தனையும்
    - பாவம் செய்த இடத்திலேயே நம் பார்வை போயிருந்தால் அல்லது நாம் சிலையாகி இருந்தால்?
    - பாவம் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு விதம்
    - நான் யார்?
    - வாலிபத்தில் நமது பார்வை மேலே நோக்கும் வயோதிகத்தில் நமது பார்வை கீழே நோக்கும்!