யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 61-62 (30-Apr-2017) 36:61. “என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.
36:62. “அவ்வாறிருந்தும், நிச்சயமாக அவன் உங்களில் மிகுதமான மக்களை வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?
குறிப்பு:
அறிவு என்றால் என்ன:
ஷைத்தானிடம் இருந்து பாதுகாப்பு பெற நாம் அறிவை பயன்படுத்த வேண்டும்.
அறிவு மற்றும் அறிவுதளங்கள் குறித்து இஸ்லாம் கூறும் விளக்கங்கள்.
நாம் பரக்கத்தை தேட வேண்டிய ஒரே இடம் திருக்குர்ஆன் மட்டும் தான்.
கல்வியை வெறுமே தெரிந்து விட்டு, அதை சிந்திக்காமல், செயல்படுத்தாமல் இருப்பதும், நமக்கு அழிவை பெற்றுத் தரும்.
தஹஜ்ஜுத் - இரவுத் தொழுகை ஒரு பொக்கிஷம்.
கஷ்டங்களை நீக்கும் பாங்கு.
காலத்தின் கட்டாயமான மழை தொழுகையும், அதில் பேண வேண்டிய வழிமுறைகளும்.
அல்லாஹ் கொடுத்தவற்றை பொருந்தி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெறுவோம்.
ஷைத்தான் வழிகெடுக்கும் முறைகள்.
இசைக்கருவிகள் - ஷைத்தானின் மிக பெரிய வழிகெடுக்கும் ஆயுதம்.
கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை மேற்கொள்வோம்.
ஷைத்தானிடம் இருந்து பாதுகாப்பை பெற்று தரும் ஆயத்துகள். |