அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 127-128 (27-Jun-2015) 2:128. எங்கள் இறைவனே! மேலும், எங்கள் இருவரையும் உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாய் முஸ்லிம்களாய் ஆக்கி வைப்பாயாக! மேலும் எங்கள் வழித்தோன்றலிலிருந்து முற்றிலும் உனக்குக் கீழ்ப்படிந்து வாழும் ஒரு சமூகத்தைத் தோற்றுவிப்பாயாக! நாங்கள் நிறைவேற்ற வேண்டிய வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காண்பிப்பாயாக! மேலும் எங்களுடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் பெரிதும் மன்னிப்பவனும் மிக்க கருணையுடையோனுமாய் இருக்கிறாய். |