இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு

 

இந்தியாவில் 60 வது சுதந்திரத்தைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயத்தின் தியாகத்தை மறந்திருந்தாலும் மன்னித்திருக்கலாம்... ஆனால் பாவிகள் திட்டமிட்டே அல்லவா மறைத்திருக்கிறார்கள்!

வெள்ளையனுக்கு வெண் சாமரம் வீசியர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள், அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாகின்ற அவலம் இங்குமட்டும் சுதத்திரத்திற்கு வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் இங்கு மட்டுமே.

கிழக்கிந்திய கம்பெனிக்கு கிஸ்தி வசூ­த்து தந்தவர்கள் நினைக்கலாம்  ஆதவனை கரங் கொண்டு மறைத்திவிடலாம் என்று, ஆனால் ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது.

(நன்றி) மறந்தவர்களுக்கு நம் சமுதாயத்தின் தியாகங்களை சற்றே நினைவூட்டுவோம்.

மாவீரன் திப்பு சுல்தான்:

''ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட சமருக்கு நின்று சாய்வதே சிறந்தது!'' என்று அந்த மாவீரன் திப்புசுல்தான் தென்னகத்தில் 5 பெரும் போர்களில் வெள்ளையர்களை படுதோல்வி அடையச் செய்து லி ஓட ஓட விரட்டினார். மே.4ம் தேதி 1799ல் ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் சூழ்ந்து கொண்டு துரோகிகளை விலை கொடுத்து வாங்கி மாவீரன் திப்புவை வெள்ளையர்கள் கொன்றார்கள். அந்த மாவீரன் இந்த நாட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இன்று மிஞ்சமிருக்க லி அவனது வாழ்க்கை வரலாற்றைக் கூட இந்தப் பாவிகள் 'இது ஒரு கற்பனைக் கதை' என்ற வரிகNள்hடு தான் தொலைக்காட்சியில் வெளியிட்டார்கள். எத்தனை பெரிய துரோகம்?

பேகம் ஹஜ்ரத் மஹல்:

டெல்லியை ஆண்ட ஹஜ்ரத் பேகம் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய முஸ்லிம் பெண்மணியாவார். அவருக்கு அன்றைய ஆட்சியிலிருந்த எந்த ஒரு இந்து மன்னனும் உதவவாததால், தன் நாட்டை இழந்து  இமயத்தின் அடிவாரக் காடுகளில் தன் பத்து வயது மகனுடன் அநாதையாய் அலைந்து, வீர மரணம் அடைந்தாள் அந்த வீரத்தாய்! இதை எப்படி மறந்தார்கர்கள்? (மறைத்தார்கள்!)

அஸ்வ குல்லா கான்:

பகத்சிங்கை அறிந்துள்ள இன்றைய சமுதாயம் அன்று அவனுடன் தூக்கி­டப்பட் மற்றொரு மாவீரன் அஸ்வ குல்லா கானை ஏன் மறந்தது... இல்லை மறைத்தது?
  
வேலூர் சிப்பாய்க் கலகம்:

சுதந்திரப் போராட்டத்தைக் கூட முஸலிம்கள் செய்தால் கலகம் என்று வரலாற்றுப் புரட்டு செய்யும் பாவிகளே, 1857 சிப்பாய்க் கலகப் புரட்சிக்கு வித்திட்ட மௌலவி அஹமது ஷாவின் தலைமையில் போராடிய சிப்பாய்களை பீரங்கி வாயில் வைத்து பிளந்து, அகழியில் வீசியவர்களே! இந்த தியாகத்தைக் கூடவா மறந்துவிட்டீர்கள்?
  
மாவீரன் கான் சாஹிப்:

மதுரையைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளையாய் இருந்தும், பின்னர் யூசுப் கான் சாஹிபாக மாறிய வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்த யூசுப் கான் சாஹிப்  தூக்கிலிடப்பட்ட பிறகும் நிம்மதியாய் உறங்க முடியாத வெள்ளையர்கள், அவனது உடலை தோண்டி எடுத்து தலைவேறு, உடல் வேறாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அடக்கினார்கள் என்றால்  எந்த அளவுக்கு வெள்ளையர்களை எதிர்த்து அந்த மாவீரன் அன்று போராடி இருப்பான் என்று சிந்தித்துப் பாருங்கள்! மதுரை சம்மட்டிபுரத்தில் அந்த மாவீரன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அவனது அடக்கஸ்தலம் இருக்க, இந்த மாவீரனை நினைவூட்ட ஒரு நடிகன் தேவைப்படுகிறான் என்றால் எத்தனை வேதனைக்குரிய விஷயம்.

மாப்பிளா மார்கள் போராட்டம்:

1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவின் திரலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி கொல்லப்பட்டாகளே! அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையில் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே இதை எப்படி மறந்தீர்கள் (மறைத்தீர்கள்!)

காந்திஜி அழைப்பு விடுத்த கள்ளுக்கடை போராட்டத்திற்கு மதுரையில் கைதான 19பேரில் 10 முஸலிம்கள் தங்களின் 13 சதவிகிதத்தையும் தாண்டி, 50 சதவிகிதத்திற்கு அதிகமாகப் பங்கு கொண்டுள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.

கப்பல் ஓட்டிய தமிழன் வா.உ.சி. லி கப்பல் வாங்கியதற்கு உதவிய தமிழன்?

அன்றைய வெள்ளையனின் கடல் ஆளுகையை எதிர்த்து சுதேசிக் கப்பல் விடுவதற்கு ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது. கப்பல் வாங்குவதற்கு அன்றைய இந்திய நாளிதழில் பாராதியார் விளம்பரம் போட்டதற்கு வந்ததோ சில நூறு ரூபாய்களும், சில அனாக்களும்தான். ஆனால் கப்பலை வாங்குவதற்கு அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய ஹாஜி பக்கீர் முஹம்மதுவை மறந்து விட்டார்களா? இல்லை வேண்டும் என்றே மறைத்துவிட்டார்களா?

காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்பு போராட்டம்

அன்றைய வெள்ளையன் ஆட்சியில் 13% இடஒதுக்கீட்டில் இருந்த முஸ்­ம் சமுதாயம்  காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. கான் சாஹிபிலிருந்து, காயிதே மில்லத் வரை 90% அதிகமானோர் தங்கள் பட்டங்கள் பதவிகளைத் துறந்தனர். அன்று பட்டங்கள் பதவிகளைத் துறக்காமல் இருந்திருந்தால், இன்று இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் அவல நிலை இருந்திருக்காதே!

இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு

இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய விடுதலைப் போரில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கூட வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய ஒரு சமுதாயம் உண்டென்றால், அது இஸ்லாமிய சமுதாயம்தான்.

வெள்ளிக் கிழமை ஜூம்மா மேடைகள் எல்லாம் வெள்ளையனுக்கு எதிராக போர்ப் பரணி பாடின.. ஜூம்மா மேடைகளில் உரமேற்றியதன் விளைவு  வீரத்துடன் இந்த சமுதாயம் வெள்ளையனை எதிர்த்துப் போராடியது. வெள்ளையனின் உடை கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்வாக்கள் அளித்தனர். வெள்ளையனின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலப்பரப்புகள் யுத்த பூமி (தாருல் ஹர்டி) என்பது போன்ற பத்வாக்கள் வழங்கப்பட்டன.


19ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்த மௌலவி காசிம் அஹ்மத் நாளோத்வி  1885ல் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்­ம்கள் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புக்களை) திரட்டி நுஸ்ரத்தூல் அஹ்ரார் (விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவி) என்ற பெயரில் நூல் ஒன்றையும் வெளியிட்டார்.

காந்திஜி நடத்திய அஹிம்சைப் போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் பட்டியலில் ஒரு பகுதி:

1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை)
2. மி.இ. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு ி தென்காசி (கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்)
3. அப்துல் ஹமீதுகான்  1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.)
4. முகமதலி  சேலம் (கள்ளுக்கடை மறியல்)
5. பி.என். அப்துல் கபீர்  தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்)
6. பண்டிட் அப்துல் மஜீத்  பளைக்குளம் (கிலாபத்)
7. கலிபுல்லாஹ்  திருச்சி (கிலாபத்)
8. நூர்மல்  சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டு, 18-1 அச்சு சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது.)
9. அப்துல் ஹமீது 
10. மௌலானா அப்துல் காதர்

1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி­ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விபரம் வருமாறு:

பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா
இராஜகிரி அப்துல்லா
இளையான்குடி கரீம் கனி
திருப்பத்தூர் அபூபக்கர்
திருப்பத்தூர் தாஜிதீன்
அத்தியூத்து அபூபக்கர்
பக்கரி பாளையம் அனுமன் கான்
சென்னை அமீர் ஹம்சா
சென்னை ஹமீது
செங்குன்றம் கனி
வண்ணாரப்பேட்டை ஹயாத்கான்
புதுவலசை இபுராஹிம்
பார்த்திபனூர் இபுராஹிம்
வனரங்குடி இபுராஹிம்
இளையான்குடி அப்துல் கபூர்
மேலூர் அப்துல் ஹமீது
சோழசக்கர நல்லூரி அப்துல் ஜப்பார்
தத்தனனூர் அப்துல் காதர்
பட்டுக்கோட்டை அப்துல் காதர்
திருப்பூர் அப்துர் ரஜாக்
காரிவிப்பட்டினம் அப்துல் மஜித்
குருவம் பள்ளி அப்துல் மஜீத்
கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு
லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்
ராம்நாடு அப்துல் வஹாப்
மானாமதுரை அப்துல் பாசித்
திரிவிடைச் சேரி அப்துல் வஹிப்
அத்தியூத்து இபுராஹிம் ô
சென்னை ஜாபர் ஹக்கிமி
சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்
திருப்பத்தூர் காதர் பாட்ஷா
புதுவலசை முஹம்மது லால் கான்
பார்த்திபனூர் கச்சி மைதீன்
தஞ்சை முஹம்மது தாவூது
அறந்தாங்கி முஹம்மதுசெரிபு
திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்
வடபழனி சென்னை முஹம்மது யூசுப்
தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி
சிவகங்கை முஹம்மது இபுராஹிம்
சென்னை முஹம்மது உமர்
மதுரை மொய்தீன் பிச்சை
அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா
திருப்பத்தூர் பீர் முஹம்மது
கும்பகோணம் ரஹ்மத்துல்லா
குடியத்தம் நஜீமுல்லாஹ்
கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு
இராமநாதபுரம் சையது கனி
பரகப்பேட்டை தாஜிதீன்
மன்னர்குடி சிக்கந்தர்
கம்பம் சிக்கந்தர்
முதுகுளத்தூர் சுல்தான்
கும்பகோணம் சுல்தான்
இராமநாதபுரம் தாஜிதீன்
 


தொகுப்பு-யூசுப் கான்

Comments from Dr.Md.Aslam,:

My maternal grand father Moulana Moulvi Syed Murtaza was a great personality in Trichy who was an active participant in Quilafath movement and there is a school in his name at Trichy. After his death the school was taken over by the Govt.and it was named as Govt.Islamia School. It was Mr.Rajagopalachary who was his great friend changed the school's name as Govt.Syed Murtaza High School. He was good friend of Pandit Jawaharlal Nehru, Sir Rajagopalachari and other great leaders. Still people remember him in the name of Bade-Hazrath. He was elected as MLA(central) un opposed from Trichy for 25 years. How come his name has been left in the list of freedom fighters. He expired in the year 1949. It is quite surprising how come his name is not in the list.This is for your kind information.




1 மான்சா மூசா: வரலாற்றின் பணக்கார `தங்க’ அரசனின் கதை!
  மூசாவின் செல்வத்தைப் பற்றிய தற்கால கணக்குகள் நினைத்துப் பாரக்க முடியாத ஒன்று. அவர் எவ்வளவு பெரிய பணக்காரர், சக்தி வாய்ந்தவர் என்பதை புரிந்து கொள்வது சாத்தியமற்றது என்கிறார்கள் நவீன வரலாற்றறிஞர்கள்.
 
2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-46: ஸெங்கியின் மறுவெற்றி
  அவற்றுள் பிரசித்தி பெற்ற ஒன்று லதாக்கியா படையெடுப்பு. மூவாயிரம் குதிரைப் படை வீரர்களுடன் சென்று சவார் நிகழ்த்திய திடீர்த் தாக்குதலில் பரங்கியர்கள் நிலைகுலைந்தனர். முஸ்லிம் படையினருக்குப் பெரும் வெற்றி! ஏழாயிரம் கைதிகள், ஆயிரக்கணக்கில் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு முஸ்லிம் படை மகிழ்ச்சியில் திளைக்க, பரங்கியர்களோ திகைத்து உடைந்து விட்டார்கள். துயரம் சூழ்ந்து அவர்கள் துக்கத்தில் மூழ்கிவிட, முஸ்லிம் பகுதிகளெங்கும் இவ்வெற்றி தலைப்புச் செய்தியாகி, மக்கள் மத்தியில் பேராரவாரம் எழுந்தது.
 
3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-44: ஸெங்கியின் மறுதொடக்கம்
  கலீஃபாவின் கூட்டணிப் படைக்கு எதிராகப் போரிட்டு, காயமடைந்து வந்த இமாதுத்தீன் ஸெங்கியையும் மற்றவர்களையும் பரோபகார உள்ளத்துடன் வரவேற்றார் நஜ்முத்தீன் ஐயூப். அவர்களது காயங்களுக்கு மருந்திட்டு, தேவையான உதவிகள் செய்து, படகுகளையும் அளித்து இமாதுத்தீன் மோஸூலுக்குத் திரும்பிச் செல்லப் பேருதவி புரிந்தார்.
 
4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-45: இமாதுத்தீன் ஸெங்கியின் முதல் வெற்றி
  ஹும்ஸை யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசித்த மஹ்மூதுக்கு எளிய தீர்வு கிடைத்தது – சென்ற அத்தியாயத்தின் இறுதியில் நமக்கு அறிமுகமான முயீனுத்தீன் உனுர். டமாஸ்கஸ் நகர் ஸெங்கியிடம் வீழாமல் தற்காத்துத் தந்த அவரைவிடச் சிறப்பாக வேறு யார் ஹும்ஸை ஸெங்கியிடமிருந்து காப்பாற்றிவிட முடியும்?
 
5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-43: இரண்டாம் பால்ட்வினின் மறைவு
  அச்சமயம் அப்பாதையில் சென்று கொண்டிருந்த பரங்கியரின் சேனாதிபதி ஒருவன் அவர் கண்ணில் பட்டுவிட்டான். அவன் தன்னோடு கொண்டு சென்றுகொண்டிருந்த வெள்ளை நிறப் போர்க் குதிரையும் அதன் தோற்றமும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. ‘ஏதோ சரியில்லையே?’ என்றது அவரது உள்ளுணர்வு.
 
6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-42: பூரித் வம்சாவளி
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-41: இமாதுத்தீன் ஸெங்கியின் அறிமுகம்
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-40: ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-39: பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக்
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-38: டெம்ப்ளர்கள், ஹாஸ்பிடலர்கள்
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-37: காழீயின் களப்பணி
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36: குருதிக் களம்
14 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
15 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு
16 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம் (ஹர்ரான்)
17 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்
18 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்
19 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்
20 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்
21 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
22 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்
23 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
24 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
25 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்
26 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை
27 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
28 வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)
29 தர்ம கற்கள் - அழகிய தர்மம்
30 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
31 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
32 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!
33 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா
34 திருநெல்வேலி வரலாறு...!
35 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
36 அந்த இரண்டணா ......
37 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
38 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
39 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
40 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15
41 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
42 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13
43 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
44 ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
45 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
46 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
47 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
48 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
49 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
50 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
51 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
52 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
53 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
54 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
55 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
56 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
57 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
58 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
59 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
60 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
61 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
62 சூஃபிக்களும் புனித போர்களும்
63 யார் தேச விரோதி?
64 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
65 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
66 விடுதலைப்போரில் வீரமங்கையர்
67 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
68 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
69 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
70 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
71 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
72 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
73 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
74 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
75 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
76 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
77 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
78 தமிழகத்தில் முஸ்லீம்கள்
79 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
80 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
81 பாடலியில் ஒரு புலி
82 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
83 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
84 முதல் சுதந்திரப் பிரகடனம்
85 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
86 காலித் பின் வலீத் (ரலி)
87 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
88 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
89 முதல் வாள்!
90 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
91 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
92 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்