இருக்கு ஆனால் இல்லை...!

 

காற்று
வெறும் காற்றுதான்!

கண்ணுக்குத்
தெரிவதில்லை!
கைகளுக்கும்
கட்டுப்படுவதில்லை!

இருக்கு
ஆனால்
இல்லை!

இல்லை
ஆனால்
இருக்கு!

காற்று
வெறும் காற்றுதான்!

நீர்
மலை ஏறுவதில்லை!
நெருப்பு
நீரில் படருவதில்லை!

ஆனால்
காற்று
நிலத்திலும்
நீரிலும்
தவழும்;
தாண்டவமாடும்!

மறைவானவனின்
குத்ரத்
மறைபடைப்பாக
காற்று!

காற்று
வெறும் காற்றுதான்!

காற்றின்
குழந்தை முகம்
தென்றலாக!
கன்னி முகம்
பருவக்காற்றாக!
கோர முகம்
புயலாக!

தலைநகரின்
ஒருநாள்
காற்றுத் தாண்டவம்
பல்லாயிரம் கோடி
இழப்பமாம்!

அரசாங்கம்
அறிக்கை வாசிக்கின்றது!
விஞ்ஞானம்
வியாக்கியானம் பேசுகிறது!
மக்களின்
மாமூல்வாழ்வு மாறுகின்றது!

இறைவன்
நாடும்வரை
காற்று
வெறும் காற்றுதான்!

பாவிகளே
காவிகளே!
பயம் கொள்ளுங்கள்
பண்பில் நில்லுங்கள்!

முஸ்லிம்களே!
முஃமின்களே!
முன்ஸப்புக்கு முந்துங்கள்
முழ இஸ்லாமியனாக
முற்படுங்கள்!

படைத்தவன்
தூரமில்லை!

மூச்சுக்காற்று
உள்போவதும்
வெளிவருவதும்
அவனாலே!

அவன் நாடினால்தான்
அது உயிர்க்காற்று!!!

இல்லையெனில்...
காற்று
வெறும் காற்றுதான்!

-- மிஸ்கீன்
(இஸ்லாமிய அறிவகம்)




1 Israel war against Gaza children explained
  More than 100 children have been killed every day since Israel started bombing the besieged Palestinian enclave on October 7.
 
2 The Bravery of Palestine
  In the soil where struggles deeply root, A people's bravery takes its route. Against injustice, their hearts remain, A flame of courage, an unyielding flame.