அகிலத்திற்கோர் அருட்கொடையாகத் தோன்றிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போதித்த சத்திய சன்மார்க்க இஸ்லாம் அரபு நாட்டில் மட்டுமின்றிக் கடல் வழியாகவும் தரை மார்க்கமாகவும் அகில உலகெங்கிலும் குறிப்பாக தென்கிழக்கு மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் வேகமாக வளர்ந்தோங்கி வேரூன்றத் துவங்கியது.
ஆசியாவின் நடுமேட்டு நிலத்திற்குத் தெற்கிலுள்ள பகுதி முழுவதும் சம்புத்தீவு அல்லது நாவலந்தீவு என்று அழைக்கப்பட்டது. நாவலந்தீவில் விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள பகுதி தட்சிணாபதம் அல்லது தென்னாடு என்றும் அதன் தென் கோடியில் தமிழர் வாழும் இடம் தமிழகம் (தமிரிக) என்றும் அழைக்கப் பெற்றன.
மிகத் தொடக்க காலத்திலிருந்தே தமிழகத்தின் பொருள் வளங்கள் தொலைதூர நாடுகளின் வணிகர்களின் கவனத்தை கவர்ந்து வந்தன. கி. பி. ஆறாவது நூற்றாண்டின் இறுதி வரை தென்னிந்தியாவின் மேற்குக்கரைக்கும் கிழக்குகரைக்கும் வியாபார நிமித்தம் பயணம் வந்த அரேபியர்களில் சிலைவணக்கக் காரர்கள் கிறிஸ்தவர்கள் ய+தர்கள் போன்றோர்கள் இருந்தனர். ஆனால் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் மத்திக்குள்ளாக அரேபியர்கள் அனைவருமே இஸ்லாத்தில் தீவிர பங்கெடுத்துக்கொண்டிருந்தனர்.
கோவளத்தில் தமிமுல் அன்ஸாரி (ரலி) அவர்களது அடக்கஸ்தலமும் தென்னாற்காடு மாவட்டம் முகம்மது பந்தரில் (பரங்கி பேட்டையில்) ஹஸரத் அபிவக்காஸ் (ரலி) அவர்களது அடக்கஸ்தலமும் இருக்கிறது. இவர்கள் நபிகள் நாயகத்தின் தோழர்கள் (ஸஹாபாக்கள்) என்ற அந்தஸ்தை பெற்றவர்கள்.
ஸஹாபாக்கள் பலரும் சமயப்பிரச்சாரத்திற்காக தங்களை அர்பணித்துக்கொண்டு உலகின் பல பாகங்களுக்கும் பயணித்தனர். ஏற்கனவே இந்தியாவோடு இருந்து வந்த வணிகத்தொடர்போடு புதிதாக மார்க்கத் தொடர்பும் சேர்ந்துக்கொன்டது.
சரக்குகளோடும் குதிரைகளோடும் வாணிபத்திற்காக வந்தவர்களும் அவர்களுக்கு ஏவல் புரிய வந்தவர்களும் இங்கேயே தங்கினர். திருமண உறவுகளை கொண்டனர். இஸ்லாமிய நெறிமுறைகளை ஏற்றுக்கொண்ட அவர்களது வாழ்வு தமிழகத்தில் தொடர்ந்தது.
கி.பி. 642-ல் மலபார் கரையிலுள்ள முசிறி துறைமுகப்பட்டிணத்தில் (இன்றைய கொடுங்காளுர்;) முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழகக்கரை நெடுகிலும் தொழுகைப் பள்ளிகள் அக்காலக் கட்டத்திலேயே எழுந்தன.
திருச்சி நகரின் நடுவில் மெயின்கார்டு கேட்டின் அருகே கோட்டை ரயில் நிலையம் � சமீபத்தில் பழுதுபட்டுக் காணப்படும் பள்ளிவாயில் கி.பி 738-ல் கட்டப்பட்டது.
இவ்வுண்மையை மனதில் இருத்தியே பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு �Discovery of India� என்ற தமது நூலில் � � ஒரு அரசியல் சக்தியாக பாரதத்திற்குள் இஸ்லாம் நுழைவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே இஸ்லாம் ஒரு மார்க்கம் என்ற ஹோதாவில் இந்நாட்டின் தென்பகுதியை அடைந்துவிட்டது� என்று எழுதியுள்ளார்.
�அல்லா என வந்து சந்தியும்
நந்தாவகை தொழும் சீர் நல்லார்�
என்று களவியற் காரிகை அகப்பொருள் இலக்கண நூலில் வருகிறது.
கி.பி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் இலக்கியங்களில் இஸ்லாம் பேசப்படுவதால் ஏழாவது நூற்றாண்டின் இறுதியிலேயே தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாயத்தினரின் வாழ்வு துவங்கப்பட்டுவிட்டதை உறுதி செய்கிறது.
மார்க்க மேதைகள்
சேர நாட்டு மன்னர் பாஸ்கர ரவிவர்மன் என்ற சேரமான் பெருமாள் நாயனார் (கி.பி. 780-834) சந்திரன் இரண்டாகப் பிளப்பது போன்று கனவு கண்டார். இதன் விளக்கத்தை அவர் அரபு வணிகர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) இறைவனின் அருளால் சந்திரனை இரண்டாக பிளந்து நிகழ்த்திய அற்புதத்தை விளக்கினர். இதனால் திருப்தியடைந்த மன்னர் இஸ்லாத்தை பற்றி மேலும் முழுமையாக தெரிந்துக் கொண்டு முஸ்லிமாக மாறினார். தனது பெயரை அப்துர் ரகுமான் சாமிரி என மாற்றிக் கொண்டார்.
ஹஜ் கடமையை நிறைவேற்ற அரேபியா சென்ற அவர் அங்கேயே மரணமடைந்தார். அன்னார் அரேபியாவில் இருந்தபோது அவரது வேண்டுகோளுக்கு இணங்க மாலிக் இப்னு தீனார் தலைமையில் இஸ்லாமிய பிரச்சாரக்குழு ஒன்று தென்னிந்தியா வந்து தீன் பணியில் ஈடுபட்டது.
நத்தர்ஷாஹ் ஒலியுல்லாஹ் (கி.பி. 969 � 1039) சிரியாவை சேர்ந்தவர்கள். செய்யது வம்சத்தை சேர்ந்த இவர்கள் மார்க்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறுதியில் திருச்சி வந்தடைந்தார். சுமார் 700 பிரச்சாரர்களை (கலந்தர்கள்) உருவாக்கி தமிழகத்தில் தீன் பணியை சிறப்பாகச் செய்தார்.
தென் மாவட்டங்களில் பாபா பக்ருத்தீன் என்ற காட்டு பாவா சாகிப் அவர்களும் மதுரையில் ஹஸரத் அலியார்ஷாஹ் ஸாஹிப் அவர்களும் இஸ்லாமியப் பணியினை இன்முகத்துடன் செய்து கொண்டிருந்தனர். இப்பெரியார்கள் ஏராளமான மக்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு காரணமாக இருந்தனர்.
இறை நேசச் செல்வர் சையித் இப்ராஹிம் மொரோக்கோவில் தோன்றி பின் இஸ்லாத்தை பரப்புவதற்காக (கி.பி. 1142 � 1207) இந்தியா வந்தார். பாண்டிய மன்னர் குலசேகரன் சார்பாக மற்றுமொரு பாண்டிய மன்னர் விக்கிரமனுடன் போரில் ஈடுபட்டார். இப்போரின் விளைவாக அரசாட்சி சையித் இப்ராஹிம் அவர்கள் கையில் வந்தது. தமிழ் நாட்டின் ஒரு பகுதியை அரசாண்ட முதல் முஸ்லிம் மன்னர் (கி.பி. 1195-1207) இவர்களே.
கி.பி. 1207-ல் வீரபாண்டியனுடன் நடந்த மற்றுமொரு போரில் ~ஹீதானார்கள். இராமனாதபுரம் ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். (மதினா நகரின் ஒரு பகுதியான �யர்புத� என்ற இடத்திலிருந்து அவர்கள் புறப்பட்டு வந்ததால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கும் �யர்புத்� என்றே பெயர் சூட்டப்பட்டது. இச்சொல் நாளடைவில் ஏர்வாடி என்று மருவி விட்டது.)
பதினாறாம் நூற்றாண்டில் நாகூர் சாகுல் ஹமீது ஒலி அவர்கள் பெருமைக்குரியப் பணியினை ஆற்றினார்கள். கல்வத்து நாயகம் அவர்களும், செய்யது முகம்மது ஆலிம் புலவர் அவர்களும் சிறப்பான பணியினை ஆற்றினார்கள். செய்கு அப்துல்காதிர் மரைக்காயர் என்று குறிப்பிடும் வள்ளல் சீதக்காதி அவர்களின் நண்பரும் கீழக்கரையில் வாழ்ந்தவருமான சேக் சதக்கத்துல்லா அப்பா அவர்களிடம் கி.பி. 1622-ல் 4000 பேர்கள் கலிமாச் சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.
சமுதாய அந்தஸ்து
அரபு நாட்டு வியாபாரிகள் சோனகர் என்று அழைக்கப்பட்டனர். (இலங்கை தமிழ் முஸ்லிம்கள் இன்றும் சோனகர் என்றே அழைக்கப்படுகிறார்கள்.)
�மார்க்கப்�; என்பது கப்பலைக் குறிக்கும் அரபுச் சொல். கப்பல் அல்லது மரக்கலத்தில் வந்தவர்கள் மரக்கலராயர் என்றாகி பின் மரைக்காயர் ஆனார்கள்.
இஸ்லாமிய பணியில் ஈடுபட்டோர் �லப்பைக்� என்ற அரபிச் சொல்லை பயன்படுத்திட அதுவே �லப்பை� என்றானது.
குதிரை வணிகத்திற்காக வந்தவர்கள் குதிரையை அடக்கியாளும் ஆற்றலுடையவர்கள் என்ற பொருளில் ராவுத்தர் ஆனார்கள்.
ராவுத்தர் என்ற சொல் மரியாதைக்குரியதாக மதிப்புடையாதாக தமிழ் மக்களால் பாவிக்கப் பட்டது. தங்களது கடவுள்களுடைய கோலத்தையே ராவுத்தர் கோலத்தில் கற்பனை செய்து மகிழ்ந்திருக்கிறார்கள் தமிழர்கள். முருகக் கடவுளையே �சூர்க் கொன்ற ராவுத்தனே� �மாமயிலேறும் ராவுத்தனே� என அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அலங்காரமும் கந்தர் கவிவெண்பாவும் வருணிக்கின்றன.
�அப்துல் ரகுமான் என்ற அரபியர் பாண்டிய மன்னனின் அரண்மனையில் பெரியதோர் அதிகாரம் வகித்திருந்ததாகவும், காயல் துறைமுகத்தில் சுங்கம் வசூலித்தாகவும், ஞா. துறைசாமிப்பிள்ளை அவர்கள் �பாண்டியர் காலம்� என்ற சொற்பொழிவுல் குறிப்பிட்டுள்ளார்கள்.
கி.பி 1276-ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் அரபு நாட்டின் கைஸ் மன்னரான மலிகுல் இஸ்லாம் ஜலாலுத்தீன் அவாகளோடு நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார் என வரலாற்று ஆசிரியர் வஸ்ஸாப் கூறுகிறார்.
கி.பி 1280-ல் குலசேகரப் பாண்டியன் ஜமாலுத்தீன் என்ற தூதுவரைச் சீன நாட்டிற்கு அனுப்பினார்.
ஜமாலுத்தீன் சகோதரர் தகியுத்தீன் அப்துல் ரகுமான் கி.பி. 1303 வரை அமைச்சராகவும் வரி வசூலிக்கும் அதிகாரியாகவும் பண்யாற்றினார். தொடர்ந்து சிராஜூத்தீனும் அவரது பேரனார் நிஜாமுத்தீனும் பதவியில் இருந்ததை கிரு~;னசாமி அய்யங்கார் தெரிவிக்கிறார்.
பாண்டிய மன்னர்களின் ஆலோசர்களாக அமைச்சர்களாக கடற்படைத் தளபதிகளாக முஸ்லிம்கள் பொறுப்பு வகித்திறுக்கிறார்கள். இந்நாட்டு மன்னர்களின் தூதுவர்களாக பல வெளிநாடுகளுக்கும் சிலர் சென்று வந்துள்ளனர். அரசாங்க வருவாயை பெருக்கும் வணிகர்களாகவும் போர் வீரர்களாகவும் செயலாற்றி வந்தார்கள்.
மாலிக்காபூர் மதுரை மீது படையெடுத்து வந்த போது பாண்டிய மன்னனின் படையில் இருபதினாயிரம் முஸ்லிம்கள் சேவையாற்றி வந்தனர் என இப்னு பதூதா என்ற யாத்ரிகரின் குறிப்பிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
கி.பி. ஏழாவது நூற்றாண்டிற்குப் பிறகு தென்னிந்திய மக்கள் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலமாக என்னென்ன நன்மைகளையும் லாபங்களையும் பெற்றார்களோ அவை அனைத்தும் அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூலமாகவே வந்தடைந்தன என்று கொள்ளலாம் என டாக்டர் தாராசந்த் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.
டில்லி மன்னர்களின் படையெடுப்பு
13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கில்ஜி வம்ச ஆட்சி காலத்தில் அலாவுத்தீன் முதன் முதலாக தென்னகத்தில் படையெடுத்தார். முதல் மாறவர்மன் காலத்தில் மாலிக்காப+ர் படையெடுத்தார். சுந்தரபாண்டியன் காலத்தில் குஸ்ருகான் படையெடுத்தார். கி.பி. 1323-ல் பராக்கிரமதேவபாண்டியன் காலத்தில் உலூகான் படையெடுத்து பாண்டிய நாட்டை கைப்பற்றினார்.
1323 முதல் 1378 வரை சுமார் 55 ஆண்டுகள் மதுரைப் பகுதியில் சுல்தான்களின் ஆட்சி நடைபெற்றது. நாயக்கர் வம்ச இரண்டாம் ஹரிஹரர்(1376-1404) காலத்தில் மதுரை சுல்தான்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது என்று அ.கி. பரந்தாமனார் �மதுரை நாயக்கர் வரலாறு� என்ற நூலில் கூறுகிறார்.
ஆட்சி பொறுப்பில் இருந்த முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக எதுவும் செய்ததாக எந்தவிதமான தடையங்களையும் யாரும் கண்டுபிடுத்துச் சொல்லவில்லை. இந்த சுல்தான்கள் ஆட்சிக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மதுரையிலும் தமிழ் நாட்டின் இதர பகுதிகளிலும் முஸ்லிம் பொது மக்கள் வாழ்ந்து தான் வந்தார்கள்.
இஸ்லாமிய மார்க்க அறிவு பெற்ற பெரியார்களாலும் ஒலிமார்களாலும் மக்கள் மத்தியில் இஸ்லாம் அறிமுகமாகி பரவியதே தவிர ஆட்சி பொறுப்பில் இருந்தவர்கள் மூலமாக பரவ வில்லை.
இஸ்லாமியரின் ஆட்சி அதிகாரங்கள் தமிழகத்தில் இல்லாத காலங்களிpலும் �ஒன்றே குலம் ஒருவனே தேவன� �யாதும் ஊரெ யாவரும் கேளிh� என்ற தமிழர் தத்துவங்கள் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் பொதுவாக இருந்தமையால் தமிழகம் அன்போடு இஸ்லாத்தை அணைத்துக்கொண்டது. அல்லாஹ் என்றால் எல்லாம் மறந்திடும் இறை நேசச் செல்வர்கள் மூலம் இஸ்லாம் மார்க்கம் இன்பத் தழிழகத்தில் வேகமாக வளர்ந்தது.
தொகுப்பு: S. பீர் முஹம்மது. (நெல்லை ஏர்வாடி)
ஆதாரம் : விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள் - செ.திவான்.
தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு - ஏ.கே. ரிபாயி.
© TamilIslamicAudio.com