உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அனஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஆதமுடைய மகனுக்கு தங்கத்தில் ஒரு ஒடயிருந்தால் இரு ஓடை வேண்டும் என்று விரும்புவான். அவனது வாயில் மண்ணறையின் மண்னைத்தவிர வேறு ஒன்றும் நிரப்பாது. தவ்பா செய்பவனின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
மற்றொரு ஹதீஸில் இவ்வாறு வருகிறது ஒரு ஓடை நிறைய பொருள் இருந்தால் அது போன்று இன்னொரு ஓடை கிடைக்க வேண்டும் என்று விரும்புவான்.
மனிதனின் மனோநிலைக் குறித்து இந்த ஹதீஸ்கள் மிக அற்புதமாக விளக்குகிறது. இந்த ஹதீஸ்களின் வார்த்தைகள் தான் வேறுபடுகிறதே தவிர அதன் கருத்துக்களின் எள்ளளவும் எவ்விதமான மாற்றமும் இல்லை.
பொதுவாக மனிதன் பொருளாதார விசயத்தில் பேராசை கொள்வது இயற்கையே, இன்னும் வேண்டும் வேண்டும் என்ற அவனுடைய ஆவல்கள் அவனின் மரணம் வரை தொடர்கதைத்தான். உண்மையில் மனிதன் நிம்மதி வேண்டியும், இவ்வுலகில் வாழ்க்கையில் நிரந்தரம் வேண்டியும் தான் மனிதன் பொருள் சேர்ப்பதை ஆசிக்கிறான்.
குர் ஆனின் கூற்றுப்படி � மனிதன் பொருளாதாரத்தை சேர்த்துவைக்கிறான், இன்னும் எண்ணி எண்ணி அதன் எண்ணிக்கையை பார்த்துக்கொள்கிறான். இன்னும் அவன் மனோநிலை இப்படி இருக்கிறது இந்த பொருளாதாரம் அவனை எவ்வித (கவலை, குறை, நோய்) இல்லாம் இவ்வுலகில் நிம்மதியாக வாழவைத்துவிடும் என்று.
அந்தோ அவன் நினைத்து போன்று இல்லை என்று தொடர்கிறது அந்த குர்ஆனிய வசனம்...
உண்மையில் நிறைய சேர்க்க வேண்டும் என்ற ஆசையோ அல்லது நிறைய பொருளை சேர்ந்து வைப்பதோ மனிதனுக்கு ஒரு காலமும் நிம்மதியை பெற்றுத்தராது. உண்மையான இன்பமும், நிம்மதியும் செலவழிப்பது கொண்டுதான் இருக்கிறது என்று குர் ஆனும் நபிவழியும் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.
உண்மையில் இழப்புகள் தான் மனிதனை செவ்வைப்படுத்துகின்றன.
சில நீர் துளிகளின் இழப்புதானே மனிதனை உருவாக்குகிறது
கருவறையின் இழப்புதானே ஒரு மனித உயிரை உலகிற்க்கு கொடுத்தது
அறியாமையின் இழப்புதானே ஒரு மனிதனுக்கு அறிவைக்கொடுத்து
வருடங்களின் இழப்புதானே வயதைக்கொடுத்தது
உடலின் உழைப்பு என்ற இழப்புதானே மனிதனுக்கு பொருளைக்கொடுக்கிறது.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஹஸனுல் பஸரி என்ற ஒரு அறிஞர் பொருளாதாரம் பற்றி கூறிய கூற்று போற்ற தகுந்தது.
Imam Hasan Al-Basri, a renowned scholar of the first century of Islamic history, has explained the nature of money in a beautiful sentence. Money is such a companion of yours that it does not benefit you, unless it leaves you.
பொருளாதாரம் என்பது உங்களின் அழகிய தோழன் அது உங்களுக்கு பிரையோஜம் தராது அது உங்களை விட்டு பிரியாத வரை.
உங்களின் பொருளாதார இழப்புகள் தானே உங்களின் அழகிய வீடுகளாய், மதிப்பு மிக்க கார்களாய், உங்களின் மேனி தழுவும் ஆடைகளாய்........... இத்தியாதி இத்தியாதி
இழக்க வேண்டிய பொருட்கள் இழக்க வேண்டிய நேரத்தில் முடியாது என்று கூறினால் பின் அனைத்தையும் அல்லவா இழக்க வேண்டி வரும்.
நான் காலையில் குடித்த ஜூஸ்வும், சிற்றுண்டியும் தான் எனக்கு சக்தியை கொடுத்தது என்பதற்காக நான் சிறுநீர், மலம் கழிக்கமாட்டேன் அவற்றை என் வயிற்றிலே பாதுகாத்துவைப்பேன் என்று கூறினால். பாதுகாகவேண்டிய நம் உயிறையல்லவா இழக்கவேண்டி வரும்.
ஒரு ஹதீஸின் கருத்து இப்படி எடுத்துரைக்கிறது. நீங்கள் சேர்த்துவைப்பதேல்லாம் உங்கள் பொருள் இல்லை, இறைபாதையில் நீங்கள் இழந்தவைத்தான் உங்கள் சேமிப்பாக நாளை நிற்கும்.
உண்மையில் நீங்கள் சேமிப்பாக நினைத்தவை எல்லாம் உங்களின் வாரிஸ்களின் சொத்தாக ஆகிப்போகும்.�
இழக்க வேண்டியவைகளை அந்தந்த நேரங்களில் இழப்பதுதான் வாழ்க்கையை தேடித்தரும். இழந்து விட்டோம் என்று வருந்த வேண்டியது இல்லை அதனால் தான் வாழ்கிறோம்.
அப்படியானால் நான் எப்படித்தான் செலவழிப்பது, எனக்கொன்று நான் செலவு செய்வது கூடாதா? அல்லது எவ்வளவு தான் செய்யலாம் என்ற கேள்வி எழும்
கடந்த வார எங்கள் கல்லூரியில் ஒரு தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. அதன் தலைப்பு ( Quran and Science, A national level seminar ) அதில் இந்த ஹதீஸ் விளக்கத்தோடு தொடர்புடையது சில விஷயங்கள் பகிரப்பட்டது .
இன்ஷா அல்லாஹ் தொடரலாம் நம் பயணத்தை அவ்விளக்கங்களோடு............
தேசிய அளவிலான கருத்தரங்கம்
கடந்த 20.12.2011 அன்று எங்கள் கல்லூரியில் (ஜமால் முஹம்மது கல்லூரியில் , திருச்சி) ஒரு தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் குர் ஆனும் அறிவியலும் ( Quran and Science - A National Level Seminar்) என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடைபெற்றது. அகில இந்திய அளவில் பல்வேறு அறிஞர்கள் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அதில் 40 மேற்பட்ட ஆய்வறிக்கைகள் ஆங்கலத்திலும், அரபி மொழியிலும் சமர்ப்பிக்கப்பட்டன. பல்வேறுபட்ட தலைப்புகளில் அருமையான இன்னும் ஆக்கப்பூர்வ செய்திகள் பரிமாறப்பட்டன.
சிறப்பு அழைப்பாளர்களாக Dr.P. நிசார் அஹ்மது ( முன்னாள் துறைத்தலைவர், அரபி , உருது, பாரிஸி மொழித்துறை - சென்னை பல்கலைக்கழகம்), மற்றும் எழுத்தாளர். ரஹ்மத் ராஜகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதில் சொல்லப்பட்ட கருத்துகள் சில நாம் முந்திய ஹதீஸுக்கு தொடர்புடையது என்பதால் இங்கு பதிவுசெய்ய ஆசைப்படுகிறேன்.
குர் ஆனும் உளவியலும் ( Quran and Psychology) என்ற தலைப்பில் ஒரு ஆய்வேடு வாசிக்கப்பட்டது.
அதன் சாரத்தை இங்கு தருவது மிகச்சரியாக இருக்கும்
இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (3:133)
இந்த வசனத்தில் குறிப்பிடப்படுள்ள பயபக்தியுடையோர் என்றால் யார் என்பதை பற்றி அதன் அடுத்து வரும் வசனம் இப்படி தெளிவுபடுத்துகிறது.
(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.(3:134)
நாம் நீண்ட நாளாக தேடிக்கொண்டிருக்கிற முத்தகீன் என்ற நிலைக்கு இந்த குர் ஆனிய வசனம் இப்படி விளக்கம் கொடுக்கிறது. மேலே குறிப்பிட பட்ட வசனத்தில் மூன்று வித உளவியல் ( மனோநிலை) நிலைக்குறித்து இவ்வசனம் பேசுகிறது.
1. பொருளாதாரத்தை இறைபாதையில் செலவிடுதல் :
இன்றைய அறிவியல் யுகம் இது குறித்து பேசும் போது, ஏழைகளுக்கு நம்மால் இயன்ற கொடுத்து உதவிசெய்யும் போது மனிதன் ஒருவித நிம்மதி நிலையை தன்னுல் அடைகிறான் என்று கூறுகிறது.
இந்த செலவிடுதல் என்பதையே இந்த வசனம் இரு நிலையாக கூறுகிறது,
நாம் வசதியாக இருக்கிற நிலையில் அடுத்தவர்களுக்கு கொடுப்போம் என்பது அனைவரும் அறிந்த செய்தி. அது என்ன ஏழ்மைநிலையில் கொடுப்பது.
இங்கு தான் இறைவனின் வார்த்தையின் ஆழத்தைக்கண்டு வியந்து நிற்கிறான் மனிதன் .
பள்ளிவாசலுக்கும், மதரஸாவிற்கும் சில லட்சங்கள் கொடுப்பது பற்றி இவ்வசனம் பேசவில்லை, மாறாக கொடுத்தல் என்ற மனோநிலை குறித்து பேசுகிறது.
சதாரணமாக நாம் பார்கிறோம், அடுத்தவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்ற மனோநிலையில் உள்ளவர்கள் இருந்தாலும் கொடுப்பார்கள் அல்லது தங்களிடம் எது உள்ளதோ அதைக்கொடுப்பார்கள்.சஹாபாக்களைக் குறித்து இறைமறை இப்படி பேசுகிறது.
தங்களுக்கு தேவையிருந்த போது தங்களைவிட மற்றவர்களை உதவி பொருவதற்கு தகுதியானவர்களாக நினைத்து தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள் (59:9)
அதனால் தான் அன்று சுற்றிய செல்லப்படும் ஆட்டுத்தலை வரலாறு இன்று வரை நம்மிடையே சுற்றிக்கொண்டுள்ளது.
இன்னும் இதில் சொல்லப்பட்ட மூன்று செய்திகளும் மனோநிலைக்குறித்தே பேசுகின்றன.
ஆகையால் இங்கு அபரிமிதமாக கொடுக்கவேண்டும் என்பதல்ல ஆனால் கொடுக்கிற மனோநிலை மட்டும் வளர்க்கப்படவேண்டியது என்பது மட்டும் மறுக்கவியலாத உண்மை.
அது மட்டும் இருந்து விட்டால் நாம் எல்லா நிலையிலும் கொடுப்பவர்களாக இருப்போம்.
இங்கு ஒரு விசயம் அவசியம் சுட்டிக்காட்டப்படவேண்டும். எப்படி கொடுக்கவேண்டும் ( செலவழிக்கவேண்டும்) ?
இதுகுறித்து குர் ஆன் மூன்று வித நிலைககூறுகிறது :1. தனக்காக செலவழித்தல் : இதற்காக தான் இன்று மனிதன் பொருளை ஓடி ஓடி சேர்க்கிறான். தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் செலவழிக்கிறன விஷயத்தில் இஸ்லாம் நடுநிலை பேண அறிவுறுத்துகிறது.
ஆடம்பரம், அளவிற்கு மீறுபவர்கள் விஷயத்தில் இறைமறை � ஆடம்பரச்செலவு செய்பவர்கள் ஷைத்தானின் சகோதர்கள் என்று கூறிப்படுகிறது.2. சதக்கா: ஏழை, எளியவர்களுக்கு கொடுக்கும் தான விஷயத்தில் இறைமறையின் கூற்று: ஏழைக்களுக்கொன்று தன் வருமானத்தில் ஒரு பகுதியை உணர்வர் என்று குறிப்பிடுகிறது.
ஒரு ஹதீஸில் : உன் வாரிஸ்களை ஏழைகளாக அவர்கள் அடுத்தவர்களின் கையேந்து நிலையில் நீ அவர்களை விட்டுச்செல்வதைவிட அவர்களை பணக்காரர்களாக விட்டுச்செல்வதே மேல் என்று
தன் சொத்து அனைத்தையும் சதக்கா செய்யவந்த ஸஹாபியிடம் நபி பொருமான் சொன்னவார்த்தை நினைவில் நிறுத்தவேண்டிய ஒன்று.3. இறைபாதை: அல்லாஹ்வின் பாதை என்று வருகிற போது முழு சொத்துக்களையும் கொடுத்தாலும் தவறில்லை என்று நபித்தோழர் அபூபக்கர் அவர்கள் ஒரு போர் சந்தர்பத்தில் தன் முழு சொத்தையும் கொடுத்த வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
2. கோபத்தை அடக்கிக்கொள்வார்கள்:
கோபம் கொள்வதால் என்னென்ன நோய்கள் இன்று உலகில் பவனிவருகின்றன என்பது உங்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியது இல்லை.
இதை முபஸ்ஸிரின்கள் விளக்கும் போது, கோபத்தை அடக்குவது என்பது கொண்டு - கோபப்படுவதற்க்கு முழுமையான வாய்ப்பு இருந்தும் கோபப்படாமல் இருப்பது என்று கூறுகின்றனர்.
கோபப்பட்டாலும் வேலை நடக்காது என்ற இடத்தில் நான் மிகவும் பொருமைசாலி என்று நம்மை நாமே பிற்றிக்கொள்வதற்கு அல்ல. மாறாக அவர் கோபப்பட்டு முழுமையாக பழிவாங்குவதற்கு வாய்ப்பிருந்தும் செய்யாமல் இருப்பது,
3. மன்னித்தல்:
கோபப்படுதல் என்பது மனிதனின் ஒரு உணர்வு, பொதுவாக நாம் மனித உணர்வுகளை அவ்வளவு எளிதில் எடுத்து எறிந்து விட முடியாது. ஆனால் ஒரு உணர்வு நிலையை இன்னொரு நிலையாக மாற்றிக்கொள்ளலாம்.
இன்றைய அறிவியல் கூறுகிறது, கோபத்தை அடக்கக்கூடாது அதை வெளிப்படுத்திவிடவேண்டும். அவற்றை அடக்கினால் மனிதன் இதயம் சிதறிவிடும். ஆனால் இறைமறையின் மருத்துவமுறையை கொஞ்சம் பாருங்களேன்.
அப்பா, உன்னக்கு தாங்க முடியாத கோபத்தை ஏற்படுத்திவிட்டான அவனை மன்னித்துவிடு.
கோபத்தை இதயத்தில் இட்டு பூட்டினால் தான் அது இதயத்தை உடைக்கும். மாறாக, மன்னிப்பு என்ற ஆயுதத்தை அவன் பயன்படுத்தும் போது அதுவே இதயத்திற்கு நிம்மதி தரும் பொருளாக, இதயத்தை காக்கும் அரணாக ஆகிவிடுகிறது.
எத்துணை அற்புதமான இறைவனின் வார்த்தை அன்றோ இது.
யா அல்லாஹ உன் வார்த்தையின் அற்புதங்களை எங்கள் கண்டு, அனுபவித்து , சுவைக்கிற ஒரு அதி உன்னதமான சந்தற்பத்தை எங்கள் அனைவரின் வாழ்விலும் தருவாயாக. ஆமீன்
- பேரா. ஹஸனீ
1 | ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரிந்துரை | |
அல்லாஹுதஆலாவுக்கு இணைவைக்காத நிலைவில் மரணித்தவருக்கு என்னுடைய பரிந்துரை உண்டு.'' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அவ்ஃப் இப்னு மாலிகுல் அஷ்ஜஇய்யீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். | ||
2 | ஒற்றைச்செறுப்பு | |
ஒரு முஸ்லிமுடைய வாழ்வில் ரோல் மாடலாக நபி (ஸல்) தவிர வேறு ஒரு மனிதர் நிச்சயமாக இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது, மற்ற யாரெல்லாம் உலகாதாய நோக்கத்திற்கு மற்றவர்களை ரோல் மாடலாக்கிக்கொள்கிறார்களோ அவர்கள் அந்தந்த துறையில் மட்டும் தான் சிறப்புற்றிருப்பார்கள் ஆனால், நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஆன்மிகத்திலிருந்து அறிவியல் வரையும் சரித்திரத்திலிருந்து சமையலறை வரை வழிகாட்டிய ஒரே தலைவர் நபியவர்கள். | ||
3 | திரைகள் விலகட்டும் | |
“முஃமின் உடைய நிலை ஆச்சிரியமானது. அவனுடைய எல்லா நிலைகளும் அவனுக்கு நன்மையே, இந்த நிலை முஃமினைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனுக்கு சந்தோஷம் ஏற்பட்டால் அவன் நன்றி செலுத்துகிறான் அது நன்மையாகி விடுகிறது. துன்பம் ஏற்பட்டால் பொறுமை கொள்கிறான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகிறது" | ||
4 | உம்மு ஸலமா (ரலி)யும் ஆறாதரணங்களின் அற்புத அன்பளிப்பும் | |
உயிருக்குயிரான உயிரினும் மேலான சாதிகுல் அமீன் சத்தியத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக அன்னை உம்மு ஸலமா அவர்கள் அறிவிக்கிறார்கள் எந்த ஒரு அடியானும் அவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் உடன் அவர் கூறட்டடும் இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன், பின்பு அல்லாஹும் ஆஜிர்னி பி(F) முசிபத்தி வஃக்லுப்லி ஹைரன் மின்ஹா என்று கூறட்டடும், அவ்வாறு கூறினால் அல்லாஹ் அந்த சோதனையிலிருந்து அவரைக்காப்பான் இன்னும் அவருக்கு சிறந்த பகரத்தை தருவான். (முஸ்லிம்) | ||
5 | நன்மை தீமையும் அதன் அளவுகோலும் | |
உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நான் கேட்டேன் நன்மை பற்றியும், பாவம் பற்றியும் எனக்கு சொல்லுங்கள் என்று, அதற்கு நபிபெருமான் அவர்கள் கூறினார்கள் : நன்மை என்றால் நற்குணம் ஆகும். பாவம் என்றால் ஒன்றை செய்ய உனது மனம் குறுகுறுப்பதும், மக்கள் அதை அறிவதை நீ வெறுப்பதும் ஆகும் என்று நபித்தோழர் நவாஸ் பின் சம்ஆன் அவர்கள் அறிவிக்கிறார்கள். | ||
6 | வலிபோக்கும் ஆன்மீக வழிகள் | |
7 | முஜாஹிர்களும் மன்னிப்பும் | |
8 | நன்மை தீமையும் அதன் அளவுகோலும் | |
9 | பயணியே சற்று நில் | |
10 | அக்கம் பக்கம் / அண்டை வீட்டார் | |
11 | என் கண்ணாடி எங்கே? | |
12 | நன்மைக்கு வழிகாட்டினால் | |
13 | பொறாமைக்குரியோர் .... | |
14 | நபியின் மீது பிரியம் | |
15 | அல்லாஹ்வின் பிரதிநிதி குழுவினர் | |
16 | ஈமானின் கிளைகள் | |
17 | வளைகுடாவில் வசிப்பவரின் இந்தியப்பெருநாள் - மார்க்க சட்டம் | |
18 | நற்செயல் எது? | |
19 | பட்டாடை | |
20 | நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்பவர்... | |
21 | பரிபூரணமான முஸ்லிம் | |
22 | பரிபூரண இறைநம்பிக்கை - ஈமான் | |
23 | சுவர்க்கத்தின் சாவி | |
24 | மக்களில் சிறந்தவர் | |
25 | மறுமை | |
26 | மறைவானவற்றை நம்புவது | |
27 | அழகிய துஆ |
© TamilIslamicAudio.com