Tamil Islamic Media ::: PRINT
சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!

 

நபிகள் நாயகம் [ஸல்]அவர்கள் தன்னுடைய மகள் பாத்திமா [ரலி] அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அன்னை பாத்திமா [ரலி] மிகவும் அவலோடு சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண் யார் என்று கேட்கிறார் பாத்திமா [ரலி] அவர்கள் கேட்டவுடன்.


நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் சிரித்து விட்டு எனது அருமை மகளே சொர்க்கத்தின் தலைவி நீ தான். ஆனால் உனக்கு முன்னால் விறகு வெட்டியின் மனைவி ஒருவர் சொர்க்கத்தின் உள்ளே முதல் ஆளாக நுழைவார் என்று கூறினார்கள்.


சொர்க்கத்தின் உள்ளே நுழைவது விறகு வெட்டியின் மனைவியா..? யார் அவர்
என்று மிகுந்த ஆவலோடு கேட்கிறார். நபிகள் நாயகம் [ஸல்] கூறினார்கள்..
உனது வீட்டுக்கு அருகாமையில் தான் அவருடைய வீடு இருக்கிறது என்று
கூறினார்.

அன்னை பாத்திமா நாயகிக்கு ஆவல் அதிகரித்து அப்படி என்ன கூடுதல் தகுதி
இருக்கிறது என்பதை அறிய அவரைச் சந்திப்பதற்காக தன்னுடைய கணவர் அலி
[ரலி] அவர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு விறகு வெட்டியின் வீட்டுக்கு சொன்று கதவை தட்டுகிறார்.


யார் அது என்று ஒரு பெண்மணின் குரல் கேட்கிறது. நான் தான் நபியின் மகள்
பாத்திமா வந்துள்ளேன் தங்களிடம் பேசுவதற்காக வந்துள்ளேன் என்று
பாத்திமா [ரலி] கூறுகிரார். உலகமே திரும்பி பார்க்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியத்தின் தலைவரான நபிகள் நாயகத்தின் மகள் ஒரு ஏழையின் வீட்டு வாசலில் நின்று கொண்டு நான் தான் பாத்திமா என்று கூறிய அந்த நேரத்திலும் அந்த வீட்டின் கதவு திறக்கவில்லை என்னுடைய கணவர் இல்லாத நேரத்தில் கதவு திறக்க அனுமதி இல்லை என்று விறகு வெட்டியின் மனைவி கூறுகின்றார்.


மேலும் அல்லாஹ்வின் தூதரின் மகளை க் காண்பதற்கு எனக்கும் ஆசைதான்,
ஆனால் என்னுடைய கணவரின் அனுமதி இல்லாமல் கதவு திறப்பதற்கு எனக்கு
அனுமதி இல்லை என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் அந்த பெண்மணி கூறுகையில், நாளை நீங்கள் வருவதாக இருந்தால் என்னுடைய கணவரிடம் அனுமதி பெற்று வைக்கிறேன் என்று அந்த பெண்மணி கூறினார்.

அதன் அடிப்படையில் அன்னை பாத்திமா [ரலி] இரண்டவது நாளாக தன்னுடைய புதல்வர்கள் ஹசன்[ரலி] ,ஹுசைன்[ரலி] ஆகியோரை அழைத்து சொல்கிறார்.


முதல் நாளை போன்று கதவை தட்டுகிறார் முதல் நாளைப் போல யாரது என்று
பெண்ணின் குரல் கேட்கிறது. நான் தான் நபியின் மகள் பாத்திமா வந்துள்ளேன் என்னுடன் என்னுடைய புதல்வர்கள் இருவரும் வந்துள்ளனர் என்று பாதிமா [ரலி] கூருகிறார். இரண்டாவது  நாளும் கதவு திறக்கப்படவில்லை நாயகி
என்னை மன்னிக்க வேண்டும் நீங்கள் வருவதற்கு மட்டும்தான் அனுமதி பெற்றேன்., தங்களுடைய புதல்வர்கள் உள்ளே வர அனுமதி இல்லை. நாயகியை மறுத்தமைக்கு என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். நான்
சொல்லும் வார்த்தைகளை தாங்கள் தயவு செய்து சிந்திக்க வேண்டும் என்று
அந்த பெண்மணி கூறுகிறார்.


முன்றாவது நாளாக புதல்வர்களை விட்டு மீண்டும் அதே வீட்டுக்கு அன்னை பாத்திமா [ரலி] செல்கிறார் மூன்றாவது நாளும்  தட்டுகிறார், யார்? என்று அதேபோல குரல் கேட்கிறது. நான் தான் நபியின் மகள் பாத்திமா வந்துள்ளேன் என்று அன்னை கூறியவுடன் கதவு திறக்கபடுகிறது, என்னுடைய கணவரிடம் உங்களுடைய வருகை குறித்து அனுமதி கேட்டேன். பெருமானாரின் குடும்பத்தினர்  யார் வந்தாலும் எவ்வித தடையும் இல்லை என்று கணவர் கூறியதாக அந்த பெண்மணி கூறினார். அதன் பிறகு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் அஸர் தொழுகை வருகிறது, இருவரும் தொழுகிறார்கள். தொழுகை முடித்து அன்னை பாத்திமா [ரலி] ஓரமாக அமர்ந்து
கொள்கிறார் ஆனால் அந்த பெண்மணியோ யா அல்லாஹ் தன்னுடைய சேவை தன்னுடைய கணவனுக்கு  மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவருக்கு ஆயுள் பலம், தேக நலம் அளித்திட வேண்டும் என்று கணவருக்காக கண்ணீர் மல்க துஆ செய்கிறார்.

அங்கிருந்து ஸலாம் சொல்லிவிட்டு அன்னை பாத்திமா அங்கிருந்து  விடைபெற்று மறுநாள் தன்னுடைய தந்தையிடம் நடந்தவைகளை சொல்லிவிட்டு அல்லாஹ்வை வணங்காமல் வேறு எதுவும்  வணங்க கட்டளை இருந்தால் இனிதான கணவரை வணங்குவதற்கு அனுமதி பெறுவேன் என்று கூறுகிறார்.


கணவனின் உடமைகளை கவனமாக காத்து கொள்பவள், கணவனின் நம்பிக்கைக்கு ப் பாத்திரமாய் நடந்து கொள்பவள், கணவனின் குணமறிந்து கனிவு கொண்டு கடமை செய்பவள், கணவனின் கால் அடியில் காலமெல்லாம் சேவை செய்பவள், கணவனின் ஆணையின்றி வீட்டில் பிறரைச் சேர்த்திடாதவள், கணவனின் எதிரில் கையை  தரக்குறைவாய் நீட்டிடாதவள். நாளை சொர்க்கத்தில் நல்ல இடத்தை பெற்றுக் கொள்வாள் என்றும் நரகத்திலிருந்தும் தப்பி கொள்வாள்.


எனது அருமை மகள் பாத்திமாவே.. ஒட்டகத்தில் நீ வரும்போது விறகு வெட்டியின் மனைவி ஒட்டகத்தின் கயிறை கையிலே பிடித்தவாறு
முதல் ஆளாய் சொர்க்கத்தின் உள்ளே நுழைவார், கண்ணான என் மகளே
அடுத்தபடி நீ நுழைவாய். என்று நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறினார்கள்

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.